பாலுறவுச் சம்மத வயது

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பாலுறவுச் சம்மத வயது என்பது சட்டப்படி ஒருவர் பாலுறவில் ஈடுபட உடன்படுவதற்கான வயதெல்லையாகும். சட்டங்களுக்குச் சட்டம் இது வேறுபடுகிறது. பொதுவான பாலுறவுச் சம்மத வயது 16 முதல் 18 ஆண்டுகள் ஆகும். ஆயினும் இது 12 முதல் 21 வயது வரை வேறுபடுகின்றது. சிறுவர்களைப் பாலியல் வன்முறையிலிருந்து தடுக்கவே பாலியற் சம்மத வயது ஏற்படுத்தப்பட்டது எனலாம். சம்மதமளிக்க்கும் வயதினைவிடக் குறைந்தோருடனான பாலுறவு சட்டத்தினால் பாலியல் வன்முறையாகக் கருதப்படுவதுண்டு.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாலுறவுச்_சம்மத_வயது&oldid=1897983" இலிருந்து மீள்விக்கப்பட்டது