கரீம்நகர் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கரீம்நகர்
Karimnagar
தெலங்காணா சட்டப் பேரவை, தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்தெலங்காணா
மாவட்டம்கரீம்நகர்
நிறுவப்பட்டது1952
மொத்த வாக்காளர்கள்1,99,331
சட்டமன்ற உறுப்பினர்
2nd Telangana Legislative Assembly
தற்போதைய உறுப்பினர்
கட்சிபாரத் இராட்டிர சமிதி

கரீம்நகர் சட்டமன்றத் தொகுதி (Karimnagar Assembly constituency) இந்தியாவின் தெலங்காணா சட்டப் பேரவையின் ஒரு தொகுதியாகும்.[1] கரீம்நகர் மாவட்டத்தில் உள்ள மூன்று தொகுதிகளில் இதுவும் ஒன்று. இதில் கரீம்நகர் நகரமும் அடங்கும். இது கரீம்நகர் மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாகவும் உள்ளது.

தெலங்காணா மாநிலத்தின் தற்போதைய குடிமைப் பொருள் வழங்கல் துறை அமைச்சரான கங்குலா கமலாகர் 14,974 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார்.

தொகுதியின் அமைவு[தொகு]

சட்டமன்றத் தொகுதி தற்போது பின்வரும் மண்டலங்களைக் கொண்டுள்ளது:

மண்டல்
கரீம்நகர் நகரம்
கரீம்நகர் கிராமம்
கொத்தப்பள்ளி

சட்டப் பேரவை உறுப்பினர்கள்[தொகு]

ஆண்டு சட்டமன்ற உறுப்பினர் கட்சி
1972 ஜுவ்வாடி சொக்கா ராவ் இந்திய தேசிய காங்கிரசு
1978 கொண்டையா நாலுமாச்சு இந்திய தேசிய காங்கிரசு
1983 கே மூர்த்திஜெயம் சுயேச்சை
1985 சி ஆனந்த் ராவ் தெலுங்கு தேசம் கட்சி
1989 ஜகப்தி ராவ் வி சுயேச்சை
1994 ஜுவ்வாடி சந்திர சேகர் ராவ் தெலுங்கு தேசம் கட்சி
1999 தேவேந்திர ராவ் கட்டாரி தெலுங்கு தேசம் கட்சி
2004 மேனேனி சத்தியநாராயணா இந்திய தேசிய காங்கிரசு
2009 கங்குலா கமலாகர் தெலுங்கு தேசம் கட்சி
2014 தெலங்காணா இராட்டிர சமிதி
2018 பாரத் இராட்டிர சமிதி

மேலும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]