கன்னிமாரா பொது நூலகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கன்னிமாரா பொது நூலகம்
Connemara Public Library.jpg
கன்னிமாரா பொது நூலகம்
நாடுஇந்தியா
வகைபொது நூலகம்
நிறுவப்பட்டது5 திசம்பர் 1896
அமைவிடம்எழும்பூர், சென்னை, தமிழ்நாடு
சேகரிப்பு
சேகரிக்கப்பட்ட உருப்படிகள்நூல்கள், ஆய்விதழ்கள், இதழ்கள், புடையெழுத்து நூல்கள், கையெழுத்துப்படிகள்
இணையதளம்http://www.connemarapubliclibrarychennai.com/
தொலைபேசி எண்044-28193751

சென்னையிலுள்ள கன்னிமாரா பொது நூலகம் (Connemara Public Library) இந்தியாவின் களஞ்சிய நூலகங்களில் ஒன்றாகும். ஆதலால் இந்தியாவில் வெளியிடப்படும் அனைத்து புத்தகங்கள், நாளிதழ்கள் மற்றும் சஞ்சிகைகள் ஆகியவற்றின் ஒரு படி (பிரதி) இங்கு பெறப்படும். 1890-இல் நிறுவப்பட்ட இந்நூலகத்தில் நாட்டின் மதிக்கத்தக்க, புகழ்பெற்ற பழமையான புத்தகங்கள் பாதுகாக்கப்படுகின்றன. மேலும் இது ஐக்கிய நாடுகளின் களஞ்சிய நூலகமாகவும் உள்ளது.

வரலாறு[தொகு]

கன்னிமாரா நூலகத்தின் ஆரம்பம் 1860-ல் தொடங்குகிறது. அன்றைய பிரிட்டிசு இந்தியப் பேரரசின், மதராசு மாகணத்தின் மதராசு அருங்காட்சியகத்தின் ஒரு பகுதியாக சிறு நூலகம் கேப்டன் ஜீன் மிட்செலால் துவக்கப்பட்டது.[1] இங்கிலாந்தின் எய்லிபரி கல்லூரியில் நூற்றுக்கணக்கான புத்தகங்கள் தேவைக்கதிகமாக இருந்தன, அவையாவும் மதராசு மாகணத்துக்கு அனுப்பப்பட்டன. அவை மதராசு அருங்காட்சியகத்துக்கு அளிக்கப்பட்டன. பிரிட்டிசு அருங்காட்சியக-நூலக மாதிரியின் அடிப்படையில் அமைக்கப்பட்ட இந்நூலகம் 1890 வரை அருங்காட்சியகத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது. அன்றைய மதராசு மாகாணத்தின் ஆளுநராக இருந்த கன்னிமாரா பிரபு, மாகாணத்துக்கான பொது நூலகம் அமைக்கும் தேவையை உணர்ந்து 1890 ஆம் ஆண்டு மார்ச் 22 ஆம் நாள் அடிக்கல் நாட்டினார். 1896 ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் நாள் பொதுமக்களுக்குத் திறக்கப்பட்டது. திறக்கப்பட்டபோது அவர் ஆட்சியில் இல்லாவிடினும் அவருடைய பெயரே நூலகத்துக்கும் சூட்டப்பட்டது.

1948-ஆம் ஆண்டு மதராசு பொது நூலகச் சட்டத்தின்படி, (இச்சட்டமே இந்தியாவிலேயே முதன் முதலில் பொதுநூலகங்களை அங்கீகரித்து, அமைத்து, நிர்வகித்தல் சம்பந்தமான முக்கிய செயல்பாடு ஆகும்) கன்னிமாரா பொது நூலகம் மாநிலத்தின் மைய நூலகமாயிற்று.[2]

கட்டமைப்புக் கலைகளின் ஒருங்குமையைக் குறிக்குமாறு அமைந்த கட்டிடங்களோடு 1973-இல் மேலும் ஒரு கட்டிடம் கட்டப்பட்டது. இவற்றில், வார இதழ்கள்-நாளிதழ்கள் பிரிவு, பாடப்புத்தகப் பிரிவு, குறிப்புதவிப் பிரிவு, இந்திய மொழிகள் பிரிவு, வேற்றுமொழி இலக்கியங்கள் பிரிவு, காணொளி பிரிவு ஆகியவற்றோடு இந்திய ஆட்சிப் பணி தேர்வு ஆயத்தத்துக்கான தனித்துவ பிரிவு ஆகியவை இருக்கின்றன. நூலகம் முழுமைக்கும் கணினிமயப்படுத்தல் முடிவுறும் தறுவாயில் உள்ளது. இங்கு மொத்தம் ஆறு இலட்சத்துக்கும் மேலான புத்தகங்கள் உள்ளன.

1981-ஆம் ஆண்டு இந்திய நடுவண் அரசின் ஆணைப்படி கன்னிமாரா பொது நூலகம் நாட்டின் களஞ்சிய நூலகமானது.[3] நாட்டில் மொத்தம் நான்கு களஞ்சிய நூலகங்கள் உள்ளன. எனினும் கன்னிமாரா பொது நூலகம், நூலக அமைப்புகள் மற்றும் நிறுவனங்களின் பன்னாட்டுக் கூட்டமைப்பில் பதிவுபெற்ற உறுப்பினராக இல்லை.[4]

வெளி இணைப்புகள்[தொகு]

மேலும் பார்க்க[தொகு]

உசாத்துணைகள்[தொகு]

  1. Patel, Jashu; Kumar, Krishan (2001). Libraries and Librarianship in India. Westport, Connecticut: Greenwood Press. பக். 80. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-313-29423-5. http://books.google.com/books?id=KXVrsPSzeNAC. 
  2. Bhattacharjee, R. (2002). "Public Library Services in India: Systems and Deficiencies". Country Report: India—2002. International Federation of Library Associations and Institutions. பார்த்த நாள் 1-Jul-2012.
  3. Taher, Mohamed (1994). Librarianship and library science in India: an outline of historical perspectives. Concepts in communication informatics & librarianship. 60. New Delhi: Concept Publishing Company. பக். 97. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-7022-524-9. http://books.google.com/books?id=qRLXDBX5KzkC. 
  4. Ramanathan, M. (16–31 May 2010). "A user's view of Connemara Library". Madras Musings XX (3). http://madrasmusings.com/Vol%2020%20No%203/a-users-view-of-connemara-library.html. பார்த்த நாள்: 1-Jul-2012.