கலிபோர்னியம்(III) புளோரைடு
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
கலிபோர்னியம் முப்புளோரைடு
| |
இனங்காட்டிகள் | |
42775-52-0 | |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
| |
பண்புகள் | |
CfF3 | |
வாய்ப்பாட்டு எடை | 308.00 g·mol−1 |
தோற்றம் | பசுமைமஞ்சள் திண்மம் |
அடர்த்தி | கி/செ.மீ3 |
கட்டமைப்பு | |
படிக அமைப்பு | செஞ்சாய்சதுரக் கட்டமைப்பு |
தீங்குகள் | |
முதன்மையான தீநிகழ்தகவுகள் | கதிரியக்கப் பண்பு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
கலிபோர்னியம்(III) புளோரைடு (Californium(III) fluoride) CfF3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமச் சேர்மமாகும். ஓர் இருமக் கனிமச் சேர்மமாக கலிபோர்னியம்(III) புளோரைடு வகைப்படுத்தப்படுகிறது.[1]
இயற்பியல் பண்புகள்
[தொகு]கலிபோர்னியம்(III) புளோரைடு மஞ்சள் பச்சை நிறத்தில் ஒரு திண்மமாக உருவாகிறது.[2] வெப்பநிலை சார்ந்து இது இரண்டு படிக அமைப்புகளைக் கொண்டுள்ளது. குறைந்த வெப்பநிலையில் செஞ்சாய்சதுரக் கட்டமைப்பில் (YF3 வகை) உள்ளது. a = 665.3(3) பைக்கோமீட்டர், b = 703.9(1) பைக்கோமீட்டர் மற்றும் c = 439.3(3) பைக்கோமீட்டர் என்ற அணிக்கோவை அளபுருக்கள் காணப்படுகின்றன. அதிக வெப்பநிலையில் இது முக்கோணக் கட்டமைப்பை உருவாக்குகிறது (LaF
3 வகை) a = 694.5(3) பைக்கோமீட்டர் மற்றும் c = 710.1(2) பைக்கோமீட்டர் என்ற அணீக்கோவை அளபுருக்கள் காணப்படுகின்றன. ஒவ்வொரு கலிபோர்னியம் அணுவும் சிதைக்கப்பட்ட மூவுச்சி முக்கோண-பட்டகக் கட்டமைப்பில் ஒன்பது புளோரின் அணுக்களால் சூழப்பட்டுள்ளன.[3][4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Haupt, Axel (22 March 2021). Organic and Inorganic Fluorine Chemistry: Methods and Applications (in ஆங்கிலம்). Walter de Gruyter GmbH & Co KG. p. 618. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-11-065933-7. பார்க்கப்பட்ட நாள் 6 April 2023.
- ↑ "WebElements Periodic Table » Californium » californium trifluoride". webelements.com. பார்க்கப்பட்ட நாள் 6 April 2023.
- ↑ Stevenson, J. N.; Peterson, J. R. (1 October 1973). "The trigonal and orthorhombic crystal structures of CfF3 and their temperature relationship" (in en). Journal of Inorganic and Nuclear Chemistry 35 (10): 3481–3486. doi:10.1016/0022-1902(73)80356-2. பன்னாட்டுத் தர தொடர் எண்:0022-1902. https://www.sciencedirect.com/science/article/abs/pii/0022190273803562. பார்த்த நாள்: 6 April 2023.
- ↑ Macintyre, Jane E. (23 July 1992). Dictionary of Inorganic Compounds (in ஆங்கிலம்). CRC Press. p. 2825. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-412-30120-9. பார்க்கப்பட்ட நாள் 6 April 2023.