காலடி (மலப்புறம் மாவட்டம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

காலடி (Kalady, Malappuram) என்பது கேரள மாநிலம், மலப்புறம் மாவட்டம், பொன்னானி வட்டத்தில், எடப்பாள் அருகே உள்ள ஒரு சிற்றூர் ஆகும். காலடி கிராம் ஒரு ஊராட்சியும் ஆகும்.

போக்குவரத்து[தொகு]

காலடி கிராமம் குட்டிப்புரம் நகரம் வழியாக இந்தியாவின் பிற பகுதிகளுடன் இணைகப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலை எண்.66 எடப்பாள் வழியாக செல்கிறது. இச்சாலையின் வடக்கு பகுதி கோவா மற்றும் மும்பையுடன் இணைகிறது. தெற்கு பகுதி கொச்சி மற்றும் திருவனந்தபுரத்தை இணைக்கிறது. தேசிய நெடுஞ்சாலை எண்.966 பாலக்காடு மற்றும் கோயம்புத்தூரை இணைக்கிறது. அருகிலுள்ள வானூர்தி நிலையம் கோழிக்கோடு பன்னாட்டு வானூர்தி நிலையம் ஆகும். அருகிலுள்ள பெரிய தொடருந்து நிலையம் குட்டிப்புரத்தில் உள்ளது.

மேற்கோள்கள்[தொகு]