கலிபோர்னியம்(IV) ஆக்சைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கலிபோர்னியம்(IV) ஆக்சைடு
பெயர்கள்
வேறு பெயர்கள்
கலிபோர்னியம் டையாக்சைடு
இனங்காட்டிகள்
12015-10-0
ChemSpider 64885445
EC number 234-606-3
InChI
  • InChI=1S/Cf.2O/q+4;2*-2
    Key: LCCVNIITEFXFMU-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
SMILES
  • [Cf+4].[O-2].[O-2]
பண்புகள்
CfO2
வாய்ப்பாட்டு எடை 283.00 g·mol−1
தோற்றம் கரும்பழுப்பு நிற திண்மம்
அடர்த்தி கி/செ.மீ3
கரையாது
கட்டமைப்பு
படிக அமைப்பு கனசதுரம்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

கலிபோர்னியம்(IV) ஆக்சைடு (Californium(IV) oxide) CfO2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் அடையாளப்படுத்தப்படுகிறது. கலிபோர்னியமும் அயோடினும் சேர்ந்து இந்த இருமச் சேர்மம் உருவாகிறது.[1]

தயாரிப்பு[தொகு]

உயர் அழுத்தத்தில் மூலக்கூறு மற்றும் அணு நிலை ஆக்சிசனுடன் கலிபோர்னியத்தை சேர்த்து வினைபுரியச் செய்தால் ஆக்சிசனேற்ற வினை நிகழ்ந்து கலிபோர்னியம்(IV) ஆக்சைடு உருவாகிறது.[2]

இயற்பியல் பண்புகள்[தொகு]

கலிபோர்னியம்(IV) ஆக்சைடு கரும்பழுப்பு நிற திண்மப் பொருளாகும். இது ஒரு கனசதுர புளோரைட்டு படிக அமைப்பைக் கொண்டுள்ளது. படிகத்தில் உள்ள அலகு செல்களுக்கு இடையில் 531.0 ± 0.2 பைக்கோமீட்டர் தூரம் காணப்படுகிறது.

கலிபோர்னியம் டையாக்சைடின் படிகங்கள் பொதுவாக உடல் மைய கனசதுர சமச்சீர் நிலையைக் கொண்டிருக்கும். அவை சுமார் 1400 பாகை செல்சியசு வெப்பநிலை வரை சூடுபடுத்தும் போது ஒற்றைச் சாய்வு படிக வடிவமாக மாறி 1750 பாகை செல்சியசு வெப்பநிலையில் உருகும்.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "WebElements Periodic Table » Californium » californium dioxide". webelements.com. பார்க்கப்பட்ட நாள் 11 April 2023.
  2. Haire, Richard G. (2006). "Californium" (in en). The Chemistry of the Actinide and Transactinide Elements. Springer Netherlands. பக். 1499–1576. doi:10.1007/1-4020-3598-5_11. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-4020-3598-2. https://link.springer.com/chapter/10.1007/1-4020-3598-5_11. பார்த்த நாள்: 11 April 2023. 
  3. Baybarz, R. D.; Haire, R. G.; Fahey, J. A. (1 February 1972). "On the californium oxide system" (in en). Journal of Inorganic and Nuclear Chemistry 34 (2): 557–565. doi:10.1016/0022-1902(72)80435-4. பன்னாட்டுத் தர தொடர் எண்:0022-1902. https://www.sciencedirect.com/science/article/abs/pii/0022190272804354. பார்த்த நாள்: 11 April 2023. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கலிபோர்னியம்(IV)_ஆக்சைடு&oldid=3739528" இலிருந்து மீள்விக்கப்பட்டது