எட்ரோபிளசு
Appearance
எட்ரோபிளசு | |
---|---|
எட்ரோபிளசு சுராடென்சிசு | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | சிச்சிலிடே
|
பேரினம்: | எட்ரோபிளசு குவெயிர், 1830
|
மாதிரி இனம் | |
எட்ரோபிளசு மெலாகிரிசு குவெயிர், 1830 |
எட்ரோபிளசு (Etroplus) என்பது சிச்சிலிட் மீன் பேரினம் ஆகும். இவை இந்தியாவின் தென்பகுதி மற்றும் இலங்கையினைச் சார்ந்தது. சூடெட்ரோபிளசுடன் (இது முன்னர் எட்ரோபிளசுடன் உள்ளடக்கப்பட்டிருந்தது) இப்பகுதியில் மட்டும் காணப்படும் சிச்சிலிட் இவை.[1]
இவற்றின் நெருங்கிய உறவினராக பாரெட்ரோபிளசு மடகாசுகரில் காணப்படுகின்றது. இவை இரண்டும் மீசோசூயிக் காலத்தில் பிரிந்திருக்கலாம். மடகாசுகரும் இந்தியப் புவித்தட்டும் கிரீத்தேசியக் காலத்தின் முடிவில் பிரிந்ததைப் போல, இந்த இரண்டு பரம்பரைகளும் மீசோசோயிக் காலத்தில் பிரிந்திருக்க வேண்டும்.[2]
சிற்றினங்கள்
[தொகு]இந்த பேரினத்தில் தற்போது இரண்டு அங்கீகரிக்கப்பட்ட சிற்றினங்கள் உள்ளன. மூன்றாவது சிற்றினமான, ஆரஞ்சு குரோமைடு, 2014-ல்[1] சூடெட்ரோபிளசுடன் இணைக்கப்பட்டது ஆனால் பிசுபேசில் இவை இன்னும் எட்ரோப்ளசில் வைக்கப்பட்டுள்ளது.
- எட்ரோபிளசு கனரென்சிசு (பிரான்சிசு டே, 1877) (கனரா முத்துப் புள்ளி)
- எட்ரோபிளசு மேகுலேடசு (பிளாச்சு, 1795) (ஆரஞ்சு குரோமைடு)
- எட்ரோபிளசு சுராடென்சிசு ( பிளாச்சு, 1790) (பச்சை குரோமைடு)
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Pethiyagoda, R., Maduwage, K. & Manamendra-Arachchi, K. (2014): Validation of the South Asian cichlid genus Pseudetroplus Bleeker (Pisces: Cichlidae). Zootaxa, 3838 (5): 595–600.
- ↑ Sparks, J.S. (2004): Molecular phylogeny and biogeography of the Malagasy and South Asian cichlids (Teleostei: Perciformes: Cichlidae). Molecular Phylogenetics and Evolution, 30 (3): 599–614.