ஒலி அதிர்வெண்
ஒலி அளவீடுகள் | |
---|---|
இயல்பு | குறியீடு |
ஒலி அழுத்தம் | p, SPL,LPA |
துணிக்கை வேகம் | v, SVL |
துணிக்கை இடம்பெயர்வு | δ |
ஒலிச் செறிவு | I, SIL |
ஒலி வலு | P, SWL, LWA |
ஒலிச் சக்தி | W |
ஒலிச் சக்தி அடர்த்தி | w |
ஒலி வெளிக்காட்டுகை | E, SEL |
ஒலித்தடை | Z |
ஒலி வேகம் | c |
கேள் மீடிறன் | AF |
ஒலிபரப்பு இழப்பு | TL |
ஒலி அதிர்வெண் (Audio frequency) என்பது மனிதர்களால் கேட்கக் கூடிய அதிர்வெண் கொண்ட காலச்சுழல் அதிர்வினால் வகைப்படுத்தப்படுவதாகும். இது ஒலியின் பண்பு ஆகும். இதனை ஹெர்ட்ஸ் என்பதினால் அளவிடுவர்.[1] இது ஒலியின் சுருதி சார்ந்த பண்பு ஆகும்.
20 முதல் 20,000 Hz வரை மனிதர்களால் கேட்க கூடிய அதிர்வெண் அளவுகள் ஆகும்.[2][3][4] ஆயினும் கேட்டல் தகமை சூழல் சார்ந்தும் மாறுபாடுகளைக் காட்டும். 20 Hzக்கு குறைவான ஒலியின் அதிர்வெண்களைக் கேட்க இயலாவிட்டாலும் உணர இயலும். அதன் அதிர்வின் வீச்சின் அளவு அதிகமாக இருப்பதால் உணர முடிகிறது. 20,000 Hz க்கு மேலேயுள்ள ஒலியின் அதிர்வெண்களை, குறைந்த வயதுள்ளவர்களால் உணர முடிகிறது. ஆனால் வயது ஆக ஆக காதின் கேட்கும் திறன் குறைவதால் அதிக ஒலி அதிர்வெண்களை உணர இயலுவதில்லை.[5]
மனிதனின் கேள் மீடிறன் எல்லை பொதுவாக 20 Hz முதல் 20 kHz.[4][6] எனக் கூறப்பட்ட போதிலும் சீர்மையான ஆய்வுகூட நிலைமைகளின் கீழ் மனிதனால் 12 Hz[7] அளவுக்கும் குறைந்த மீடிறனையும் 28 kHz, அளவு உயர்ந்த மீடிறனையும் கூடக் கேட்க முடியும். இதில் மனிதக் காதுகள் 2,000 முதல்5,000 Hz.வரையான ஒலிக்கு மிகவும் உறுத்துணர்ச்சி கூடியதாகக் காணப்படும்[8] தனிப்பட்ட மனிதக் காதுகளின் கேள் தகவு, கேட்டல் தொகுதியின் பொதுவான நிலைமை மற்றும் நரம்புத்தொகுதியின் தன்மை என்பவற்றைப் பொறுத்து மாறுபடும். கேட்டல் தகவு வயதுடன் குறைவடையலாம்.[9] சராசரியாக மனிதரில் எட்டு வயதில் இருந்து கேள் மீடிறன் வீச்சின் உயர் எல்லையளவில் குறைவு ஏற்பட ஆரம்பிக்கின்றது. பொதுவாக ஆண்களை விட பெண்களில் கெள் மீடிறனின் அளவில் வீழ்ச்சி ஏற்படும் விகிதம் குறைவாகும். ஆண்கள் சராசரியாக அவர்களது நாற்பதாவது வயதில் 5 to 10 dB அளவு பெண்களைவிட அதிக கேள் மீடிறனின் உயர் எல்லையிலான இழப்பை எதிர்கொள்ளுகின்றனர்.[10][11]
கேள்தகவை அளத்தல்
[தொகு]கேள்தகவை அளக்க கெள்தகவுமானி பயன்படும். இது கேள்தகவு வரைவு மூலம் கேட்டல் பண்பின் அளவைத்தரும். வெவ்வேறுபட்ட மீடிறன்களில் ஏற்கனவே சீர் செய்யப்பட்ட தலைப்பன்னிகள் மூலம் பிறப்பிக்கப்பட்ட ஒலிக்கான அளவீடுகள் பெறப்படும். இதன்போதான கேள்தகவு வளையிகள் வரையப்பட்டு மாறுநிலை கேள்தகவு எல்லைகள் துணியப்படும்.
வெவ்வேறு விலங்குகளின் கேள் மீடிறன்கள்
[தொகு]மனிதக் காதுகளால் கேட்க முடியாத கேள் மீடிறன் வீச்சுகளிலும் சில விலங்குகளால் கேட்க முடியும். ஓங்கில்கள் மற்றும் வௌவால்கள் 100,000 Hz வரையான ஒலியைக் கேட்கும் ஆற்றல் உள்ளவை. யானைகள் 14 முதல் 16 Hz வரையான குறைந்த மீடிறன் ஒலிகளைக் கூட கேட்கும் ஆற்றலுள்ளது. அதே வேளை திமிங்கிலங்கள் நீரில், 7 Hz அளவிலான குறைந்த மீடிறன் கொண்ட ஒலியைக் கூடக் கேட்கும் ஆற்றல் உடையது.
ஒலி அதிர்வெண்ணும் விளக்கமும்
[தொகு]ஒலி அதிர்வெண் (Hz) | சுரம் 8 | விளக்கம் |
---|---|---|
16 முதல் 32 | 1வது | மனிதக் காது கேட்கக் கூடிய மிகக் குறைந்த அதிர்வெண் ஆகும், குழாய் வடிவ இசைக் கருவிகளில் உருவாகும் மிகச் சிறிய சுதி ஒலி அலையாகும். |
32 முதல் 512 | 2வது முதல் 5வது | சீர் (Rhythm) அதிர்வெண்கள், மட்டக் குரலின் (bass) குறை மற்றும் அதிக சுதிகளைக் கொண்டுள்ளது. |
512 முதல் 2048 | 6வது முதல் 7வது | மனிதக் காதின் கேட்கும் திறனை நிர்ணயிக்கிறது. கூம்புக் குழாயில் கேட்பது போன்ற தரத்தைப் பெற்றுள்ளது. |
2048 முதல் 8192 | 8வது முதல் 9வது | பேச்சை உணர வைக்கிறது. உதட்டுச் சிரை மாறிலிக்கும் (Labial consonant) உரசொலி மாறிலிக்கும் (Fricative consonant) இடைப்பட்ட அளவைப் பெற்றுள்ளது. |
8192 முதல் 16384 | 10வது | கிணிக் கருவியில் (cymbals) உள்ள மணிகள் எழுப்பும் ஒலி அளவைப் போன்றது. பேச்சின் குழிந்துரசொலிப் (sibilance) போன்றது. |
16384 முதல் 32768 | 11வது | மனிதக் காதுகள் கேட்கக் முடியாத மிக அதிகபட்ச அதிர்வெண் ஆகும். |
மிடி (Musical Instrument Digital Interface) குறிப்பு | ஒலி அதிர்வெண் (Hz) | விளக்கம் | ஒலிக் கோப்பு |
---|---|---|---|
C-1 | 8.18 | ஒரு இசைக் கருவியின் குறைந்த பட்ச சுதி (note) | கேட்க இயலாத அடிப்படை அதிர்வெண் |
C0 | 16.35 | நீண்ட குழாய் இசைக் கருவிகளில் உருவாகும் குறைந்த பட்ச சுதி | சாதாரண நிலையில் கேட்க இயலாத அடிப்படை அதிர்வெண் |
C1 | 32.70 | 88-பட்டைகளைக் கொண்ட கின்னரப்பெட்டியின் குறைந்த பட்ச சுதி. | |
C2 | 65.41 | செல்லோவின் குறைந்த பட்ச சுதி | |
C3 | 130.81 | வியோலம் போன்ற குறைந்த பட்ச சுதி | |
C4 | 261.63 | குறை மத்திய தர சுதி | |
C5 | 523.25 | அதி மத்திய தர சுதி | |
C6 | 1046.50 | பெண்களால் உருவாக்கப்படக் கூடிய அதிக பட்ச சுதியாகும். | |
C7 | 2093 | புல்லாங்குழல் உருவாக்கப்படக் கூடிய அதிக பட்ச சுதி. | |
C8 | 4186 | 88-பட்டைகளைக் கொண்ட கின்னரப்பெட்டியின் அதிக பட்ச சுதி. | |
C9 | 8372 | ||
C10 | 16744 | எதிர்மின் கதிர் குழாய் தொலைக்காட்சி செயல்படும் போது உருவாக்கும் இரைச்சல் |
கேள் மீடிறனை வானொலி அலைகளாக மாற்றுதல்
[தொகு]கேள் மீடிறன் அலைகள் குறைந்த சுதியைக் கொண்டிருப்பதால் அவை கதிர்ப்படைய மாட்டாது. இது உயர் மீடிறன் காவி அலைகளுடன் கலக்கப்பட்டு மட்டிசைக்கப்படுவதனால் வானொலி அலையாக மாற்றப்பட்டு கடத்தப்படுகின்றது. வானொலிக் கருவிகளில் மட்டிசைப்பு அழிக்கப்பட்டு மீண்டும் கேள் மீடிறன் அலைகள் உருவாக்கப்படுகின்றன. இதனால் நாம் அவற்றைக் கேட்க முடிகின்றது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Pilhofer, Michael (2007). Music Theory for Dummies. For Dummies. p. 97.
- ↑ "Hyperphysics". பார்க்கப்பட்ட நாள் 19 September 2014.
- ↑ Heffner, Henry; Heffner, Rickye (January 2007). "Hearing Ranges of Laboratory Animals". American Association for Laboratory Animal Science 46 (1): 20. http://www.ingentaconnect.com/content/aalas/jaalas/2007/00000046/00000001/art00003. பார்த்த நாள்: 19 September 2014.
- ↑ 4.0 4.1 Rosen, Stuart (2011). Signals and Systems for Speech and Hearing (2nd ed.). BRILL. p. 163.
For auditory signals and human listeners, the accepted range is 20Hz to 20kHz, the limits of human hearing
- ↑ Bitner-Glindzicz, M (2002). "Hereditary deafness and phenotyping in humans.". British medical bulletin 63 (1): 73–94. doi:10.1093/bmb/63.1.73. பப்மெட்:12324385.
- ↑ Rossing, Thomas (2007). Springer Handbook of Acoustics. Springer. pp. 747, 748. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0387304465.
- ↑ Olson, Harry F. (1967). Music, Physics and Engineering. Dover Publications. p. 249. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-486-21769-8.
Under very favorable conditions most individuals can obtain tonal characteristics as low as 12 cycles.
- ↑ Gelfand, Stanley (2011). Essentials of Audiology. Thieme. p. 87. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1604061553.
hearing is most sensitive (i.e., the least amount of intensity is needed to reach threshold) in the 2000 to 5000 Hz range
- ↑ Rodriguez Valiente A, Trinidad A, Garcia Berrocal JR, Gorriz C, Ramirez Camacho R (April 2014). "Review: Extended high-frequency (9–20 kHz) audiometry reference thresholds in healthy subjects". Int J Audiol 53 (8): 531–545. doi:10.3109/14992027.2014.893375. பப்மெட்:24749665.
- ↑ Dittmar, Tim (2011). Audio Engineering 101: A Beginner's Guide to Music Production. Taylor & Francis. p. 17. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780240819150.
- ↑ Moller, Aage R. (2006). Hearing: Anatomy, Physiology, and Disorders of the Auditory System (2 ed.). Academic Press. p. 217. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780080463841.