சிறார் மீதான பாலுணர்வு நாட்டம்
சிறார் மீதான பாலுணர்வு நாட்டம் | |
---|---|
சிறப்பு | உளநோய் மருத்துவம், உளவியல் |
சிறார் மீதான பாலணர்வு நாட்டம் அல்லது சிறார்பால் ஈர்ப்பு என்பது வயதுவந்த நபரொருவர் முதன்மையாகவோ, முழுக்கவோ குழந்தைகள்மீதும் வயதுவராது இளஞ்சிறார்கள் மீதும் பால்நாட்டம் கொள்ளும் உளநோய் ஆகும்.[1][2] பொதுவாக சிறுமிகள் 10, 11 வயதிலும் சிறுவர்கள் 11, 12 ஆண்டுகளில் வயதுக்கு வந்தாலும்,[3] 13 வயதுக்குக்குறைவான சிறார்கள் மீது பால்நாட்டம் கொள்வதையே சிறார்பால் ஈர்ப்பு நோய்க்கான வரையறையாகக் கொள்கின்றனர்.[1] குறைந்தது 16 வயதடைந்து, தன்னைக்காட்டிலும் 5 வயதுக்கும் மேலாகக் குறைவான சிறார்மீது நாட்டம் கொள்பவர்களையே இத்தகைய நோயுடையவராகக் கொள்வர்.[1][2]
சிறார்பால் ஈர்ப்பை சிறார்பால் நாட்டக்கேடு என உளநோய்களுக்கான நோயறுதியிடல் புள்ளியியல் கையேடு (உநோபுகை-5) குறிப்பிடுகிறது. வயதுவராத சிறார்களை முன்வைத்துத் தோன்றும் அழுத்தமான, திரும்பத்திரும்ப வரும் கற்பனைகளையும், அந்தக்கற்பனைகள் வழி ஏற்பனும் நடத்தைகளையும், அந்நடத்தைகளைக் கட்டுக்குள் வைக்கவியலாமையும் உள்ளடக்கிய பிறழ்வான வக்கிர உணர்வை இந்த உளக்கேட்டின் வரையறாக வகுத்துள்ளனர்.[1] பன்னாட்டு நோய்கள் வகைப்பாட்டில் இது வயது வராத சிறார் அல்லது வயதுவரத்தொடங்கும் நிலையிலுள்ள சிறார்மீதான பாலுணர்வுத் தேர்வு என்று இதை வரையறுத்துள்ளார்கள்.[4]
உளநோய் மருத்துவத்துறைசாராது பொதுவாக சிறார்பால் ஈர்ப்பு என்பதைச் சிறுவர்கள் மீதான எத்தகைய பாலுணர்வு ஈர்ப்பைக் குறிக்கவும் சிறார் பாலியல் வன்கொடுமை போன்றவற்றைக் குறிக்கவும் பயன்படுத்துகிறார்கள்.[5][6] இது சிறார்மீதான பாலியல் ஈர்ப்பு, அர்கள் மீதான வன்கொடுமைகள், வயதுக்குவரும்நிலையிலுள்ளோர் மீதான ஈர்ப்பு, அண்மையில் வயதுக்குவந்தோர் மீதான ஈர்ப்பு முதலியவற்றை வேறுபடுத்தத் தவறுகிறது.[7][8] இதுபோல துல்லியமற்ற பயன்பாடுகளைத் தவிர்க்க வேண்டுமென்று ஆய்வர்கள் கருதுகிறார்கள். ஏனெனில் சிறார்மீதான வன்கொடுமைகள் புரிவோர் சிறார்பால் ஈர்ப்பு நோயுடையவராக இருக்க வாய்ப்பிருந்தாலும்[6][9] அவர்கள் முதன்மையாகவோ மொத்தமாகவோ குழந்தைகள்பால் மட்டுமே ஈர்ப்புடையவராய் இருந்தால் மட்டுமே இந்தக்குறிப்பிட்ட நோயையுடையவராகக் கருதப்படுவர்.[7][10][11] மேலும் இந்த நோயுடையவர்கள் சிலர் சிறார்மீதான வன்கொடுமைகள் எதுவுமே செய்யாமலும் இருக்கக்கூடும்.[12]
பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில்தான் இதை முறையாகப் பெயரிட்டு குறிப்பிடத் தொடங்கினர். 1980-ஆம் ஆண்டுக்குப் பின்னர் இதைப்பற்றி நிறைய ஆய்வுகள் நடைபெற்றுள்ளன. ஆண்களிலேயே மிகுதியாக அறியப்பட்டிருந்தாலும் இவ்வுளக்கேட்டைக் கொண்டிருக்கும் பெண்களும் உள்ளனர்.[13][14] இப்போதுள்ள கணிப்புகள் பெண்களில் இந்நோயுடையவர்களின் எண்ணிக்கையை குறைவாக மதிப்பிடுவதாகக் கருதப்படுகிறது.[15] இந்நோய்க்கான அறுதியான தீர்வு எதுவும் எட்டப்படவில்லை. எனினும் இந்நோயுள்ளவர்கள் பாலுணர்வு வன்கொடுமைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கவோ குறைக்கவோ செய்யும் சிகிச்சை முறைகள் உள்ளன.[6] இந்நோய்க்கான சரியான காரணங்கள் இன்னும் கண்டறியப்படவில்லை.[16] சில ஆய்வுகள் மூளை நரம்புக்கோளாறுகளோடும் பிற உளநோய்களோடும் இந்நோயைத் தொடர்புபடுத்தியிருக்கின்றன.[17] அமெரிக்க ஒன்றியத்தில் கான்சாசு எதிர் என்றிக்கு வழக்கிற்குப் பிறகு பாலியற் குற்றங்களில் ஈடுபட்டதாக அறியப்பட்டு உளநோய்களையுடையோர்மீது வாழ்நாள் முழுவதும் கட்டுப்பாடுகளை விதிக்கமுடியும்.[18]
நோய்க்காரணிகள்[தொகு]
சிறா,்பால் ஈர்ப்புக்கான காரணங்கள் முழுமையாக அறியப்படாவிட்டாலும் ஆய்வர்கள் 2002-ஆம் ஆண்டுமுதலாக புள்ளியியல் அடிப்படையில் இந்நோயுடன் தொணர்புள்ள மூளை அமைப்புகளையும் செயற்பாடுகளையும் வெளியிட்டுள்ளனர். குற்றப்பிரிவுச் செயற்பாட்டின்கீழும், அதன்கீழ்வராத வழிகளிலும் நபர்களைப் பற்றி அறிந்து அவர்களையும், பொதுமக்கள் குழுவையும் தனித்தனியாக ஆராய்ந்ததில் பின்வரும் தொடர்புகள் (காரணிகள் எனக்கூறவியலாது) அறியப்பட்டன. குறைந்த அறிவு,[19][20][21] நினைவாற்றல் குறைபாடுகள்,[20] வலதுகைப் பழக்கம் குறைவாக இருத்தல்,[19][20][22][23] ஒத்த அறிவுத்திறன் கொண்டோரைக் காட்டிலும் பள்ளிகளில் குறைவான மதிப்பெண்களைப் பெறுவது,[24] குறைவான உயரம்,[25][26] இளவயதில் மயக்கமடையும் அளவுக்குத் தலையில் காயம் ஏற்பட்டிருப்பதற்கான கூடுதல் வாய்ப்புகள்,[27][28] காந்த அதிர்வலை வரைவில் காணக்கூடிய மூளை அமைப்பு மாறுபாடுகள் முதலியனவை கூடுதலாக இருப்பதற்கும் இந்நோய் அமைந்திருப்பதற்குமான இயைபு அறியப்பட்டுள்ளது.[29][30][31]
இவற்றையும் பார்க்கவும்[தொகு]
குறிப்புகளும் மேற்கோள்களும்[தொகு]
- ↑ 1.0 1.1 1.2 1.3 "Diagnostic and Statistical Manual of Mental Disorders, 5th Edition". American Psychiatric Publishing (2013). பார்த்த நாள் July 25, 2013.
- ↑ 2.0 2.1 See section F65.4 Paedophilia. "The ICD-10 Classification of Mental and Behavioural Disorders Diagnostic criteria for research World". World Health Organization/அனைத்துலக நோய்கள் வகைப்பாடு - 10 (1993). பார்த்த நாள் 2012-10-10. "B. A persistent or a predominant preference for sexual activity with a prepubescent child or children. C. The person is at least 16 years old and at least five years older than the child or children in B."
- ↑ Kail, RV; Cavanaugh JC (2010). Human Development: A Lifespan View (5th ). Cengage Learning. பக். 296. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0495600377. https://books.google.com/books?id=E-n5E7oyCgoC&pg=PA296.
- ↑ See section F65.4 Paedophilia. "International Statistical Classification of Diseases and Related Health Problems 10th Revision (ICD-10) Version for 2010". அனைத்துலக நோய்கள் வகைப்பாடு - 10. பார்த்த நாள் November 17, 2012.
- ↑ Seto, Michael (2008). Pedophilia and Sexual Offending Against Children. Washington, DC: American Psychological Association. பக். vii.
- ↑ 6.0 6.1 6.2 "Pedophilia". JAMA 288 (19): 2458–65. November 2002. doi:10.1001/jama.288.19.2458. பப்மெட்:12435259. http://jama.ama-assn.org/cgi/pmidlookup?view=long&pmid=12435259.
- ↑ 7.0 7.1 "Legal, social, and biological definitions of pedophilia". Arch Sex Behav 19 (4): 333–42. August 1990. doi:10.1007/BF01541928. பப்மெட்:2205170.
- ↑ பிழை காட்டு: செல்லாத
<ref>
குறிச்சொல்;lanning3e
என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை - ↑ "A profile of pedophilia: definition, characteristics of offenders, recidivism, treatment outcomes, and forensic issues". Mayo Clin. Proc. 82 (4): 457–71. 2007. doi:10.4065/82.4.457. பப்மெட்:17418075.
- ↑ Blaney, Paul H.; Millon, Theodore (2009 ). Oxford Textbook of Psychopathology (Oxford Series in Clinical Psychology) (2nd ). Oxford University Press, USA. பக். 528. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-19-537421-5. "Some cases of child molestation, especially those involving incest, are committed in the absence of any identifiable deviant erotic age preference."
- ↑ Edwards, M. (1997) "Treatment for Paedophiles; Treatment for Sex Offenders". Paedophile Policy and Prevention, Australian Institute of Criminology Research and Public Policy Series (12), 74-75.
- ↑ "Non-offending Pedophiles". Current Sexual Health Reports 8 (3): 121–128. September 2016. doi:10.1007/s11930-016-0076-z.
- ↑ Seto, Michael (2008). Pedophilia and Sexual Offending Against Children. Washington, DC: American Psychological Association. பக். 72–74.
- ↑ Goldman, Howard H. (2000). Review of General Psychiatry. McGraw-Hill Professional Psychiatry. பக். 374. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-8385-8434-9.
- ↑ Lisa J. Cohen, PhD and Igor Galynker, MD, PhD (June 8, 2009). "Psychopathology and Personality Traits of Pedophiles". Psychiatric Times. பார்த்த நாள் March 7, 2014.
- ↑ Seto, Michael (2008). Pedophilia and Sexual Offending Against Children. Washington, DC: American Psychological Association. பக். 101.
- ↑ Seto, Michael (2008). "Pedophilia: Psychopathology and Theory". in Laws, D. Richard. Sexual Deviance: Theory, Assessment, and Treatment, 2nd edition. The Guilford Press. பக். 168. https://books.google.com/books?id=yIXG9FuqbaIC&pg=PA164.
- ↑ Seto, Michael (2008). Pedophilia and Sexual Offending Against Children. Washington, DC: American Psychological Association. பக். xii, 186.
- ↑ 19.0 19.1 Blanchard R.; Kolla N. J.; Cantor J. M.; Klassen P. E.; Dickey R.; Kuban M. E.; Blak T. (2007). "IQ, handedness, and pedophilia in adult male patients stratified by referral source". Sexual Abuse: A Journal of Research and Treatment 19 (3): 285–309. doi:10.1177/107906320701900307.
- ↑ 20.0 20.1 20.2 [ "Intelligence, memory, and handedness in pedophilia"]. Neuropsychology 18 (1): 3–14. 2004. doi:10.1037/0894-4105.18.1.3. பப்மெட்:14744183. .
- ↑ [ "Quantitative reanalysis of aggregate data on IQ in sexual offenders"]. Psychological Bulletin 131 (4): 555–568. 2005. doi:10.1037/0033-2909.131.4.555. பப்மெட்:16060802. .
- ↑ [ "Handedness in pedophilia and hebephilia"]. Archives of Sexual Behavior 34 (4): 447–459. 2005. doi:10.1007/s10508-005-4344-7. பப்மெட்:16010467. .
- ↑ Bogaert AF (2001). [ "Handedness, criminality, and sexual offending"]. Neuropsychologia 39 (5): 465–469. doi:10.1016/S0028-3932(00)00134-2. பப்மெட்:11254928. .
- ↑ [ "Grade failure and special education placement in sexual offenders' educational histories"]. Archives of Sexual Behavior 35 (6): 743–751. 2006. doi:10.1007/s10508-006-9018-6. பப்மெட்:16708284. .
- ↑ "Physical height in pedophilic and hebephilic sexual offenders". Sex Abuse 19 (4): 395–407. 2007. doi:10.1007/s11194-007-9060-5. பப்மெட்:17952597.
- ↑ McPhail, Ian V.; Cantor, James M. (2015-04-03). "Pedophilia, Height, and the Magnitude of the Association: A Research Note". Deviant Behavior 36 (4): 288–292. doi:10.1080/01639625.2014.935644. பன்னாட்டுத் தர தொடர் எண்:0163-9625. https://dx.doi.org/10.1080/01639625.2014.935644.
- ↑ பிழை காட்டு: செல்லாத
<ref>
குறிச்சொல்;Blanchard2002
என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை - ↑ [ "Self-reported injuries before and after age 13 in pedophilic and non-pedophilic men referred for clinical assessment"]. Archives of Sexual Behavior 32 (6): 573–581. 2003. doi:10.1023/A:1026093612434. பப்மெட்:14574100. .
- ↑ "Cerebral white matter deficiencies in pedophilic men". Journal of Psychiatric Research 42 (3): 167–183. 2008. doi:10.1016/j.jpsychires.2007.10.013. பப்மெட்:18039544.
- ↑ "Structural brain abnormalities in the frontostriatal system and cerebellum in pedophilia". J Psychiatr Res 41 (9): 753–62. 2007. doi:10.1016/j.jpsychires.2006.06.003. பப்மெட்:16876824.
- ↑ "Brain pathology in pedophilic offenders: Evidence of volume reduction in the right amygdala and related diencephalic structures". Archives of General Psychiatry 64 (6): 737–746. 2007. doi:10.1001/archpsyc.64.6.737. பப்மெட்:17548755.
வெளி இணைப்புகள்[தொகு]
- மால்கம் கிளாடுவெல். "கண்முன் தெரிவது." ("செர்ரி சந்துசுக்கியும் சிறார் பால்நாட்டம் கொள்ளும் மனதும்") நியூ யார்க்கர். (ஆங்கில மொழியில்)
- சார்லோட்டு பிலிபி. "பெண் பாலியற்கொடுமை: வெளியில் பேசப்படாத கடைசி மறைபொருள்." த இண்டிப்பெண்டண்டு. (ஆங்கில மொழியில்)
- சென்னிஃபர் பிளயர். "சிறார்பால் ஈர்ப்பு கொண்டவர்களை எப்படித் தடுத்து நிறுத்துவது? அவர்களை அரக்கர்களாகப் பார்ப்பதை நிறுத்த வேண்டும்." சிலேட்டு. (ஆங்கில மொழியில்)
- தயானா வாங்கு. "'சிறார்கள் மீது பால் ஈர்ப்பைக் கொண்டிருந்தால், நான் ஓர் அரக்கனாகத்தான் இருக்க வேண்டும்'." தீ வெல்ட்டு. செருமனில்
![]() |
விக்சனரியில் pedophilia என்னும் சொல்லைப் பார்க்கவும். |