சல்மான் மீன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

[1]

[2][3]சல்மான் (Salmon) என்பது கதிர் வடிவ வால் கொண்ட மீன்களின் பொதுப் பெயராகும். "சல்மோன்" எனும் சொல் குதித்தல் என்ற பொருளுடைய "சல்மோ" என்ற லத்தீன் வார்த்தையில் இருந்து பிறந்தது. சல்மான் மீன் சல்மோனிடே குடும்பத்தைச் சார்ந்தது. மீன் மீன், கரி மீன், சாம்பல் நுனி மீன் மற்றும் வெள்ளை மீன்கள் இதே குடும்பத்தைச் சார்ந்தவையே.

வாழிடம்[தொகு]

இவைகள் வட அட்லாண்டிக்கின் [[கழிமுக பகுதிகள்]] (பேரினம் சல்மோ) , பசிபிக் பெருங்கடல் (பேரினம் onchorynchus) பகுதிகளை தங்கள் இருப்பிடமாக , பிறப்பிடமாக கொண்டவை. ஆன போதிலும் பல வகை சல்மான் மீன்கள் அவைகளின் சுற்றுச் சூழல் இல்லாத இடங்களிலும் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளன. வட அமெரிக்காவிலுள்ள க்ரேட் லேக்ஸ் ஏரி, தென் அமெரிக்காவிலுள்ள படகொனியா (patagonia) பகுதிகளில் பண்ணைகளில் வளர்க்கப் படுகின்றன. இதன் சிற்றினங்கள் 'ட்ரௌட்' (Trout) என்ற பெயரால் அழைக்கப் படுகின்றன. பேரினம் ஆன்க்ரோஜிசஸ் (oncorhynchus) எட்டு சிற்றினம் கொண்டது. இவைகள் இயற்கையாக வடக்கு பசிபிக் கடலில் மட்டுமே காணப்படும்.இவைகள் ஒரு தொகுதியாக பசிபிக் சல்மான் என்று அழைக்கப் படுகிறது. சினோக் சல்மான் நியூஸிலாந்திலும் படகோனியாவிலும் அறிமுகப் படுத்தப் பட்டது.

வாழ்க்கை முறை[தொகு]

[1] பொதுவாக சல்மான்கள் ஆற்றுப் புறஓட்டமான மீன்கள். அவைகள் ஆற்றில் பிறந்து கடலுக்கு வலசைப் போய் மறுபடியும் தான் பிறந்த ஆற்றிற்கே இனப் பெருக்கத்திற்காக திரும்பி வரும். ஆனாலும் அநேக வகை சிற்றினங்கள் தங்கள் வாழ்நாளை ஆற்றிலே கழித்து விடுகின்றன. அநேக சல்மான்கள் ஆற்றுப்புறவோட்டமுள்ள வாழ்வைக் கொண்டிருந்தாலும் சிலவகை மீன்கள் நன்னீரிலே கழிக்கக் கூடியவை. நாட்டுப்புற வழக்கு அல்லது வழக்காராய்ச்சி படி இவை தாங்கள் எங்கு பிறந்ததோ அதே இடத்திற்கு இனப் பெருக்கம் செய்ய செல்லும். இதை தடம் பின்பற்றி சென்று செய்த ஆராய்ச்சிகள் இது அதிக அளவில் உணமை என்று நிரூபித்தது. கடலிலிருந்து ஆற்றிற்கு திரும்பி வரும்போது அநேக சல்மான்கள் திசை மாறி வேறு ஆற்றிற்கு சென்று விடும். ஆனால் திசை மாறும் தன்மை அது சார்ந்த சிற்றினத்தைப் பொறுத்தே இருக்கும். வாழிடம் திரும்பும் தன்மை அதன் மோப்பஞ் சார் நினைவைப் பொறுத்தே அமையும்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சல்மான்_மீன்&oldid=2723783" இருந்து மீள்விக்கப்பட்டது