கன்னியாஸ்திரி அபயா கொலை வழக்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கன்னியாஸ்திரி அபயா கொலை வழக்கு என்பது கேரளா மாநிலத்தில் 27 மார்ச் 1992ல் நிகழ்ந்த கன்னியாஸ்திரி அபயாவின் கொலை குறித்த வழக்காகும். தொடக்கத்தில் தற்கொலை என முடிவு செய்து காவல்துறை இந்த வழக்கை முடித்தார்கள். ஆனால் உடனிருந்த கன்னியாஸ்திரிகளின் போராட்டத்தால், இவ்வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. அதன் பின்பு அபயா பாதிரியார்கள் இருவரால் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

சம்பவம்[தொகு]

கேரளாவின் கோட்டயம் நகரில் 19 வயதான கன்னியாஸ்திரி அபயா 27 மார்ச் 1992 அன்று பள்ளியின் கிணற்றில் இறந்துகிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. [1] உள்ளூர் காவல்துறை இந்த மரணத்தினை தற்கொலை என்று வழக்கினை முடித்தாலும், கன்னியாஸ்திரியுடன் படித்தவர்கள் போராட்டத்தினால் வழக்கினை சி.பி.ஐ ஏற்றது.

மார்ச் 1993ல் சிபியை அதிகாரியான தாமஸ் வர்கீஸ் இந்த வழக்கினை கையாண்டார். அவர் 30 டிசம்பர் 1993ல் தனது வேலையை இராஜனாமா செய்தார். பின்பு 19 ஜனவரி 1994 ல் செய்தியாளர்களைத் திரட்டி அபயா வழக்கில் அவர் தற்கொலை செய்து கொள்ளவில்லை, அது கொலை என தான் கண்டறிந்ததாகவும், ஆனால் தன்னைவிட உயர் அதிகாரிகள் இவ்வழக்கினை தற்கொலை என முடிக்க நிர்பந்தித்தால் அதனை ஏற்காமல் இராஜனாமா செய்ததையும் தெரிவித்தார்.

இதனை வழக்காக பதிவு செய்து உயரதிகாரியான தியாகராஜன் அவ்வழக்கிலிருந்து நீக்கப்பட்டார். 2008 ல் அபயாவுடன் தங்கியிருந்த ஸெபி என்ற கன்னியாஸ்திரியின் துணையுடன் தாமஸ் எம்.கொட்டூர், ஜோஸ் போத்ரிக்காயல் என்ற இரு பாதிரியார்கள் அபயாவை கற்பழித்து கொன்றதும், கிணற்றில் அவரது உடலை போட்டு தற்கொலை என நிறுவியதும் நீதிமன்றத்தில் நிறுவப்பட்டது. கன்னியாஸ்திரியையும், இரு பாதிரியார்களையும் கைது செய்தனர். [2]

இவற்றையும் காண்க[தொகு]

  • [[]]

ஆதாரங்களும் மேற்கோள்களும்[தொகு]

  1. http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=16133:2011-08-15-22-09-03&catid=1:articles&Itemid=264 கன்னியாஸ்திரி அபயா கொலைவழக்கும் பேரறிவாளனின் ஒப்புதல் வாக்குமூலமும்
  2. க‌ற்ப‌‌ழி‌த்து கொலை: 16 ஆ‌ண்டு‌க்கு‌ப் ‌பிறகு கைது நடவடி‌க்கை-வெப்துணியா செய்தி

வெளி இணைப்புகள்[தொகு]