உள்ளடக்கத்துக்குச் செல்

கலைஞானம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கலைஞானம்
Kalaignanam
பிறப்புகே.எம். பாலகிருஷ்ணன்
15 சூலை 1929 (1929-07-15) (அகவை 97)
எழுமலை, தமிழ்நாடு, இந்தியா
தேசியம்இந்தியர்
பணிஎழுத்தாளர், நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர்
வாழ்க்கைத்
துணை
புஷ்பவள்ளி
பிள்ளைகள்6
விருதுகள்கலைமாமணி விருது (2017) [1]

கலைஞானம், (Kalaignanam) (இயற்பெயர்:கே. எம். பாலகிருஷ்ணன்), தமிழ்த் திரைப்படக் கலைஞர் ஆவார். இவர் 1960 - 1990 வரை 200 திரைப்படங்களுக்குத் திரைக்கதை, 40 திரைப்படங்களுக்குக் கதை எழுதி, 18 திரைப்படங்களைத் தயாரித்தவர். மேலும் இவர் திரைப்பட இயக்குநர், நடிகர், பாடலாசிரியர் எனப் பன்முகத்தன்மை படைத்தவர்.[2]

வாழ்க்கை

[தொகு]

மேடை நாடகங்கள்

[தொகு]

இவர் மதுரை மாவட்டம் பேரையூர் வட்டம், எழுமலையில் பிறந்து வளர்ந்தவர். இவர் தனது 18-வது வயதில் 1949-இல் திமுக தலைவர் ஏ. வி. பி. ஆசைத்தம்பி எழுதிய வாழ்க்கை வாழ்வதற்கே எனும் நாடகத்தில் முதன்முதலாக நடித்தவர்.

திமுக உருவாகிய அக்கால கட்டத்தில் கருணாநிதியின் விஷக்கோப்பை, நச்சுக்கோப்பை போன்ற நாடகங்களில் நடித்தவர். இவரின் அண்ணன் ஆர். எம். கிருஷ்ணசாமியும் ஒரு மேடை நாடகக் கலைஞர் ஆவார்.

நாடக மேடையிலிருந்து தமிழ்த் திரைத் துறைக்குச் சென்ற கலைஞானம், தமிழரசுக் கழகத் தலைவர் ம. பொ. சிவஞானம் தி.மு.க வை எதிர்த்து அமைத்த பிரசார நாடகமான எழுச்சிக்கடல் நாடகத்தில் வில்லனாக நடித்தார்.

திரைப்படங்கள்

[தொகு]

இவர் 1966-இல் காதல் படுத்தும் பாடு படத்திற்குத் திரைக்கதை வசனம் எழுதினார். சின்னப்பத் தேவரின் தயாரிக்கும் திரைப்படங்களுக்குத் திரைக்கதை ஆசிரியராகப் பணியாற்றிவர்.[3] பின்னர் 1978-இல் ரஜினிகாந்த் நடித்த பைரவி திரைப்படத்தைத் தயாரித்துள்ளார்.[4] இவர் ரஜினிகாந்த் நடித்த ஆறு புஷ்பங்கள் (1977) மற்றும் அல்லி தர்பார் (1978) போன்ற திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

குறத்தி மகன், புதிய தோரணங்கள் போன்ற திரைப்படங்களைத் தயாரித்தும், நெல்லிக்கனி திரைபடத்தைத் தயாரித்துள்ளார். 1986-இல் சிவாஜி கணேசன் நடிப்பில் இவர் தயாரித்த மிருதங்க சக்கரவர்த்தி திரைப்படம் பெருத்த பண இழப்பு ஏற்பட்டது.

நடித்த திரைப்படங்கள்

[தொகு]

எழுதிய நூல்கள்

[தொகு]

திரைப்படத் துறையில் அரை நூற்றாண்டைக் கடந்து இவர், தன் திரைப்பட அனுபவங்களைக் கொண்டு எழுதிய, சினிமா சீக்ரெட் எனும் நூலை மூன்று தொகுதிகளாக வெளியிட்டவர்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Kalaimamani awards (List of Winners 2011-2019)". Archived from the original on 2019-03-26. Retrieved 2020-12-22.
  2. 'திரைஞானி' கலைஞானம்
  3. https://www.hindutamil.in/news/cinema/tamil-cinema/511564-rajini-kalaignanam.html
  4. பைரவி தயாரிப்பாளர் கலைஞானம்

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கலைஞானம்&oldid=4479911" இலிருந்து மீள்விக்கப்பட்டது