கலிபோர்னியம்(III) பாலிபோரேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கலிபோர்னியம்(III) பாலிபோரேட்டு
Californium(III) polyborate
பெயர்கள்
வேறு பெயர்கள்
கலிபோர்னியம் போரேட்டு
பண்புகள்
Cf[B6O8(OH)5]
வாய்ப்பாட்டு எடை 526.90 கி/மோல்[1]
தோற்றம் வெளிர் பச்சை தகடுகள்
அடர்த்தி 3.842 கி/செ.மீ3, திண்மம்
கட்டமைப்பு
படிக அமைப்பு ஒற்றைச்சரிவச்சு[1]
புறவெளித் தொகுதி C2/c
Lattice constant a = 6.849 Å, b = 18.809 Å, c = 101.36 Å
படிகக்கூடு மாறிலி
8 ஒருங்கிணைவுகள் சதுர எதிர்ப்பட்டகம்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

கலிபோர்னியம்(III) பாலிபோரேட்டு (Isoxazole) என்பது Cf[B6O8(OH)5 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு சகப்பிணைப்புச் சேர்மமாகும். இச்சேர்மத்தில் கலிபோர்னியம் +3 என்ற ஆக்சிசனேற்ற நிலையில் உள்ளது[1].

போரேட்டு அயனிகளுடன் கலிபோர்னியம் சகப்பிணைப்பால் பிணைந்திருப்பதால் கலிபோர்னியம் பாலிபோரேட்டு ஓர் அசாதரமான சேர்மமாகக் கருதப்படுகிறது. இலந்தனைடு வரிசைத் தனிமங்கள் போல கலிபோர்னியமும் உயர் அயனித்தன்மையைக் கொண்டிருக்கும் எதிர்பார்க்கப்பட்ட்து. பாலிபோரேட்டு எதிர்மின் அயனி முனைவுறும் தன்மையும் நெகிழ்ச்சியடையும் தன்மையும் கோண்டிருக்கிறது[2]. கலிபோர்னியத்தின் 5f, 6d, 7s, மற்றும் 7p ஆர்பிட்டல்கள் அனைத்தும் பிணைப்பில் பங்கேற்கின்றன, பெரும்பாலான இணைதிறன் எலக்ட்ரான்கள் 5f ஆர்பிட்டலில் உள்ளன. குறிப்பிட்த்தக்க (2⁄3) பின்ன எலக்ட்ரான் 6d ஆர்பிட்டலிலும், சிறிய பின்ன எலக்ட்ரான்கள் 7s மற்றும் 7p ஆர்பிட்டல்களிலும் உள்ளன[2] Most valence electrons are in the 5f orbital, and a significant fraction (23) in the 6d orbital, and smaller fractions of one electron are in the 7s and 7p orbitals.[1].

தயாரிப்பு[தொகு]

ஓர் உயரழுத்தக் கொப்பரையில் நீரில் கரைத்த கலிபோர்னியம்(III) குளோரைடு கரைசலுடன் அதிக அளவு போரிக் அமிலத்தைச் சேர்த்து 240 பாகை செல்சியசு வெப்பநிலையில் ஒரு வாரத்திற்கு வைத்திருந்தால் கலிபோர்னியம்(III) பாலிபோரேட்டு உருவாகிறது, பின்னர் இதை மூன்று தினங்களுக்கு அறை வெப்பநிலைக்கு குளிரவைக்க வேண்டும்ம் மிகையான போரிக் அமிலம் தண்ணீரில் கரைந்து நீரில் கரையாத போரேட்டு படிகங்கள் உருவாகின்றன[1].

பண்புகள்[தொகு]

கலிபோர்னியம்(III) பாலிபோரேட்டு திண்மம் 365 அல்லது 420 நானோமீட்டர் அலைநீள புறவூதா ஒளியில் 525 நானோமீட்டர் அலைநீள பச்சை நிற ஒளிர்தலுக்கு உட்படுகிறது[1]. 546 நானோமீட்டர் அலைநீள பச்சை ஒளியால் தூண்டப்பட்டு 1020 நானோமீட்டர் அகச்சிவப்பு ஒளிர்வுக்கு அருகில் கட்புலனுக்கு தெரிவதில்லை[1].

முன்பாதுகாப்பு[தொகு]

கலிபோர்னியம் பாலிபோரேட்டு ஓர் அபாயகரமான சேர்மமாகும். ஏனெனில் கலிபோர்னியமும் அதன் சகோதரத் தனிமம் கியூரியமும் கதிரியக்கத் தன்மை கொண்டவையாகும். இவற்றுக்கிடையில் இத்தனிமங்கள் ஆல்ஃபா துகள், காமா கதிர், நியூட்ரான்கள் போன்றவற்றை உமிழ்கின்றன[1].

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 1.7 Polinski, Matthew J.; Garner, Edward B.; Maurice, Rémi; Planas, Nora; Stritzinger, Jared T.; Parker, T. Gannon; Cross, Justin N.; Green, Thomas D. et al. (23 March 2014). "Unusual structure, bonding and properties in a californium borate". Nature Chemistry 6 (5): 387–392. doi:10.1038/nchem.1896. பப்மெட்:24755589. Bibcode: 2014NatCh...6..387P. http://hal.in2p3.fr/in2p3-00966875/document. 
  2. 2.0 2.1 "Unusual structure, bonding, and properties may provide a new possibility for a californium borate". 1 June 2015. பார்க்கப்பட்ட நாள் 29 July 2015.