கணேசு தேவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கணேசு தேவி (Ganesh N. Devy சூலை 1, 1950) என்பவர் வடோதரா, மகாராசா சாயாசிராவ் பல்கலைக் கழகத்தில் ஆங்கிலப் பேராசிரியராக இருந்தவர்[1]. பாசா என்னும் ஆய்வு நிறுவனத்தைத் தொடங்கியவர். மலைவாழ் பழங்குடிமக்கள் பற்றியும் மொழிகள் இலக்கியம் குறித்தும் ஆய்வு நுல்கள் எழுதியுள்ளார்.[2]

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

மராட்டிய மாநிலம் புனேயில் போர் என்னும் ஊரில் பிறந்த கணேசு தேவி, கோலாப்பூர் சிவாசி பல்கலைக்கழகத்தில் படித்துப் பட்டம் பெற்றார்.[3]

பாசா( BHASHA) ஆய்வு மற்றும் பதிப்பு மையம்[தொகு]

மலை வாழ் பழங்குடிகளின் மொழி, நாகரிகம், பண்பாடு, பொருளியல் நிலைகள் பற்றிய ஆராய்ச்சிகள் செய்யும் நோக்கத்தோடு தாம் வேலை செய்துகொண்டிருந்த பேராசிரியர் பதவியைத் துறந்தார். பாசா ஆய்வு மற்றும் பதிப்பு நிறுவனம் என்னும் பெயரில் ஓர் அமைப்பைக் கணேசு தேவி தோற்றுவித்தார் அது குசராத்து மாநிலத்தில் வடோதராவில் உள்ளது. இந்நிறுவனம் பழங்குடி மக்களின் மேம்பாட்டிற்காகவும் வளர்ச்சிக்காகவும் தொடங்கப்பட்டது. பழங்குடி மக்களின் நாகரிகம், பண்பாடு ஆகியவற்றைப் பாதுகாக்க அருங்காட்சியகம், பள்ளிக்கூடம் ஆகியவற்றை இவ்வமைப்பு நடத்தி வருகிறது. கருத்தரங்குகளும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன. ஆராய்ச்சியாளர்கள் இங்கு தங்குகிறார்கள். நூலகமும் இயங்கி வருகிறது.

பிற பொறுப்புகள்[தொகு]

2002 ஆம் ஆண்டு முதல் திருபாய் அம்பானி செய்தி மற்றும் தகவல் தொழில் நுட்ப நிலையத்தில் பேராசிரியராக இருந்தார். லீட்சு பல்கலைக் கழகம் யேல் பல்கலைக் கழகம் ஆகியவற்றில் மதிப்புறு ஆசிரியராக இருந்தார். 2010 இல் இந்திய நாட்டு மக்கள் மொழிகளை அளவீடு செய்யும் பணியில் இறங்கினார். உயிர்ப்புடன் இருக்கும் 780 மொழிகளை ஆய்வுக்கு உட்படுத்தியும் ஆவணப் படுத்தியும் பி. எல். எஸ். ஐ. அமைப்பு பணி ஆற்றிவருகிறது.[4][5] குசராத்தில் தேசுகத் என்னும் ஊரில் மலைவாழ் பழங்குடிகள் பயிற்சிக் கழகத்தைத் தொடங்கினார்.

விருதுகள்[தொகு]

  • ஆப்டர் ஆம்னிசியா என்னும் கணேசு தேவியின் படைப்புக்காக சாகித்திய அகாதமி விருது 1993 இல் இவருக்கு வழங்கப்பட்டது.
  • 2014 இல் பத்மசிறி விருது[6] மற்றும் சார்க் எழுத்தாளர்கள் பவுண்டேசன் விருது, பிரின்ஸ் கிளாஸ் விருது இவருக்குக் கிடைத்தன.
  • வனபிரச்த் என்னும் மராத்தி நூலுக்கு ஆறு விருதுகள் வழங்கப்பட்டன.
  • 2011இல் லிங்குவா பாக்ஸ் என்னும் பரிசு இவருக்குக் கிடைத்தது[5][7].

சமூக அக்கறை[தொகு]

கன்னட இலக்கிய அறிஞர் ம. ம. கலபுர்கி படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்தும், நாட்டில் சகிப்புத்தன்மை குறைந்து வருவதை எதிர்த்தும் தாம் பெற்ற சாகித்திய அகாதெமி விருதை 2015 அக்தோவர் மாதத்தில் திருப்பிக் கொடுத்தார்.[8]

உசாத்துணை[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கணேசு_தேவி&oldid=2967942" இருந்து மீள்விக்கப்பட்டது