களியன்
களியன் | |
---|---|
![]() | |
ஆண் | |
![]() | |
பெண் | |
உயிரியல் வகைப்பாடு ![]() | |
திணை: | விலங்கு |
தொகுதி: | முதுகுநாணி |
வரிசை: | அன்செரிபார்மஸ் |
குடும்பம்: | Anatidae |
பேரினம்: | Aythya |
இனம்: | A. ferina |
இருசொற் பெயரீடு | |
Aythya ferina லின்னேயசு|1758 | |
![]() | |
Range of A. ferina Breeding Resident Non-breeding | |
வேறு பெயர்கள் | |
Anas ferina Linnaeus, 1758 |
களியன் [Common pochard (Aythya ferina)] என்பது பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தால் அழிவாய்ப்பு இனம்[2] [VU] என்று பட்டியலிடப்பட்ட ஒரு முக்குளிக்கும் வகை வாத்து.
உடலமைப்பும் கள இயல்புகளும்[தொகு]
உடலமைப்பு[தொகு]
ஆண் வாத்து: அடர் செம்பழுப்பு நிறத் தலை, அலகில் நீலப்பட்டை; சாம்பல் நிற உடலும் கருப்பு மார்பும் கொண்டது.
பெண் வாத்து: கன்னமும் பக்கவாட்டுப் (விலாப்) பகுதியும் வெளிர் நிறம்
பொதுவான இயல்புகள்: முக்கோண வடிவத் தலை; பறக்கும்போது மேல் இறக்கையில் அடர்ந்த ஓரத்துடன் கூடிய மங்கலான பட்டை தெரியும். நீளம் 45 cm இருக்கும்[3].
கள இயல்புகள்[தொகு]
கொண்டைத்தலை வாத்துகளுடன் சேர்ந்து காணப்படலாம்; முக்குளித்து உண்ணும் வழக்கம் உடையது.
ஒலி: பெண், க்ர்ர க்ர்ர... என்றவாறு கரகரப்பான உறுமலும் ஆண், வீப் வீப் ... என்றவாறான ஓசையும் எழுப்பும்[4]. இந்தியாவில் உள்ளபோது எந்தவிதமான ஒலியும் எழுப்புவதில்லை[5].
பரவலும் வாழ்விடமும்[தொகு]
இனப்பெருக்கம் செய்யும் பகுதி[தொகு]
மேற்கு ஐரோப்பாவிலிருந்து மத்திய ஆசியா (40–60° N) வழியாக தென் மத்திய சைபீரியா மற்றும் வடக்கு சீனா (120° Eவரை).
வலசை போகும் பகுதிகள்[தொகு]
குளிர்காலத்தில் இவை தென் திசையை நோக்கிச் செல்கின்றன; இவை வலசை போகும் பகுதிகள்: வடக்கு மற்றும் கிழக்கு ஆப்பிரிக்கா, பெரும்பாலும் வட இந்தியா, தெற்கு மற்றும் கிழக்கு ஆசியா. இந்தியாவிற்கு வலசை வரும் வாத்துகள் பெருமளவில் கசகஸ்தானின் வடக்கேயுள்ள ரஷ்யா[6], மங்கோலியா[7] ஆகிய பகுதிகளுக்குத் திரும்புகின்றன.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ BirdLife International (2015). "Aythya ferina". IUCN Red List of Threatened Species 2015: e.T22680358A82571892. doi:10.2305/IUCN.UK.2015-4.RLTS.T22680358A82571892.en.
- ↑ "BirdLife International (2015). "Aythya ferina". IUCN Red List of Threatened Species. 2015". 19 மே 2021 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ கிரேவால் மற்றும் பலர் (2018). A Pictorial Field Guide to the Birds of India. ஓம் பதிப்பகம்.
- ↑ "Common pochard -- Top audio". ebird.org. 19 மே 2021 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ சாலிம் அலி, டில்லன் ரிப்ளீ (1968). Handbook of the Birds of India and Pakistan (Vol 1). பக். 182
- ↑ பாலசந்திரன் மற்றும் பலர் (2018). Indian Bird Migration Atlas. பக். 52. BNHS
- ↑ "இன வரைபடம் (species map)". 19 மே 2021 அன்று பார்க்கப்பட்டது.