கனரா முத்துப் புள்ளி
முத்துப்புள்ளி மீன் | |
---|---|
பிரான்சிசு டே வரைந்த ஓவியம் (1878) | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | சிச்சிலிடு
|
பேரினம்: | |
இனம்: | எ. கனரென்சிசு
|
இருசொற் பெயரீடு | |
எட்ரோபிளசு கனரென்சிசு பிரான்சிசு டே, 1877 |
எட்ரோபிளசு கனரென்சிசு என்பது கனரா முத்துப் புள்ளி (Canara pearlspot) அல்லது பட்டை குரோமைடு, கனரா முத்துப் புள்ளி சிச்லிடு, இந்தியாவில் தென் கர்நாடகாவைச் சேர்ந்த அருகிய சிச்லிடு மீன் சிற்றினமாகும்.[2]
வாழ்விடம் மற்றும் விநியோகம்[தொகு]
ஆசியாவைச் சேர்ந்த சில வகையான சிக்லிடு வகைகளுள் இதுவும் ஒன்றாகும். மேலும் எட்ரோபிளசு பேரினத்தினைச் சார்ந்த பிற சிற்றினங்களைப் போல இந்த மீனினம் உவர் நீரில் காணப்படுவதில்லை. நன்னீரில் மட்டுமே காணப்படுகிறது.[2]
அளவு[தொகு]
கனரா முத்துப் புள்ளி சிச்சிலிடின் உடல் நீளம் 11.5 சென்டிமீட்டர்கள் (4.5 அங்) நீளம் வரை வளரக்கூடியன.[3]
மீன்காட்சியகத்தில்[தொகு]
இது மிகவும் விரும்பப்படும் சிச்லிடு மற்றும் நீர்வாழ் உயிரினங்கள் காட்சிச்சாலையில் அரிதாகக் காணப்படும் சிச்லிடு மீன் இனமாகும். சமீப காலங்களில் செயற்கை வளரிடங்களில் இனப்பெருக்கம் செய்வதாகக் கூறப்படுகிறது.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Ali, A. (2011). "Etroplus canarensis". The IUCN Red List of Threatened Species 2011: e.T169618A6655376. doi:10.2305/IUCN.UK.2011-1.RLTS.T169618A6655376.en.
- ↑ 2.0 2.1 "Etroplus canarensis". FishBase. Ed. Ranier Froese and Daniel Pauly. February 2013 version. N.p.: FishBase, 2013.
- ↑ "Etroplus canarensis". FishBase. Ed. Ranier Froese and Daniel Pauly. February 2013 version. N.p.: FishBase, 2013.
வெளி இணைப்புகள்[தொகு]
- E canarensis cichlid-forum.com