கத்தரித்தல் (தாவரவியல்)
தாவரங்களின் அங்குரத்தொகுதியில் அல்லது வேர்த்தொகுதியில் தெரிவு செய்யப்பட்ட பகுதிகளை நீக்குதல் கத்தரித்தல் (Pruning) எனப்படும்.
கத்தரித்தலின் நோக்கங்கள்[தொகு]
- உற்பத்தியின் அளவை அதிகரித்தல்
- உற்பத்தியின் தரத்தைக்கூட்டுதல்
- பூஞ்செடிகளின் வடிவமைப்புகளை சீர் செய்தல்
- இறந்த நோயுற்ற கிளைகளை அகற்றுதல்
கத்தரித்தலின் வகைகள்[தொகு]

தலையகற்றல்[தொகு]
தாவரத்தின் உச்சிப்பகுதி நீக்கப்படுவதன் மூலம் உச்சியாட்சி அழிக்கப்பட்டு கக்கவரும்புகளின் வளர்ச்சி தூண்டப்படுகிறது.இதன் மூலம் உயரத் குறைந்த அடர்த்தி கூடிய தாவரங்கள் பெறப்படுகின்றது. இதனால் தாவரங்களின் பராமரிப்புச் சுலபமாக்கப்படுவதுடன் கூடிய விளைச்சலையும் பெற முடிகிறது.மா, தோடை, தேயிலை, பூஞ்செடிகளில் இச்செயற்பாடு பொதுவாக கைக் கொள்ளப்படும்.
ஐதாக்கல்[தொகு]
கிளைகள், இலைகள், பூக்கள், காய்கள் என்பவற்றின் செறிவு குறைக்கப்படுதல் ஐதாக்கல் ஆகும்.
பாதிக்கப்பட்ட பகுதிகளை நீக்குதல்[தொகு]
- கிளைகள் இலைகள் என்பன குறைக்கப்படுவதன் நோக்கம்:- வினைத்திறனற்ற இலைகளும் கிளைகளும் அகற்றப்படுவதனால் எல்லாப்பகுதிகளுக்கும் ஒளி ஊடுருவும், மரத்தின் கிளைச் சுமை குறைக்கப்படுவதானால் முறிந்து விழும் அபாயம் குறையும், நிமிர்ந்த தாவரங்களைப் பெறலாம், பதிய வளர்ச்சி குறைவதனால் காய்த்தல், பூத்தல் தூண்டப்படும்.
- பூக்கள் காய்கள் குறைக்கப்படுவதன் நோக்கம்:- காய்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது அதன் பருமன் குறையும். இதனால் சந்தை வாய்ப்பு குறையும். எனவே காய்கள், பூக்கள் குறைக்கப்பட்டு பருமன் அதிகரிக்கப்படுகிறது.
கவாத்து[தொகு]
பழமரங்களில் புதிதாக உருவாகும் துளிர்களில் தான் பூ உருவாகி பின்னர் காயாகி கனியாகும், அவ்வாறு புதிய துளிர்களைத் துளிர்க்கச் செய்ய பழைய வேண்டாத காய்ந்த கிளைகளை வெட்டி அப்புறப்படுத்துதலே கவாத்து செய்தல் ஆகும். தற்போது கவாத்து என்பது கிளை படர்வு மேலாண்மை என்ற சொல் மூலமும் அறியப்படுகிறது.
கத்தரித்தலுக்குள்ளாகும் தாவரங்களும் பகுதிகளும்[தொகு]
- தண்டு - பூஞ்செடி, எலுமிச்சை, தோடை
- வேரகற்றல் - தோடை,மா, கொய்யா
- இலையகற்றல் - மிளகு,பூஞ்செடி
- பூவகற்றல் - ஓக்கிட், அந்தூரியம், திராட்சை
- தந்தகற்றல் - கொடித்தோடை, திராட்சை
- காய் கத்தரித்தல் - பப்பாசி, திராட்சை
கத்தரித்தலின் நன்மைகள்[தொகு]
- தாவரத்தின் சகல பகுதிகளுக்கும் சீரான ஒளி, போசணை கிடைப்பதால் உணவுத் தேக்கம் ஏற்பட்டு கனிகட்டல் தூண்டப்படும்.
- பூச்சிப் பீடைக்கட்டுப்பாடு இலகுவாக்கப்படும்.
- இறந்த நோயுற்ற, பலவீனமான கிளைகளை அகற்றலாம்.
- வேண்டிய உயரம் மற்றும் அமைப்பில் தாவரத்தைப் பேணலாம்.
- விளைச்சலைக் கூட்டுவதுடன் விளைவின் தரத்தையும் பேணலாம்.
கத்தரித்தல் உபகரணங்கள்[தொகு]
கத்தரிகோல்[தொகு]
கிளைகளை வெட்டுவதற்கென்றே இரு கைகளாலும் பலமுடன் அழுத்தி வெட்டும் வசதி உடைய கத்தரிகோல்.
சுனப்பு வெட்டறுவாள்[தொகு]
நன்கு சுனப்பு உடைய வெட்டறுவாள் கொன்டும் கிளைகளை வெட்டி நீக்கலாம், அவ்வாறு அறுவாள் கொண்டு கிளைகளை வெட்டும்போது கிளையில் பிளவு ஏற்படாதவாறு வெட்டவேண்டும்.