ஓலு

ஆள்கூறுகள்: 65°00′51″N 25°28′19″E / 65.01417°N 25.47194°E / 65.01417; 25.47194
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஓலு
Uleåborg
நகரம்
Oulun kaupunki
Uleåborgs stad
City of Oulu
மேல்: Rantakatu in downtown Oulu, Oulu City Hall நடு: Lyseo Upper Secondary School and the Oulu Cathedral கீழ்: Shops along Kirkkokatu, Radisson Blu Hotel along Ojakatu
மேல்: Rantakatu in downtown Oulu, Oulu City Hall
நடு: Lyseo Upper Secondary School and the Oulu Cathedral
கீழ்: Shops along Kirkkokatu, Radisson Blu Hotel along Ojakatu
ஓலு-இன் கொடி
கொடி
ஓலு-இன் சின்னம்
சின்னம்
அடைபெயர்(கள்): வடக்குப் பின்லாந்தின் தலைநகர்;[1] வடக்கு எசுக்காண்டினாவியாவின் தலைநகர்;[2] மேற்கு சைபீரியாவின் தலைநகர்[3]
பின்லாந்தில் ஓலுவின் அமைவிடம்
பின்லாந்தில் ஓலுவின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 65°00′51″N 25°28′19″E / 65.01417°N 25.47194°E / 65.01417; 25.47194
நாடு பின்லாந்து
வலயம் வடக்கு ஒசுத்திரோபொத்தினியா
துணை வலயம்ஓலு துணை வலயம்
பட்டயம்1605-04-08
அரசு
 • நகர முகாமையாளர்பாய்வி லாசலா
பரப்பளவு
 • நகர்ப்புறம்187.1 km2 (72.2 sq mi)
மக்கள்தொகை
 • நகர்ப்புறம்208 939[4]
 • நகர்ப்புற அடர்த்தி915.8/km2 (2,372/sq mi)
நேர வலயம்EET (ஒசநே+02:00)
 • கோடை (பசேநே)EEST (ஒசநே+03:00)
இணையதளம்www.ouka.fi/oulu/english/ www.visitoulu.fi/en/

ஓலு (/ˈl/ OH-loo,[5][1] Capital of Northern Scandinavia;[6] Finnish: [ˈou̯lu]  ( கேட்க); சுவீடிய: Uleåborg [ʉːlɛɔˈbɔrj] (About this soundகேட்க); இலத்தீன்: Uloa) என்பது பின்லாந்தின் ஒசுத்திரோபொத்தினியா வலயத்தில் அமைந்துள்ள, 208,939 வசிப்பாளர்களை[4] உள்ளடக்கிய நகரும், நகராட்சியும் கடற்கரைச் சுற்றுலாப் பகுதியும் ஆகும். இந்நகர் வடக்குப் பின்லாந்திலேயே மக்கள்தொகை அதிகமுள்ள நகரும், எல்சிங்கி, எசுப்பூ, டம்பரே மற்றும் வான்டா ஆகியவற்றுக்கு அடுத்தாக, பின்லாந்தின் ஐந்தாவது மக்கள்தொகை கொண்ட நகரும் ஆகும். மேலும் இது எல்சிங்கி, டம்பரே மற்றும் துர்க்கு ஆகியவற்றுக்கு அடுத்ததாக பின்லாந்தின் நான்காவது பெரிய நகர்ப் பகுதியும் ஆகும்.

பாரிய மக்கள்தொகை மற்றும் புவி அரசியல் ரீதியில் பொருளியல் மற்றும் பண்பாட்டு-வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அமைவிடம் என்பனவற்றின் விளைவாக ஓலு "வடக்குப் பின்லாந்தின் தலைநகர்" என அழைக்கப்படுகிறது.[1] ஓலு ஐரோப்பாவின் "வாழும் ஆய்வுகூடங்"களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இங்கு வசிக்கும் குடியிருப்பாளர்கள் சமூக அளவில் புதிய தொழில்நுட்பங்களைச் (NFC பட்டிகள் மற்றும் ubi-திரைகள் போன்றன) சோதித்துப் பார்க்கின்றனர்.[7] ஓலு பல்கலைக்கழகம் தகவல் தொழில்நுட்பத் துறையில் உலகளவில் புகழ்பெற்று விளங்குகிறது.[8][9][10] அண்மைய சிறந்த நகர்ப்புறக் கருத்துக் கணிப்புக்களில் ஓலு முன்னிலை பெற்றுள்ளது. 2008ல் பின்னிய பொருளியல் மதிப்பீட்டகத்தினால் வெளியிடப்பட்ட ஆய்வில் நாடளாவிய ரீதியிலான பெரு நகரங்களில் சிறந்ததாக முன்னிலை பெற்றுள்ளது.[11]

ஒருகாலத்தில் மரக் கரிநெய் மற்றும் சமன் ஆகியவற்றுக்குப் பேர்போனதாக விளங்கிய ஓலு, இன்று பாரிய உயர்-தொழில்நுட்ப மையமாக மாறியுள்ளது. தகவல் தொழில்நுட்பம் மற்றும் நலத் தொழில்நுட்பம் ஆகிய துறைகள் குறிப்பாகப் புகழ்பெற்றுள்ளன. மரச் சுத்திகரிப்பு, வேதிப் பொருட்கள், மருந்தாக்கம், கடதாசி மற்றும் உருக்கு என்பன ஏனைய முன்னணிக் கைத்தொழில்களாக விளங்குகின்றன.[சான்று தேவை]

ஓலு, 2026ம் ஆண்டுக்கான ஐரோப்பியப் பண்பாட்டுத் தலைநகராகத் தெரிவுசெய்யப்பட்டுள்ளது.[12][13]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 Oulu Information – City of Oulu
  2. "Oulu – Capital of Northern Scandinavia" இம் மூலத்தில் இருந்து 2022-03-07 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220307074403/https://visitoulu.fi/en/oulu-2/. 
  3. Unique Oulu – Oulu2026
  4. 4.0 4.1 Tarkoma, Jari (2008-01-15). "Taajamissa asuu 84 prosenttia väestöstä" (in fi). Tiedote (Statistics Finland (Tilastokeskus)). http://www.tilastokeskus.fi/ajk/tiedotteet/v2008/tiedote_001_2008-01-15.html. 
  5. "Oulu" (5th ). Boston: Houghton Mifflin Harcourt. 2014. https://www.ahdictionary.com/word/search.html?q=Oulu. 
  6. "Oulu – Capital of Northern Scandinavia" இம் மூலத்தில் இருந்து 2022-03-07 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220307074403/https://visitoulu.fi/en/oulu-2/. 
  7. Saylor, Michael (2012). The Mobile Wave: How Mobile Intelligence Will Change Everything. Perseus Books/Vanguard Press. பக். 63. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-59315-720-3. https://archive.org/details/mobilewavehowmob0000sayl. 
  8. Bachelor of Engineering, Information Technology – OAMK
  9. Oulu Innovation Alliance[தொடர்பிழந்த இணைப்பு]
  10. Tietotekniikka, Tietotekniikan tutkinto-ohjelma, tekniikan kandidaatti ja diplomi-insinööri (3v + 2v) – Opintopolku பரணிடப்பட்டது 2015-08-11 at the வந்தவழி இயந்திரம் (in Finnish)
  11. "Kuntien imagotutkimus 2007" (in fi). July 11, 2008. http://www.taloustutkimus.fi/ajankohtaista/uutiset_ja_artikkelit/?x1541726=1631178. [தொடர்பிழந்த இணைப்பு]
  12. YLE: Oulu on Euroopan kulttuuripääkaupunki 2026 (in Finnish)
  13. Oulu in Northern Finland selected as European Capital of Culture for 2026 – High North News
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓலு&oldid=3662396" இருந்து மீள்விக்கப்பட்டது