கரிமா பலோச்சு
கரிமா பலோச்சு (Karima Baloch8 மார்ச் 1983 [1] - 20/22 டிசம்பர் 2020), [2] கரிமா மெஹ்ராப் என்றும் அழைக்கப்படும் இவர், [3] [4] [5] ஒரு பாக்கித்தான் பலூச் மனித உரிமை ஆர்வலர் மற்றும் இணக்கமற்றவர் . [6] இவர் பாக்கித்தானிலிருந்து பலூசிஸ்தானின் சுதந்திரத்திற்காக பிரச்சாரம் செய்தார், மேலும் பிபிசியின் 100 உத்வேகம் மற்றும் செல்வாக்குள்ள பெண்கள் பட்டியலில் 2016 இல் இடம் பெற்றார். [7]
ஆர்வலர் தொழில்[தொகு]
பலோச் மனித உரிமைகள் மற்றும் சுதந்திர ஆர்வலராக 2005 இல் செயல்படத் தொடங்கினார், பாக்கித்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் மனித உரிமை மீறலுக்காக டர்பட்டில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டார், அங்கு இவர் காணாமல் போன உறவினர் ஒருவரின் படத்தை எடுத்துச் சென்றார். [8] இவர் பலூச் மாணவர் அமைப்பில் (BSO) 2006 ஆம் ஆண்டில் சேர்ந்தார். அந்த அமைப்பின் பல்வேறு பதவிகளில் பணியாற்றினார் மற்றும் இறுதியில் 2015 இல் அந்த அமைப்பின் தலைவராக ஆனார். [8] இந்த ஆண்டுகளில், பலோச் பலூசிஸ்தான் முழுவதும் பயணம் செய்து, ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பேரணிகள் போன்ற விரிவான நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து பல்வேறு சமூக செயல்பாடுகள் கலந்து கொண்டார். ஓஇசட் ஒய் எனும் நிறுவனத்தில் "பாக்கித்தானின் தலைநகரான இஸ்லாமாபாத்தில், கரிமா ஒரு ஆபத்தான அரசியல் நடிகராகவும் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகவும் பார்க்கப்படுகிறார்" என்று இவரைப் பற்றி குறிப்பிட்டிருந்தனர். ஆனால் பலூசிஸ்தானுக்குள், இவர் ஒரு உள்ளூர் கதாநாயகி மற்றும் நம்பிக்கையின் கலங்கரை விளக்கம் போலவும் கருதப்பட்டது. " [9]
பாக்கித்தானிலிருந்து நாடு கடத்தல்[தொகு]
2015 ஆம் ஆண்டில், பாக்கித்தானிய அரசால் பயங்கரவாத குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட பின்னர், பலோச் சுயமாக நாடு கடத்தப்பட்டார், இவளது தங்கை மஹ்கஞ்ச் பலோசி இவரைப் பற்றி கூறுகையில் "இவள் வெளிநாடு செல்ல விரும்பவில்லை, இவளுக்கு இங்கு இருப்பதில் தான் விருப்பம் ஆனால் ... பாக்கித்தானின் அரசியல் செயல்பாடு இவளது விருப்பத்தினை சாத்தியமற்றதாகிவிட்டது என்று கூறினார். [8] [10] ஒரு வருடம் கழித்து, 2016 ஆம் ஆண்டில், கனடாவில் இவருக்கு அடைக்கலம் வழங்கப்பட்டது, அங்கு இவர் டிசம்பர் 2020 இல் காணாமல் போகும் வரை இருந்தார். [11] 2016 ஆம் ஆண்டில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் சுதந்திர தினத்தன்று , பாக்கித்தானின் பலுசிஸ்தானின் நிலைமையைக் குறிப்பிட்டு, உரையாற்றினார் அதற்கு நன்றி தெரிவிக்க்கும் விதமாக ஒரு நிகழ்படத்தில் எங்களது நிலைமையினை எடுத்துக் கூறியதற்கு நன்றி எனக் கூறினார் மேலும் இவர்" எங்களது போரில் நாங்களே சண்டையிடுவோம் , எங்களின் குரலாக நீங்கள் இருங்கள்" எனக் கூறினார்.[12] [13]
பலூச் 2016 இல் பிபிசியால் சக்தி வாய்ந்த 100 பெண்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டார். "பாக்கித்தானில் இருந்து பலூசிஸ்தானுக்கு சுதந்திரம் பெற பிரச்சாரம் செய்த" அரசியல் ஆர்வலராக செயல்பட்டதன் மூலம் அந்தப் பட்டியலில் இவர் இடம் பெற்றார். [14] [15] [16] 2018 ஆம் ஆண்டில், ஐக்கிய நாடுகள் மனித உரிமை கவுன்சிலில் பாக்கித்தானில் பாலின சமத்துவமின்மை தொடர்பான பிரச்சினைகளை இவர் எழுப்பினார். [17] கனடாவில் பலுசிஸ்தான் தொடர்பான பிரச்சினைகளையும் இவர் எழுப்பினார், டொராண்டோவில் நடந்த சந்திப்பின் போது, பலுசிஸ்தானில் பாக்கித்தானின் "ஆக்கிரமிப்பு " பற்றி இவர் குறிப்பிட்டார். [18]
தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் குடும்பம்[தொகு]
பலூச்சிற்கு இரண்டு உடன்பிறப்புகள் இருந்தனர், சமீர் பலோச் எனும் ஒரு சகோதரர் [19] மற்றும் மக்கஞ்ச் பலூச் எனும் ஒரு சகோதரி. [20] [21] இவர் டொராண்டோவில் சக பலூச் ஆர்வலரான ஹம்மல் பலோச்சை (ஹம்மல் ஹைதர் என்றும் அழைக்கப்படுகிறார்) மணந்தார். [21] [6] இவரது குடும்பத்தின் பல உறுப்பினர்கள் ஈரான் மற்றும் பாக்கித்தானில் பலூசிஸ்தான் கிளர்ச்சியுடன் தொடர்புடையவர்கள் ஆவர். [21]
சான்றுகள்[தொகு]
- ↑ "Grief, anger and a curfew as Pakistani activist Karima Baloch buried". The Guardian (ஆங்கிலம்). 25 January 2021. 25 January 2021 அன்று மூலம் பரணிடப்பட்டது. 25 January 2021 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ SL, TAI GABE DIGITALA (2020-12-22). "Hallan muerta a una destacada militante baluche refugiada en Canadá". naiz (ஸ்பானிஷ்). 2021-01-02 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ . 23 December 2020. https://www.theglobeandmail.com/canada/toronto/article-family-of-pakistan-dissident-karima-mehrab-urge-thorough-investigation/.
- ↑ Bharti, Bianca; Maric, Jelena (22 December 2020). "Police say death of Pakistani activist Karima Mehrab in Toronto was 'non-criminal' but others have doubts". National Post (ஆங்கிலம்). 12 January 2021 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Perkel, Colin (22 December 2020). "Anger, suspicion after Pakistani dissident Karima Mehrab found dead in Toronto". thestar.com (ஆங்கிலம்). 24 December 2020 அன்று மூலம் பரணிடப்பட்டது. 12 January 2021 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ 6.0 6.1 . 22 December 2020. http://www.theguardian.com/world/2020/dec/22/karima-baloch-pakistani-human-rights-activist-found-dead-in-canada.
- ↑ . 22 December 2020. https://www.hindustantimes.com/world-news/baloch-activist-vocal-about-pakistan-goes-missing-found-dead-in-toronto/story-ciSZbKkMPMx9MwyyPfGO9M.html.
- ↑ 8.0 8.1 8.2 "Karima Baloch: Pakistani rights activist found dead in Toronto". 22 December 2020. https://www.bbc.com/news/world-asia-55368524.
- ↑ Palet, Laura Secorun (18 October 2014). "Karima Baloch: Campaigning for Independence From Pakistan". OZY. 26 December 2020 அன்று மூலம் பரணிடப்பட்டது. 26 December 2020 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Karima Baloch: Activist's family mourns a 'mountain of courage'". 2020-12-24. https://www.bbc.com/news/world-asia-55434925.
- ↑ "Canadian police conclude investigation, term Karima Baloch's death 'non-criminal'". Dawn News. 23 December 2020. 24 December 2020 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Rakhi message for PM Modi from Balochistan: Be our brother, be our voice". The Indian Express (ஆங்கிலம்). 19 August 2016. 26 December 2020 அன்று மூலம் பரணிடப்பட்டது. 26 December 2020 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Allahu Akbar: Understanding the Great Mughal in Today's India. 18 October 2019. https://books.google.com/books?id=ZOOqDwAAQBAJ&q=Karima+Baloch&pg=PT99. பார்த்த நாள்: 26 December 2020.
- ↑ BBC 100 Women 2016: Who is on the list?
- ↑ "Two Pakistani women made it to BBC's 100 Women 2016 list". Dawn. 23 November 2016. 26 December 2020 அன்று மூலம் பரணிடப்பட்டது. 25 December 2020 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Prominent Baloch activist, vocal critic of Pakistan government, found dead in Toronto". Scroll.in (ஆங்கிலம்). 23 December 2020. 24 December 2020 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Deaths of Karima Baloch, Sajid Hussain bound to raise uncomfortable questions for Pakistan on Balochistan". Firstpost. 23 December 2020. 26 December 2020 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Bhattacharyya, Anirudh (27 March 2018). "Baloch activists want support from India without 'Kashmir lens'". Hindustan Times (ஆங்கிலம்). 26 December 2020 அன்று மூலம் பரணிடப்பட்டது. 26 December 2020 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Pak activist Karima Baloch's family seeks investigation into her death: MEA". Hindustan Times (ஆங்கிலம்). 2020-12-24. 2021-01-12 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Karima Baloch: Activist's family mourns a 'mountain of courage'". 2020-12-24. https://www.bbc.com/news/world-asia-55434925.
- ↑ 21.0 21.1 21.2 "Karima Baloch: Activist's family mourns a 'mountain of courage'". 24 December 2020. https://www.bbc.com/news/world-asia-55434925.