உள்ளடக்கத்துக்குச் செல்

கருஞ்சிவப்பு மரங்கொத்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கருஞ்சிவப்பு மரங்கொத்தி
மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் தெற்கத்திய கருஞ்சிவப்பு மரங்கொத்தி
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
Micropternus

Blyth, 1845
இனம்:
M. brachyurus
இருசொற் பெயரீடு
Micropternus brachyurus
(Vieillot, 1818)
வேறு பெயர்கள்

Celeus brachyurus (Vieillot, 1818)

கருஞ்சிவப்பு மரங்கொத்தி (ஒலிப்பு) (Micropternus brachyurus) என்பது தெற்கு மற்றும் தென்கிழக்காசியாவை பூர்வீகமாகக் கொண்ட நடுத்தர அளவிலான பழுப்பு மரங்கொத்தி ஆகும். குறுகிய அலகு உடைய இது சிறு பூச்சிகள், குறிப்பாக எறும்புகள் மற்றும் கரையான்கள் போன்றவற்றை உணவாக கொள்கிறது. இவை புதர்கள், பசுமை மாறா காடுகள், இலையுதிர் காடுகளில் காணப்படுகிறது. இது ஒரு மரங்கொத்தி பறவை சிற்றினமாகும். எறும்புகள் கூடுகட்டிவாழும் மரங்களில் எறும்புகள் கூடுள்ள பகுதியிலேயே குடைந்து பொந்து அமைத்து கூடுகட்டுவது குறிப்பிடத்தக்கது.

இது நேபாளம், பூட்டான், மியான்மார், தென் சீனம், தாய்லாந்து, கம்போடியா, சிங்கப்பூர், வியட்நாம், இந்தோனேசியா, புரூணை போன்ற நாடுகளில் காணப்படுகிறது.

வகைப்பாடு

[தொகு]

இந்த இனத்தின் பரவலான வாழிட எல்லைக்குள், இவை வேறுபட்ட இறகு நிறங்களும், அளவு வேறுபாடுகளும் கொண்டுள்ளன. இதனால் இவை பல துணையினங்களாக பிரிக்கபட்டுள்ளன. அவற்றில் சுமார் பத்து துணையினங்கள் பரவலாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன.[2][3]

 • மை. பி. பிராக்கியூரசு (Vieillot, 1818) – சாவகம்.
 • மை. பி. கூயூமி Kloss, 1918 – மேற்கு இமயமலையில் காணப்படுகிறது, கோடுகள் நிறைந்த தொண்டை, சாம்பல் நிற தலை, வெளிறிய முகம்.
 • தெற்கத்திய கருஞ்சிவப்பு மரங்கொத்தி மை. பி. ஜெர்டோனி (Malherbe, 1849)[4] [includes kanarae from the northern western ghats noted as larger by Koelz[5]] – தீபகற்ப இந்தியா மற்றும் இலங்கை
 • மை. பி. phaioceps (Blyth, 1845) – கிழக்கு இமயமலையின் மத்திய நேபாளத்திலிருந்து மியான்மர், யுனான் மற்றும் தெற்கு தாய்லாந்து வரை.
 • மை. பி. fokiensis (Swinhoe, 1863) – (has a sooty abdomen) தென்கிழக்கு சீனா மற்றும் வடக்கு வியட்நாம்.
 • மை. பி. holroydi Swinhoe, 1870 – ஹைனன்.
 • மை. பி. williamsoni Kloss, 1918 – தெற்கு தாய்லாந்து. சில நேரங்களில் badius துணையினத்துக்குள் சேர்க்கப்படுகிறது.
 • மை. பி. annamensis Delacour & Jabouille, 1924 – லாவோஸ், கம்போடியா, தெற்கு வியட்நாம்.
 • மை. பி. badius (Raffles, 1822) – [includes celaenephis of Nias Island] மலாய் தீபகற்பத்தில் இருந்து தெற்கே சுமத்ரா வரை
 • மை. பி. badiosus (Bonaparte, 1850) – (has a very dark tail) போர்னியோ மற்றும் வடக்கு நதுனா தீவுகள்

விளக்கம்

[தொகு]
தலையின் பக்கவாட்டுத் தோற்றம்

கருஞ்சிவப்பு மரங்கொத்தி சுமார் 25 செ.மீ. நீளம் கொண்டது. மற்ற மரங்கொத்திகளிலிருந்து வேறுபட்டதாக செம்பழுப்பு உடல் கொண்டதாக இருப்பது கொண்டு இதனை எளிதில் அடையாளம் காணலாம். இதன் இறக்கை மற்றும் வால் இறகுகளில் கருமையான பட்டைகளுடன் தோற்றமளிக்கும். தலை வெளிறியதாகவும், அடிப்பகுதி கருஞ்சிவப்பு நிறமாகவும் இருக்கும். அலகு குட்டையாகவும், கறுப்பு நிறமாகவும் இருக்கும்.

நடத்தையும் சூழலியலும்

[தொகு]

கருஞ்சிவப்பு மரங்கொத்தியானது மரங்களில் உள்ள எறும்பும்புக் கூடுகளில் உள்ள எறும்புகளை இணையாக உண்ணும். இவை பொதுவாக இலைகளிடையே கூடுகட்டும் செவ்வெறும்பு முதலான எறும்புகளே முதன்மையாக உண்பதாக அறியப்படுகிறது.[6] எனவே அத்தகைய கூடுகள் உள்ள மரங்களில் இதனைக் காண மிகுந்த வாய்ப்பு உள்ளது. பழவகைகளை உண்பதோடு வாழை இலையின் தண்டின் அடிப்பாகத்தைத் துளைத்துளச் சாற்றினையும் உறிஞ்சும். கினிக்-கினீக் கினீக் என மும்முறை குரல் கொடுக்கும். மரக்கிளைகளிலும் மூங்கில்களிலும் இனப் பெருக்க காலம் நெருங்கும் சமயத்தில் அலகால் தட்டி ஒலி எழுப்பும் பழக்கம் உடையது. மெல்ல முதலில் தொடங்கப்படும் தட்டல் படிப்படியே சத்தம் கூடி கால் கிலோ மீட்டர் தொலைவு வரை கேட்கும்படியானதாக உயரும். [7]

கருஞ்சிவப்பு மரங்கொத்தி இணையுடன்

இனப்பெருக்கம்

[தொகு]

பிப்ரவரி முதல் ஏப்ரல் வரையான பருவத்தில் மரத்தில் இலைக்கொத்துகளாலான தொங்கும் எறும்புக் கூட்டைத் துளைத்துக் கருப்பு நிறக் கூழ்போன்ற பொருளால் கூடமைத்து 2 முட்டைகளிடும்.

படங்கள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
 1. BirdLife International (2016). "Micropternus brachyurus". IUCN Red List of Threatened Species 2016: e.T22681314A92901215. https://www.iucnredlist.org/species/22681314/92901215. பார்த்த நாள்: 8 November 2021. 
 2. Robinson, H.C. (1919). "Note on certain recently described subspecies of woodpeckers". Ibis. 11 1 (2): 179–181. https://biodiversitylibrary.org/page/16342418. 
 3. Peters, James Lee (1948). Check-list of birds of the world. Volume VI. Cambridge: Harvard University Press. pp. 128–129.
 4. Malherbe, Alfred (1849). "Description de quelques nouvelles especes de Picines (Picus, Linn.)". Revue et magasin de zoologie pure et appliquée: 529–544. https://biodiversitylibrary.org/page/2343765. 
 5. Koelz, W (1950). "New subspecies of birds from southwestern Asia.". Am. Mus. Novit. 1452: 1–10. 
 6. Santharam, V. (1997). "Display behaviour in Woodpeckers". Newsletter for Birdwatchers 37 (6): 98–99. https://archive.org/details/NLBW37_6/page/n8. 
 7. தமிழ்நாட்டுப் பறவைகள் முனைவர் க.ரத்னம்-மெய்யப்பன் பதிப்பகம் பக்கம் எண்:96