கலிபோர்னியம் ஆக்சிகுளோரைடு
Appearance
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
கலிபோர்னியம் ஆக்சிகுளோரைடு
| |
பண்புகள் | |
CfClO | |
வாய்ப்பாட்டு எடை | 302.45 g·mol−1 |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
கலிபோர்னியம் ஆக்சிகுளோரைடு (Californium oxychloride) என்பது CfOCl என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு வேதிச் சேர்மம் ஆகும். அளவிடக்கூடிய அளவுக்கு சற்று கூடுதலாகக் கிடைத்த இந்த முதல் கதிரியக்கச் சேர்மம் 1960 ஆம் ஆண்டில் கண்டறியப்பட்டது. ஒற்றை கலிபோர்னியம் நேரயனியும் ஓர் ஆக்சிகுளோரைடு எதிர்மின் அயனியும் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது. முதன்முதலாக தனித்துப் பிரிக்கப்பட்ட கலிபோர்னியச் சேர்மமும் இதுவேயாகும்[1]
தயாரிப்பு
[தொகு]கலிபோர்னியம்(III) ஆக்சைடுடன் ஈரமான ஐதரசன் குளோரைடைச் சேர்த்து வினைபுரியச் செய்தால் கலிபோர்னியம் ஆக்சிகுளோரைடு நீராவியுடன் சேற்ந்து உருவாகிறது.[2]
இயற்பியல் பண்புகள்
[தொகு]கலிபோர்னியம் ஆக்சிகுளோரைடு சேர்மம் வெளிர் பச்சை நிறப் படிகங்களை உருவாக்குகிறது.[3]
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Seaborg, Glenn T. (1963). Man-Made Transuranium Elements. Prentice-Hall.
- ↑ Seaborg, G. T.; Katz, Joseph J.; Morss, L. R. (6 December 2012). The Chemistry of the Actinide Elements: Volume 2 (in ஆங்கிலம்). Springer Science & Business Media. p. 1046. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-94-009-3155-8. பார்க்கப்பட்ட நாள் 16 July 2023.
- ↑ Fundamental Nuclear Energy Research (in ஆங்கிலம்). Atomic Energy Commission. 1968. p. 274. பார்க்கப்பட்ட நாள் 16 July 2023.