கரும்புச் சக்கை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சீனாவில் ஆய்னானில் கரும்புச் சக்கை

கரும்புச் சக்கை (ஆங்கிலத்தில்: Bagasse) என்பது கரும்பிலிருந்து சாறு பிழிந்தபிறகு மீதமுள்ள சக்கையாகும். [1] இந்த சக்கையானது வெப்பம், மின்சாரம் போன்றவற்றை உற்பத்தி செய்ய உயிர் எரிபொருளாகவும், காகிதக் கூழ், கட்டுமான பொருட்களைத் தயாரிக்க மூலப் பொருளாகவும் பயன்படுகிறது.

உற்பத்தி, சேமிப்பு மற்றும் கலவை[தொகு]

மதீராவின், கலேடாவில் உள்ள சர்க்கரை ஆலையில் வெளிவரும் கரும்புச் சக்கை

சர்க்கரை ஆலையில் 10 டன் கரும்பை பிழியும்போது கிட்டத்தட்ட மூன்று டன் ஈரக் கரும்புச் சக்கை மிச்சமாகிறது. இது ஒவ்வொரு நாட்டிலும் கரும்பு உற்பத்தியின் தன்மைக்கு ஏற்றவாறு சற்று மாறுபடுகிறது.

அதிக ஈரப்பதம் கொண்ட கரும்புச் சக்கையை, பொதுவாக 40-50 சதவிகிதம் ஈரப்பதமுள்ள சக்கையை, எரிபொருளாகப் பயன்படுத்துவது தீங்கு விளைவிக்கக்கூடியது ஆகும்.

உலர்ந்த சுத்தமான கரும்புச் சக்கையில் காணப்படும் பொதுவான இரசாயன பொருட்களின் அளவு: [2]

  • செல்லுலோஸ் 45-55 சதவிகிதம்
  • ஹெமிசெல்லாஸ் 20-25 சதவிகிதம்
  • லிக்னைன் 18-24 சதவிகிதம்
  • சாம்பல் 1-4 சதவீதம்
  • மெழுகு <1 சதவீதம்


பயன்கள்[தொகு]

ப்ளாஸ்பெர்பீன் , குயின்ஸ்லாந்தில் உள்ள ஒரு சர்க்கரை ஆலைக்கு வெளியே நீல நிற நெகிழிப் பைகளால், மூடப்பட்டிருக்கும் கருப்புச் சக்கை

புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்திக்கு உயிரி எரிபொருளாக கரும்புச் சக்கையைப் பயன்படுத்த பல ஆராய்ச்சி முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

எரிபொருளாக[தொகு]

சர்க்கரை ஆலைகளில் ஒரு முக்கிய எரிபொருளாக கரும்புச் சக்கை பயன்படுத்தப்படுகிறது. சரியான அளவு கரும்புச் சக்கைகளை எரிக்கும் போது, ஒரு சாதாரண சர்க்கரை ஆலையின் அனைத்து தேவைகளுக்கும் போதுமான வெப்ப ஆற்றலை உற்பத்தி செய்ய இயலும். ஆலைக்குத் தேவையான ஆற்றலுக்குப் போக மீதமாகும் எரிபொருளைப் பயன்படுத்துவதன் மூலமாக கிடைக்கும் மின் ஆற்றலை மின் வலைப்பின்னல் வழியாக விற்று பொருளீட்ட இயலும்.

காகிதக் கூழ், காகிதம், பலகை, உணவு[தொகு]

இந்தியா, சீனா, கொலம்பியா, ஈரான், தாய்லாந்து, அர்ஜென்டினா போன்ற வெப்ப மண்டல மற்றும் துணை வெப்பமண்டல நாடுகளில் கரும்புச் சக்கையானது காகிதக்கூழ், காகிதம், பலகை போன்றவற்றைத் உற்பத்தி செய்ய மரக்கட்டைகளுக்கு பதிலாக பயன்படுத்தப்படுகிறது. இது பொதுவாக அச்சிட, எழுதப் பயன்படும் காகிதங்களைத் தயாரிக்க ஏற்றது என்றாலும், பொதுவாக இதை அட்டைப் பெட்டி, செய்தித்தாள் போன்றவற்றைத் தயாரிக்கவே பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது.[2] கரும்புச் சக்கைத் துகளானது ஒட்டுப் பலகைகளை தயாரிக்க மரத்துக்கு பதிலாக ஒரு நல்ல மாற்றுப் பொருளாக கருதப்படுகிறது. இந்தப் பலகைகளானது அறைத் தடுப்புகள் தளபாடங்கள் போன்றவற்றை உருவாக்க பரவலாக பயன்படுகிறது.

உடல்நல பாதிப்பு[தொகு]

கரும்புச் சக்கையை கையாலும் இடங்களில் பணிபுரிபவர்களின் சுவாசத்தில் கரும்புச் சக்கைத் துகள்கள் செல்வதால் கரும்புச்சக்கைத் துகள் அழற்சி உண்டாகி நுரையீரலை பாதிக்கிறது. [3]

குறிப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கரும்புச்_சக்கை&oldid=2754457" இருந்து மீள்விக்கப்பட்டது