கபில தீர்த்தம்

ஆள்கூறுகள்: 13°39′23″N 79°25′15″E / 13.65639°N 79.42083°E / 13.65639; 79.42083
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கபில தீர்த்தம்
கபில தீர்த்தம் is located in ஆந்திரப் பிரதேசம்
கபில தீர்த்தம்
ஆந்திரப் பிரதேசத்தில் அமைவிடம்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:ஆந்திரப் பிரதேசம்
மாவட்டம்:சித்தூர்
அமைவு:திருப்பதி
ஆள்கூறுகள்:13°39′23″N 79°25′15″E / 13.65639°N 79.42083°E / 13.65639; 79.42083
கோயில் தகவல்கள்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:திராவிடக் கட்டிடக்கலை
கல்வெட்டுகள்:சமசுகிருதம் திராவிட மொழிகள்
வரலாறு
கோயில் அறக்கட்டளை:திருமலை திருப்பதி தேவஸ்தானம்
இணையதளம்:tirupati.org

 

கபில தீர்த்தம் (Kapila Theertham) என்பது புகழ்பெற்ற சிவன் கோயில் மற்றும் தீர்த்தம் ஆகும். இது இந்தியாவின் ஆந்திராவின் சித்தூர் மாவட்டத்தில் திருப்பதியில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் உள்ள சிவன் திரு உருவச்சிலை கபிலா முனியால் நிறுவப்பட்டதாக நம்பப்படுகிறது. எனவே இங்குள்ள சிவன் கபிலேசுவரா என்று குறிப்பிடப்படுகிறார்.

சேசாசசலம் மலையின் ஒரு பகுதியாக இருக்கும் திருமலை மலைகளின் அடிவாரத்தில் செங்குத்தான மற்றும் செங்குத்து முகங்களில் ஒன்றில் மலைக் குகை ஒன்றின் நுழைவாயிலில் இந்த கோயில் அமைந்துள்ளது. இங்கு மலை ஓடையின் நீர் நேரடியாக "கபில தீர்த்தம்" என்று அழைக்கப்படும் கோயில் தெப்பக்குளத்தில் விழுகிறது. பெரிய கல்லினால் ஆன "நந்தி" கோயிலின் நுழைவாயிலில் அமர்ந்த நிலையில் பக்தர்களுக்கும் வழிப்போக்கர்களுக்கும் அருள் பாலிக்கின்றது.

சொற்பிறப்பியல்[தொகு]

கோயிலின் பெயரும் தீர்த்தத்தின் பெயரும் கபிலா முனியிலிருந்து பெறப்பட்டன.[1]

புராணம்[தொகு]

இந்தக் கோயில் புராணத்தின் படி, கபிலா முனி இந்த இடத்தில் சிவனை வேண்டி தவம் செய்ததாகவும், முனியின் பக்தியால் சிவனும் பார்வதியும் காட்சி தந்தனர்.[1] இந்த கோயிலில் உள்ள இலிங்கம் சுயமாகத் தோன்றிய சுயம்புலிங்கம் என்று நம்பப்படுகிறது.[1] கபிலா முனி புஷ்கரிணியில் (தீர்த்தம்) உள்ள பிலத்திலிருந்து (குழி) பூமியில் அவதரித்ததாக நம்பப்படுகிறது.[1]

வரலாறு[தொகு]

13 ஆம் நூற்றாண்டு முதல் 16 ஆம் நூற்றாண்டு வரை விசயநகர மன்னர்கள் கோயிலைச் சிறப்பாக நிர்வகித்து வந்துள்ளனர். இவர்களில் குறிப்பிடத்தக்கவர்களாகச் சாளுவ நரசிம்ம தேவ ராயன், கிருஷ்ணதேவராயன், மற்றும் பிற்கால ஆட்சியாளர்களான வெங்கடபதி ராயா, மற்றும் அலியா ராமராய, ஸ்ரீ கிருஷ்ணா தேவாராயாவின் மருமகன் உள்ளனர்.[மேற்கோள் தேவை]

நிர்வாகம்[தொகு]

தற்போது இந்த கோயில் திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகத்தின் கீழ் உள்ளது.[2] இதனால் இந்த கோயில் தொடர்ச்சியான பாதுகாப்பையும், நிலைத்தன்மையையும் பெறுகிறது. வருடாந்திர திருவிழாக்கள் பெரும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.[2]

மத முக்கியத்துவம்[தொகு]

கார்த்திகை மாதத்தில் "முக்கோட்டி" தினத்தன்று பவுர்ணமியில் மூன்று உலகங்களில் அமைந்துள்ள அனைத்து தீர்த்தங்களும் இந்த கபில தீர்த்தத்தில் நண்பகலில் பத்து 'கட்டிகாக்களுக்கு' ஒன்றிணைகின்றன (ஒரு கட்டிகா சமம் 24 நிமிடங்கள்).[1] அந்த புனித நேரத்தில் இதில் தீர்த்தமாடும் நபர்கள் பிறப்பு மற்றும் இறப்பு சுழற்சியிலிருந்து விடுதலை அடைவார்கள் என்று நம்பப்படுகிறது. மேலும், முன்னோர்களை வணங்கிக் கடந்த காலங்களில் செய்த பாவங்களிலிருந்து விடுபடலாம்.

பண்டிகைகள்[தொகு]

இக்கோவிலில் அனைத்து சைவ சமய முக்கிய திருவிழாக்களும் கொண்டாடப்படுகிறது. இதில் முக்கியமானவை மகா சிவராத்திரி, திருக் கார்த்திகை தீபம், விநாயகர் சதுர்த்தி, ஆடிக்கிருத்திகை ஆகும். கபிலேசுவர சுவாமியின் பிரம்மோத்சவம் பிப்ரவரி மாதத்தில் கொண்டாடும் கோயிலின் முக்கியத் திருவிழாவாகும்.[3] இது ஒன்பது நாள் நடைபெறும் நிகழ்வாகும். திருவிழாவின் போது சிவன் மற்றும் பார்வதி ஊர்வலம் அம்சா வாகனத்தில் தொடங்கி திரிசூல ஸ்தானத்துடன் (சிவனின் திரிசூலம் தீர்த்தமாடல்) முடிவடையும்.[3][4]

துணை ஆலயங்கள்[தொகு]

இந்த கோயிலில் பல துணை சன்னதிகள் உள்ளன. காமாட்சி, சிவன், விநாயகர், சுப்பிரமணியன், அகத்தீசுவரர், ருக்மிணி சத்தியபாம சமேயோத ஸ்ரீகிருஷ்ணா என்பன அவற்றில் சில.

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 "Tirumala Tirupati Devasthanams-Sri Kapileswara Swamy Temple". Tirumala Tirupati Devasthanams. Archived from the original on 9 October 2015. பார்க்கப்பட்ட நாள் 31 July 2015.
  2. 2.0 2.1 "KAPILATEERTHAM DECKS UP FOR THE BIG EVENT-MAHA SHIVA RATHRI MAHOTSAVAM". Tirumala Tirupati Devasthanams. Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2015-08-20.
  3. 3.0 3.1 "SRI KAPILESWARA SWAMY TEMPLE ANNUAL FETE BEGINS WITH DHWAJAROHANAM". Tirumala Tirupati Devasthanams. Archived from the original on 2015-10-02. பார்க்கப்பட்ட நாள் 2015-08-20.
  4. "RELIGIOUS FERVOUR MARKS "TRISHULA SNANAM"". Tirumala Tirupati Devasthanams. Archived from the original on 2015-10-02. பார்க்கப்பட்ட நாள் 2015-08-20.

 

"https://ta.wikipedia.org/w/index.php?title=கபில_தீர்த்தம்&oldid=3594252" இலிருந்து மீள்விக்கப்பட்டது