உள்ளடக்கத்துக்குச் செல்

மெழுகு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மெழுகுவர்த்தி

மெழுகு சுற்றாடல் வெப்பநிலையில் இளகும் தன்மை கொண்ட ஒரு வகை வேதிச் சேர்வை. இது ஒரு வகை லிப்பிட்டும் ஆகும். இதன் உருகும் 45 °C (113 °F). வெப்பநிலைக்கு மேல் இது உருகிக் குறைந்த பாகுநிலை கொண்ட திரவமாகின்றது. மெழுகுகள் நீரிற் கரைவதில்லை. ஆனால் சில கரிமக் கரைப்பான்களில் கரையக்கூடியன. இயற்கையாகக் கிடைக்கும் மெழுகுகளும், செயற்கையாகத் தயாரிக்கப்படுகின்ற மெழுகும் பொருட்களும் கரிமச் சேர்வைகளே.

வகை

[தொகு]

பொதுவாக மெழுகுகள் நீண்ட அல்கைல் சங்கிலிகளைக் கொண்டவை. இயற்கை மெழுகுகள், பெரும்பாலும் கொழுப்பு அமிலங்களின் எசுத்தர்களும், நீண்ட சங்கிலி அல்ககோல்களும் ஆகும். செயற்கை மெழுகுகள் வினைத் தொகுதிகள் குறைந்த நீண்ட சங்கிலி ஐதரோகாபன்கள்.

பயன்பாடு

[தொகு]

மர உற்பத்திகள் தயாரிக்கும் போது அவற்றை முடிப்பதற்கும் பூச்சிடவும் மெழுகிடவும், கற்பூரம் வில்லைகள் , தீக்குச்சி , காலணி மெருகு மற்றும் தட்டச்சு மை காகிதம் ஆகியன தயாரிக்கவும் மெழுகு பயன்படுகின்றது.

வெளி இணைப்புக்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மெழுகு&oldid=3412523" இலிருந்து மீள்விக்கப்பட்டது