உள்ளடக்கத்துக்குச் செல்

கத்தோலிக்கத் தேவாலயப் பாலியல் துன்புறுத்தல் வழக்குகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தியோடர் எட்கர் மெக்காரிக் (பிறப்பு 1930), பிரார்த்தனை மற்றும் தவ வாழ்க்கைக்கு, போப் பிரான்சிஸ் 2018-ஆம் ஆண்டில் உத்தரவிட்டார்.[1] பெரியவர்கள் மற்றும் சிறார்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் ஆகிய குற்றங்களுக்காக தியோடர் எட்கர் மெகாரிக் பிப்ரவரி 2019-ஆம் ஆண்டில் கத்தோலிக்க மத குருமார் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். [1] இவர் மீதான பாலியல் குற்றம் உறுதியானதைத் தொடர்ந்து 2019-இல் மதகுருமார் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.[2]
போப் பிரான்சிஸ் 2018-ஆம் ஆண்டில் சிலி நாட்டின் கத்தோலிக்க மதகுருமார்களிடையே பேசும் காட்சி

உலக நாடுகளில் உள்ள கத்தோலிக்க திருச்சபைகளின் பாதிரியார்கள், கன்னியாஸ்திரிகள் மற்றும் திருச்சபை உறுப்பினர்களால், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்களுக்கு எதிராகத் தொடரப்பட்ட பல வழக்குகள் உள்ளது.[3] 20 மற்றும் 21-ஆம் நூற்றாண்டுகளில் குழந்தைகள் பாலியல் துன்புறுத்தல் வழக்குகளில் எழுப்பப்பட்ட குற்றச்சாட்டுகள், குற்றங்கள், விசாரணைகள், திருச்சபை நிர்வாகிகளால் குழந்தைகள் பாலியியல் துன்புறுத்தல்களை மறைக்க முயன்றனர்.[4]

பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான பெரும்பாலான குழந்தைகளில் பெண் குழந்தைகள் அதிகமாகும். பாதிக்கப்பட்ட பெண் குழந்தைகளின் வயது 11 மற்றும் 14 இடைப்பட்டவர்களே அதிகமாவர்.[5][6][7]

மத குருமார்களின் பாலியியல் குற்ற வழக்குகளில் பெரும்பாலும் பெரியவர்களுக்கு இழைக்கப்படும் பாலியல் துன்புறுத்தலை உள்ளடக்குவதில்லை. குழந்தைகள் தொடர்பான பாலியல் துன்புறுத்தல்கள் மற்றும் மறைப்புகள் பற்றிய குற்றச்சாட்டுகள் 1980-ஆம் ஆண்டுகளின் பிற்பகுதியில் பொதுமக்களின் கவனத்தைப் பெறத் தொடங்கியது.

கனடா, அயர்லாந்து, சிலி, ஆஸ்திரேலியா, ஐக்கிய அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் கத்தோலிக்க திருச்சபைகளில் குழந்தைகள் பாலியல் துன்புறுத்தல் வழக்குகள் 1990-களில் அதிகம் பதிவானது.[8][9][10]

ஐக்கிய அமெரிக்காவில் 2002-ஆம் ஆண்டில், தி பாஸ்டன் குளோப் செய்தி இதழின் விசாரணை மூலம் வெளிவந்த, குழந்தைகள் பாலியியல் துன்புறுத்தல்கள் குறித்தான செய்திகள் ஊடகங்களில் பரவலாக பேசப்பட்து. ஐரோப்பா, ஆஸ்திரேலியா, சிலி மற்றும் ஐக்கிய அமெரிக்காவில் பரவலான திருச்சபைகளில் நடைபெறும் குழந்தைகள் பாலியியல் துன்புறுத்தல்களை மறைக்கும் வகையில் கத்தோலிக்க திருச்சபைகள் செயலாற்றியது.[note 1]

கத்தோலிக்க ஆட்சிப் பீடம் 2001-ஆம் ஆண்டு முதல் 2010-ஆம் ஆண்டு வரையில் 3,000 கத்தோலிக்க மத குருமார்கள் நடத்திய சிறார்கள் மீதான பாலியியல் துன்புறுத்தல்கள் குறித்து விசாரணை செய்தது.[11] ரோமன் கத்தோலிக்க தேவாலயம் பற்றி அறிவுள்ள மறைமாவட்ட அதிகாரிகள் மற்றும் கல்வியாளர்கள் மதகுருமார்களின் பாலியல் துஷ்பிரயோகம் குறித்து பொதுவாக விவாதிக்கப்படுவதில்லை. எனவே அளவிடுவது கடினம்.[12]

கத்தோலிக்க மதகுருமார்களின் குழந்தைகள் மீதான பாலியியல் துன்புறுத்தல்களை, ஊடகங்கள் அதிகப்படியாக ஊதி பெரிதாக்குகிறது என்றும், இதே போன்ற துன்புறுத்தல்கள் வேறு சமயகளில் நடைபெறுகின்றது என்றும், இப்பிரச்சினைகள் தேவாலயத்திற்குள் தீர்க்க்கப்படும் என திருச்சபை உறுப்பினர்கள் வாதிடுகின்றனர்.[13]2001-ஆம் ஆண்டில் தேவாலயத்திற்குள் நடைபெறும் பாலியியல் துன்புறுத்தல்கள் குறித்து போப் ஜான் பால் வெளிப்படையாக மன்னிப்புக் கோரினார்.[14]

பிரான்சில்

[தொகு]

பிரான்சு நாட்டின் கத்தோலிக்க திருச்சபைகளில் பாதிரியார்கள் மற்றும் பிசப்புகளால் 1950-ஆம் ஆண்டு முதல் சுமார் 2,16,000 குழந்தைகள் - பெரும்பாலும் சிறுவர்கள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளாகியுள்ளனர் என்று ஒரு புதிய விசாரணை கண்டறிந்துள்ளது. சிறார் பாலியல் துஷ்பிரயோகத்தில் 2,900 முதல் 3,200 வரையிலான கத்தோலிக்க மதகுருமார்கள் ஈடுப்பட்டிருப்பதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. விசாரணை அறிக்கையில் ஆவணப்படுத்தப்பட்டுள்ள பல ஆயிரக்கணக்கான சிறுவர் துஷ்பிரயோக வழக்குகளில் கத்தோலிக்க தேவாலயமே "நிறுவனப் பொறுப்பு" என்பதை ஏற்றுக்கொண்டதாக பிரெஞ்சு ஆயர்கள் 5 அக்டோபர் 2021 அன்று தெரிவித்தனர். [15][16][17][18]இத்தவற்றின் பிராயசித்தமாக பிரான்சு நாட்டின் அனைத்து கிறித்துவ கத்தோலிக்கப் பாதிரியார்கள் தவம் மற்றும் ஜெபத்தில் ஈடுபட்டுள்ளனர்.[19]

இந்தியாவில்

[தொகு]

2014-ஆம் ஆண்டில் கேரளா மாநிலத்தின் திருச்சூரில் உள்ள புனித ஜான் பால் தேவாலயத்த்தின் பங்கு தந்தை இராஜூ கொக்கன், 9 வயது சிறுமியை தனது அலுவலகத்தில் வைத்து பல முறை பாலியியல் வல்லுறவு செய்தமை குறித்தான விடயம் 25 ஏப்ரல் 2014 அன்று வெளிப்பட்டது. 5 மே 2014 அன்று பாதிரியார் காவல் துறையால் கைது செய்யப்பட்டார்.[20][21]

2017-ஆம் ஆண்டில் கண்ணூரில் உள்ள புனித செபாஸ்டியான் தேவாலயப் பங்குத் தந்தை இராபின் வடக்கஞ்சேரி, 15 வயது சிறுமியை துன்புறுத்தி பாலியியல் துன்புறுத்தல்களால் ஒரு குழந்தையைப் பெற்ற வழக்கில் கைது செய்யப்பட்டார். [22] [23] இந்த வழக்கில் பங்குத் தந்தை இராபின் வடக்கஞ்சேரிக்கு 20 ஆண்டு கடுங்காவல் தண்டனை நீதிமன்றம் வழங்கியது.[24]

2018-ஆம் ஆண்டில் ஆயர் பிராங்கோ மூலக்கல் ஒரு கன்னியாஸ்திரியை பாலியல் துன்புறுத்தல் வழக்கில் கேரளா காவல்துறை 21 செப்டம்பர் 2018 அன்று கைது செய்தது. கைதான ஆயர் பிராங்கோ மூலக்கல்லை வாத்திகன் திருச்சபை, தற்காலிகமாக சமயப் பணியிலிருந்து விடுவித்தது.[25]

இதனையும் காண்க

[தொகு]

குறிப்புகள்

[தொகு]
  1. *In Ireland, a 2009 report (see Commission to Inquire into Child Abuse) covered cases during a span of six decades (from the 1950s), noting "endemic" sexual abuse in Catholic boys' institutions, with church leaders aware of the abuse, and government inspectors failing to "stop beatings, rapes and humiliation".("Police examine sex abuse report: The commission's report on church abuse ran to five volumes Police in the Irish Republic are examining if criminal charges can be brought over a damning report on child sex abuse at Catholic institutions.". BBC News. 25 May 2009. http://news.bbc.co.uk/2/hi/uk_news/northern_ireland/8066994.stm. )
    • ஆஸ்திரேலியாவில் கத்தோலிக்க தேவாலயம் தொடர்பான பாலியல் துன்புறுத்தல்கள் காரணமாக கத்தோலிக்க பாதிரியார்கள் மீது நூற்றும் மேற்பட்ட நிலுவையில் உள்ளது.("Black Collar Crime in Australia". Broken Rites. 28 August 2011. பார்க்கப்பட்ட நாள் 18 September 2011.)(Campbell, James (29 August 2010). "Church must face scrutiny for child sex abuse". Sunday Herald Sun (Australia). http://www.heraldsun.com.au/opinion/church-must-face-scrutiny-for-child-sex-abuse/story-fn5sqiu3-1225911324431. )
    2012-இல் ஆஸ்திரேலிய காவல் துறை அறிக்கையில், விக்டோரியா மாநிலத்தில் கத்தோலிக்க மதகுருமார்களின் துஷ்பிரயோகத்துடன் தொடர்புடைய 40 தற்கொலை மரணங்களை விவரிக்கிறது.(Nick McKenzie, Richard Baker and Jane Lee. Church's suicide victims. Canberra Times, 13 April 2012. http://www.canberratimes.com.au/victoria/churchs-suicide-victims-20120412-1wwox.html பரணிடப்பட்டது 13 சூன் 2012 at the வந்தவழி இயந்திரம் accessed 2 July 2012)

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 US prelate McCarrick resigns from College of Cardinals (AP)
  2. Holy See Press Office(16 February 2019). "Comunicato della Congregazione per la Dottrina della Fede, 16.02.2019". செய்திக் குறிப்பு.
  3. Catholic Church child sexual abuse scandal
  4. Tara Isabella Burton, New Catholic sex abuse allegations show how long justice can take in a 16-year scandal, Vox, 20 August 2018
  5. "Hundreds of priests shuffled worldwide, despite abuse allegations". USA Today. Associated Press. 20 June 2004. https://www.usatoday.com/news/religion/2004-06-19-church-abuse_x.htm. 
  6. Stephens, Scott (27 May 2011). "Catholic sexual abuse study greeted with incurious contempt". ABC Religion and Ethics. http://www.abc.net.au/religion/articles/2011/05/27/3229135.htm. 
  7. Lattin, Don (17 July 1998). "$30 Million Awarded to Men Molested by 'Family Priest' / 3 bishops accused of Stockton coverup". San Francisco Chronicle. http://www.sfgate.com/news/article/30-Million-Awarded-Men-Molested-by-Family-3001550.php. "Attorney Jeff Anderson said the Howard brothers were repeatedly molested between 1978 and 1991, from age 3 to 13." 
  8. MOORE, Chris, Betrayal of Trust: The Father Brendan Smyth Affair and the Catholic Church; Marino 1995, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-86023-027-X; the producer's book about the programme's content
  9. "The Pope Meets the Press: Media Coverage of the Clergy Abuse Scandal". Pew Research Center. 11 June 2010. http://pewforum.org/Christian/Catholic/The-Pope-Meets-the-Press--Media-Coverage-of-the-Clergy-Abuse-Scandal.aspx. 
  10. William Wan (11 June 2010). "Study looks at media coverage of Catholic sex abuse scandal". The Washington Post இம் மூலத்தில் இருந்து 14 ஜூன் 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100614103400/http://newsweek.washingtonpost.com/onfaith/undergod/2010/06/study_looks_at_media_coverage_of_catholic_sex_abuse_scandal.html. 
  11. Lewis, Aidan (4 May 2010). "Looking behind the Catholic sex abuse scandal". BBC News. http://news.bbc.co.uk/2/hi/8654789.stm. 
  12. Paulson, Michael (8 April 2002). "World doesn't share US view of scandal: Clergy sexual abuse reaches far, receives an uneven focus". The Boston Globe. https://www.boston.com/globe/spotlight/abuse/print/040802_world.htm. 
  13. Butt, Riazat; Asthana, Anushka (28 September 2009). "Sex abuse rife in other religions, says Vatican". தி கார்டியன் (London). https://www.theguardian.com/world/2009/sep/28/sex-abuse-religion-vatican. 
  14. Pope sends first e-mail apology; BBC; 23 November 2001
  15. French Church abuse: 216,000 children were victims of clergy – inquiry
  16. French bishops recognise church ‘responsibility’ for decades of child sex abuse
  17. Sexual Abuse Revelations Accelerate Sense of a French Church in Retreat
  18. French Catholic Church recognizes 'responsibility' for child sex abuse
  19. சிறார் பாலியல் அத்துமீறல்; பாவத்தை போக்க பிரஞ்சு தேவாலய பாதிரியார்கள் தவம்
  20. "Kerala church priest, accused of raping nine-year-old, arrested". indiatoday.intoday.in. பார்க்கப்பட்ட நாள் 21 April 2016.
  21. "Priest Charged with Raping Minor". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 21 April 2016.
  22. "Kerala priest held for rape of minor who gave birth". Indianexpress.com. 28 February 2017. பார்க்கப்பட்ட நாள் 29 October 2017.
  23. Shehab Khan (March 2017). "Church blames 'consumerism' and 'temptations of body' after Catholic priest 'rapes 15-year-old girl'". The Independent. https://www.independent.co.uk/news/world/asia/catholic-priest-rape-15-year-old-girl-kerala-india-mathew-vadakkacheril-consumerism-temptations-sex-a7613406.html. 
  24. "Kerala priest Fr. Robin gets 20 years in jail for raping, impregnating minor girl". TheNewsMinute.com. 16 February 2019.
  25. PTI. "Kerala Catholic bishop arrested over nun's rape". @businessline (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 7 December 2018.