மூதூர் பிரதேச செயலாளர் பிரிவு
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
மூதூர் பிரதேச செயலாளர் பிரிவு | |
---|---|
நாடு | இலங்கை |
மாகாணம் | கிழக்கு மாகாணம் |
மாவட்டம் | திருகோணமலை மாவட்டம் |
மக்கள்தொகை (2012) | |
• மொத்தம் | 56,379 |
நேர வலயம் | ஒசநே+5:30 (இலங்கை நியம நேரம்) |
மூதூர் பிரதேச செயலாளர் பிரிவு திருகோணமலை மாவட்டத்தில் உள்ள 11 பிரதேச செயலாளர் பிரிவுகளுள் ஒன்று. இப்பிரதேச செயலாளர் பிரிவின் வடக்கு எல்லையில் திருகோணமலை குடாவும், மேற்கு எல்லையை அண்டி கிண்ணியா, சேருவிலை ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளும், கிழக்கில் இந்துப் பெருங்கடலும், தெற்கில் சேருவிலை பிரதேச செயலாளர் பிரிவும் அமைந்துள்ளன. 195 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட இந்தப் பிரதேச செயலாளர் பிரிவில் 42 கிராம அலுவலர் பிரிவுகள் உள்ளன.
2012 ஆம் ஆண்டின் மக்கள்தொகை மதிப்பீட்டின்படி, மொத்த மக்கள்தொகை 56,379 ஆகும். பெரும்பான்மை முசுலிம்களைக் கொண்ட இப்பிரிவில், 34,984 முசுலிம்களும், 20,935 இலங்கைத் தமிழரும், 444 சிங்களவரும், 4 இந்திய வம்சாவளித் தமிழரும் வாழ்கின்றனர். திருகோணமலை மாவட்டத்தில் கூடிய மக்கள் அடர்த்தி கொண்ட பிரதேச செயலாளர் பிரிவுகளுள் ஒன்றான இப்பிரிவின் மக்கள் அடர்த்தி சதுர கிலோமீட்டருக்கு 289 பேர்.