கருநீலக் குழந்தைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கருநீலக் குழந்தைகள் (Indigo children) என்பது அசாதாரணமான, சிறப்பான, ஆற்றல்களையும், இயல்புகளையும் கொண்டிருப்பதுடன், அல்லது இயல்நிலை கடந்த செயற்பாடுகளையும், ஆற்றல்களையும் கொண்டிருப்பதாகச் சொல்லப்படும் குழந்தைகளுக்கு வழங்கப்படும் போலி அறிவியல் (pseudoscience) பெயர்.[1] முத்திரை குத்தப்படும் குழந்தைகள் ஆவர். இதுபற்றிய சிந்தனை 1970 இல் Nancy Ann Tappe என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்ட புது யுகம் என்னும் கருத்தாக்கத்தின் அடிப்படையில் அமைந்தது. இது தொடர்பாக 1990 களில் வெளிவந்த புத்தகங்களும், அதைத் தொடர்ந்த தசாப்தங்களில் வெளிவந்த திரைப்படங்களும் மக்கள் மத்தியில் ஆர்வத்தைத் தூண்டியது. தொலை நுண்ணுணர்வு போன்ற இயல்நிலை கடந்த இயல்புகளைக் கொண்டிருப்பதனால், இது மனித இனத்தின், வளர்ச்சிப் படிமுறையில் அடுத்த கட்டத்துக்கு நகர்வதைக் காட்டுவதாக சிலர் நம்புகின்றனர். அத்துடன் இவர்கள், சக மனிதர்களை விட படைப்பாற்றல் மற்றும் புரிந்துணர்வு அதிகம் கொண்டவர்களாக இருப்பதாகவும் நம்பப்படுகின்றது.

கருநீலக் குழந்தைகள் இருப்பதோ, அல்லது அவர்களிடம் இருப்பதாகச் சொல்லப்படும் இயல்புகள் இருப்பதோ நம்பத்தகுந்த அறிவியல் ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்படவில்லை. இருப்பினும் குழந்தைகள் சாதாரண கற்றல் அல்லது கற்பித்தல் முறையைப் பின்பற்ற முடியாது இருக்கும் சூழ்நிலைகளில், தங்கள் குழந்தைகளிடம் விசேட இயல்புகள் இருப்பதாக பெற்றோர்கள் சிலர் நம்புகின்றனர். இந்தப் பெற்றோர்களின் கூற்றுக்களில் நம்பிக்கை அற்றவர்கள், பெற்றோர்கள் குழந்தைக்கு இருக்கக்கூடிய மனநலக் குறைபாட்டை கண்டு பிடிப்பதையும், குழந்தைக்குத் தேவையான சிகிச்சையை அளிப்பதையும் தவிர்ப்பதாகவும் குறை கூறுகின்றனர். சில பெற்றோர்கள் தமது உற்பத்திப் பொருட்கள் விற்பனை, சேவைகளின் அங்கீகாரம் மூலம் பணம் சம்பாதிக்கும் நோக்கிலும் இவ்வாறு செய்வதாகக் குற்றம் சுமத்தப்படுகின்றனர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Stenger, Victor J. (1998-06). "Reality Check: the energy fields of life". Committee for Skeptical Inquiry. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கருநீலக்_குழந்தைகள்&oldid=3023604" இலிருந்து மீள்விக்கப்பட்டது