உள்ளடக்கத்துக்குச் செல்

கப்பலூர், மதுரை

ஆள்கூறுகள்: 9°50′09″N 78°02′02″E / 9.8359°N 78.0338°E / 9.8359; 78.0338
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கப்பலூர்
Kappalur
கப்பலூர் Kappalur is located in தமிழ்நாடு
கப்பலூர் Kappalur
கப்பலூர்
Kappalur
கப்பலூர், மதுரை (தமிழ்நாடு)
ஆள்கூறுகள்: 9°50′09″N 78°02′02″E / 9.8359°N 78.0338°E / 9.8359; 78.0338
நாடு இந்தியா
மாநிலம்Tamil Naduதமிழ்நாடு
மாவட்டம்மதுரை மாவட்டம்
ஏற்றம்
169 m (554 ft)
மொழிகள்
 • அலுவல்தமிழ், ஆங்கிலம்
 • பேச்சுதமிழ், ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இ.சீ.நே.)
அஞ்சல் குறியீட்டு எண்
625008[1]
அருகிலுள்ள ஊர்கள்மதுரை, திருமங்கலம், கரடிக்கல், ஆஸ்டின்பட்டி, தனக்கன்குளம்,திருநகர் மற்றும் திருப்பரங்குன்றம்
மாவட்ட ஆட்சித் தலைவர்மா. சௌ. சங்கீதா, இ.ஆ.ப.
மக்களவைத் தொகுதிவிருதுநகர் மக்களவைத் தொகுதி
சட்டமன்றத் தொகுதிதிருமங்கலம் (சட்டமன்றத் தொகுதி)
மக்களவை உறுப்பினர்மாணிக்கம் தாகூர்
சட்டமன்ற உறுப்பினர்ஆர். பி. உதயகுமார்
இணையதளம்https://madurai.nic.in

கப்பலூர் (ஆங்கிலம்: Kappalur) என்பது இந்திய தீபகற்பத்தில் தமிழ்நாடு மாநிலத்தின் மதுரை மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும்.

கடல் மட்டத்திலிருந்து சுமார் 169 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள கப்பலூர் பகுதியின் புவியியல் ஆள்கூறுகள், 9°50′09″N 78°02′02″E / 9.8359°N 78.0338°E / 9.8359; 78.0338 ஆகும். மதுரை, திருமங்கலம், கரடிக்கல், ஆஸ்டின்பட்டி, தனக்கன்குளம், திருநகர் மற்றும் திருப்பரங்குன்றம் ஆகியவை கப்பலூர் பகுதிக்கு அருகிலுள்ள சில முக்கியமான புறநகர்ப் பகுதிகளாகும்.

கப்பலூர் பகுதியில் நெடுஞ்சாலை சுங்கச்சாவடி ஒன்று செயல்படுகிறது.[2] மேலும், கப்பலூரில் (SIDCO) தொழிற்பேட்டை ஒன்றும் இயங்கி வருகிறது.[3]

சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் இந்திய மென்பொருள் சேவை நிறுவனமான ஜோஹோ (Zoho), மதுரை கப்பலூர் பகுதியில் 1300 பேர்களுக்கு வேலை வாய்ப்புகள் அளித்து, தன் கிளை ஒன்றைத் தொடங்க இருக்கிறது.[4]

இப்பகுதியிலுள்ள அம்மச்சியார் கோயில்,[5] அய்யனார் கோயில்[6] மற்றும் வரதராஜ பெருமாள் கோயில்[7] ஆகியவை தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் இயங்குகின்றன.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "KAPPALUR Pin Code - 625008, Tirumangalam All Post Office Areas PIN Codes, Search MADURAI Post Office Address". news.abplive.com. Retrieved 2023-07-24.
  2. தினத்தந்தி (2023-07-23). "கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்றக்கோரி நெடுஞ்சாலைத்துறை அதிகாரி கார் சிறைபிடிப்பு". www.dailythanthi.com. Retrieved 2023-07-24.
  3. "கப்பலூர் சிட்கோவில் தீவிபத்து... வெடித்து சிதறிய பேரல்கள்...3 மணிநேரம் போராடி தீயை அணைத்த வீரர்கள்". Lemooriya News Tamil (in அமெரிக்க ஆங்கிலம்). 2022-10-15. Retrieved 2023-07-24.
  4. "ZOHO Jobs; மதுரை ஜோஹோ நிறுவனத்தில் 1300 பணியிடங்கள்; வாய்ப்பை தவறவிடாதீர்கள்!". Indian Express Tamil. 2023-03-17. Retrieved 2023-07-24.
  5. "Arulmigu Ammachiyar Temple, Kappalur - 625008, Madurai District [TM032973].,". hrce.tn.gov.in. Retrieved 2023-07-24.
  6. "Arulmigu Ayyanar Temple, Kappalur - 625008, Madurai District [TM032972].,". hrce.tn.gov.in. Retrieved 2023-07-24.
  7. "Arulmigu Varatharaja Perumal Temple, Kappalur - 625008, Madurai District [TM032971].,". hrce.tn.gov.in. Retrieved 2023-07-24.

வெளி இணைப்புகள்

[தொகு]

[1]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கப்பலூர்,_மதுரை&oldid=4307918" இலிருந்து மீள்விக்கப்பட்டது