காசிமேடு

ஆள்கூறுகள்: 13°07′30.4″N 80°17′43.8″E / 13.125111°N 80.295500°E / 13.125111; 80.295500
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காசிமேடு
Kasimedu

காசிமாநகர்
புறநகர்ப் பகுதி
காசிமேடு Kasimedu is located in தமிழ் நாடு
காசிமேடு Kasimedu
காசிமேடு
Kasimedu
காசிமேடு (சென்னை)
ஆள்கூறுகள்: 13°07′30.4″N 80°17′43.8″E / 13.125111°N 80.295500°E / 13.125111; 80.295500
நாடு இந்தியா
மாநிலம்Tamil Nadu தமிழ்நாடு
மாவட்டம்சென்னை மாவட்டம்
ஏற்றம்31 m (102 ft)
மொழிகள்
 • அலுவல்தமிழ், ஆங்கிலம்
 • பேச்சுதமிழ், ஆங்கிலம்
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)
தொலைபேசி குறியீடு+9144xxxxxxxx
மாநகராட்சிபெருநகர சென்னை மாநகராட்சி
இணையதளம்https://chennaicorporation.gov.in

காசிமேடு (Kasimedu) என்பது இந்தியா தீபகற்பத்தின் தமிழ்நாடு மாநிலத்தில் சென்னை மாவட்டத்திலுள்ள ராயபுரம் புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ளது. சென்னையில் உணவு மீன்கள் விற்பனையாகும் இடங்களில் காசிமேடு பிரபலமானது.[1] குறைந்த விலை மற்றும் விதவிதமான மீன்களின் வரத்து இதற்கான காரணம். ஏலம் விடப்படும் மீன்களை வாங்க, மொத்த வியாபாரிகள், சில்லறை வணிகர்கள், பொதுமக்கள் ஆகியோர் அதிகமாக வந்து செல்லுகின்றனர்.[2] காசிமேடு, சென்னைக் கடற்கரை தொடருந்து நிலையத்திலிருந்து சுமார் ஐந்து கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது. ஒருநாளைக்கு சுமார் இருநூறு டன் மீன்கள் காசிமேட்டுக்கு கொண்டு வரப்படுகின்றன.[3] 2010 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டத்தின் கீழ், காசிமேடு பகுதியிலும் சுத்திகரிப்பு நிலையம் ஒன்று அமைக்கப்பட்டு, கடல்நீர் சுத்திகரிக்கப்பட்டு விநியோகம் செய்யப்படுகிறது.[4] சென்னையின் துறைமுகக் கட்டுமானங்கள் விளைவாக, காசிமேடு பகுதியில் கடல் அரிப்புகள் ஏற்படுகின்றன.[5] துறைமுகக் கட்டுமானங்கள் காரணமாக வடக்கு நோக்கி நகரும் நீரோட்டங்கள் தடுக்கப்படுவதால், நீரோட்டங்களின் திசை மாறி, பின் விளைவுகளால், காசிமேடு பகுதியில் சுற்றி கடல் அரிப்புகளை ஏற்படுத்துகின்றன.

அமைவிடம்[தொகு]

கடல் மட்டத்திலிருந்து சுமார் 31 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள காசிமேடு ஊரின் புவியியல் ஆள்கூறுகள் 13°07'30.4"N 80°17'43.8"E (அதாவது, 13.125100°N 80.295500°E) ஆகும்.

காசிமேடு மீன் சந்தை[தொகு]

காசிமேட்டில் மீன் சந்தை ஒன்று உள்ளது. சென்னையின் மீன் சந்தைகளில் காசிமேடு மீன் சந்தை, கூட்டம் அதிகமாகக் காணப்படும் மீன் சந்தை. வாரந்தோறும் விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமைகளில் விதவிதமான மீன்களின் வரத்து அதிகமாக காணப்படுவதுடன், விலை குறைவாகவும் விற்கப்படும்.[6]

காசிமேடு துறைமுகம்[தொகு]

காசிமேட்டில் மீன்பிடித் துறைமுகம் ஒன்று உள்ளது. சர்வதேச தரத்தில் இதை மேம்படுத்த, இந்திய அரசு ரூ.97 கோடி நிதி ஒதுக்கீடு செய்கிறது.[7] காசிமேட்டில், துறைமுகம் சார்ந்த கல்விக்கான அரசு கல்வி நிறுவனமான 'மத்திய மீன்வளத்துறை கடல்சார் - பொறியியல் பயிற்சி நிலையம்' ஒன்று உள்ளது.[8]

அருகிலுள்ள ஊர்கள்[தொகு]

திருவொற்றியூர், ராயபுரம், ஜார்ஜ் டவுன் வண்ணாரப்பேட்டை, தண்டையார்பேட்டை ஆகியவை அருகிலுள்ள முக்கியமான ஊர்கள். இங்கிருந்து மட்டுமன்றி, சென்னையின் பிற பகுதிகளில் உள்ள மக்கள், வெளியூர் வியாபாரிகள் கூட்டம் கூட்டமாக மீன்கள் கொள்முதல் செய்ய வந்து செல்கின்றனர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "காசிமேடு ஒரு ஸ்கேன் ரிப்போர்ட் - Dinamalar Tamil News". Dinamalar. பார்க்கப்பட்ட நாள் 2022-11-19.
  2. "காசிமேட்டில் கார்த்திகை மாதத்திலும் மீன் வாங்க அலைமோதிய கூட்டம்" இம் மூலத்தில் இருந்து 2022-11-21 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20221121043151/https://www.dinakaran.com/news_detail.asp?Nid=815888. 
  3. "காசிமேடு - Kungumam Tamil Weekly Magazine". kungumam.co.in. பார்க்கப்பட்ட நாள் 2022-11-21.
  4. Senguttuvan, கோ செங்குட்டுவன் / Ko (2016-05-01) (in ta). கூவம் - அடையாறு - பக்கிங்காம் : சென்னையின் நீர்வழித்தடங்கள் / Cooum - Adyar - Buckingham: Chennaiyin Neervazhithadangal. Kizhakku Pathippagam. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-93-84149-80-2. https://books.google.co.in/books?id=dhBeDwAAQBAJ&pg=PT119&dq=%25E0%25AE%2595%25E0%25AE%25BE%25E0%25AE%259A%25E0%25AE%25BF%25E0%25AE%25AE%25E0%25AF%2587%25E0%25AE%259F%25E0%25AF%2581&hl=en&newbks=1&newbks_redir=0&source=gb_mobile_search&ovdme=1&sa=X&ved=2ahUKEwjb59P9-bz7AhXERmwGHZddD1IQ6AF6BAgEEAM#v=onepage&q=%25E0%25AE%2595%25E0%25AE%25BE%25E0%25AE%259A%25E0%25AE%25BF%25E0%25AE%25AE%25E0%25AF%2587%25E0%25AE%259F%25E0%25AF%2581&f=false. 
  5. அறக்கட்டளை, தமிழ் மரபு (2016-07-15) (in ta). மின்தமிழ்மேடை - 6. தமிழ் மரபு அறக்கட்டளை. https://books.google.co.in/books?id=v7qhDgAAQBAJ&pg=PA136&dq=%25E0%25AE%2595%25E0%25AE%25BE%25E0%25AE%259A%25E0%25AE%25BF%25E0%25AE%25AE%25E0%25AF%2587%25E0%25AE%259F%25E0%25AF%2581&hl=en&newbks=1&newbks_redir=0&source=gb_mobile_search&ovdme=1&sa=X&ved=2ahUKEwi_mcTV_bz7AhWO1zgGHZ67CkIQ6AF6BAgMEAM#v=onepage&q=%25E0%25AE%2595%25E0%25AE%25BE%25E0%25AE%259A%25E0%25AE%25BF%25E0%25AE%25AE%25E0%25AF%2587%25E0%25AE%259F%25E0%25AF%2581&f=false. 
  6. "காசிமேடு சந்தையில் குறைந்த மீன் விலை : அசைவ பிரியர்கள் மகிழ்ச்சி! - முழு விலை பட்டியல் இதோ..!". News18 Tamil. 2022-10-23. பார்க்கப்பட்ட நாள் 2022-11-19.
  7. "காசிமேடு துறைமுகம் ரூ.97 கோடியில் சர்வதேச தரத்துக்கு மேம்படுத்தப்படும்: எல்.முருகன் தகவல்" (in ta). https://www.hindutamil.in/news/tamilnadu/886262-kasimedu-port-will-be-upgraded-to-international-standards-at-a-cost-of-rs-97-crore.html. 
  8. அக் 22, பதிவு செய்த நாள்:; 2022. "காசிமேடு துறைமுகத்தை மேம்படுத்த ரூ.97 கோடி - Dinamalar Tamil News" (in ta). https://m.dinamalar.com/detail.php?id=3152242. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=காசிமேடு&oldid=3707189" இலிருந்து மீள்விக்கப்பட்டது