ஐயர் பங்களா
ஐயர் பங்களா
Iyer Bungalow அய்யர் பங்களா | |
|---|---|
| ஆள்கூறுகள்: 9°58′01″N 78°08′04″E / 9.9670°N 78.1344°E | |
| நாடு | |
| மாநிலம் | |
| மாவட்டம் | மதுரை மாவட்டம் |
| ஏற்றம் | 192 m (630 ft) |
| மொழிகள் | |
| • அலுவல் | தமிழ், ஆங்கிலம் |
| • பேச்சு | தமிழ், ஆங்கிலம் |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே.) |
| அஞ்சல் குறியீட்டு எண் | 625014 |
| அருகிலுள்ள ஊர்கள் | மதுரை, மூன்றுமாவடி, அப்பன்திருப்பதி, கடச்சனேந்தல், கோ. புதூர், பீபி குளம், ஊமச்சிகுளம், யா. ஒத்தக்கடை, தல்லாகுளம், கே. கே. நகர், கோரிப்பாளையம் மற்றும் மாட்டுத்தாவணி |
| மாநகராட்சி | மதுரை மாநகராட்சி |
| மாவட்ட ஆட்சித் தலைவர் | மருத்துவர் எஸ். அனீஷ் சேகர், இ. ஆ. ப. |
| இணையதளம் | https://madurai.nic.in |
ஐயர் பங்களா (ஆங்கிலம்: Iyer Bungalow) அல்லது அய்யர் பங்களா என்பது இந்திய தீபகற்பத்தில் தமிழ்நாடு மாநிலத்தின் மதுரை மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும்.[1][2]
கடல் மட்டத்திலிருந்து சுமார் 192 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள ஐயர் பங்களா பகுதியின் புவியியல் ஆள்கூறுகள், 9°58′01″N 78°08′04″E / 9.9670°N 78.1344°E ஆகும். மதுரை, மூன்றுமாவடி, அப்பன்திருப்பதி, கடச்சனேந்தல், கோ. புதூர், பீபி குளம், ஊமச்சிகுளம், யா. ஒத்தக்கடை, தல்லாகுளம், கே. கே. நகர், கோரிப்பாளையம் மற்றும் மாட்டுத்தாவணி ஆகியவை ஐயர் பங்களா பகுதிக்கு அருகிலுள்ள சில முக்கியமான புறநகர்ப் பகுதிகளாகும்.
மதுரையிலிருந்து நத்தம் பகுதிக்குச் செல்வதற்காக சுமார் ரூ.615 கோடி செலவில் சுமார் 7.5 கிலோ மீட்டர் நீளத்தில் கட்டப்பட்டு, 2023ஆம் ஆண்டு மக்கள் பயன்பாட்டிற்காகத் திறக்கப்பட்ட உயர்மட்ட மேம்பாலச் சாலை ஐயர் பங்களா வழியாகச் செல்கிறது.[3] 2023ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் ஏழாம் நாள் பாரதப் பிரதமரால் காணொலி மூலம் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்பட்ட, இந்தியாவிலேயே நீளமான இச்சாலையில், ஏறவும் இறங்கவும், ஐயர் பங்களா பகுதியில் அணுகு சாலைகள் நிறுவப்பட்டுள்ளன.[4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Iyer Bungalow junctionturns chaotic sans signal". The Hindu (in Indian English). 2018-07-17. Retrieved 2023-07-17.
- ↑ "மதுரையில் போக்குவரத்து மாற்றம் - காவல்துறை அறிவிப்பு..." News18 Tamil. 2023-04-08. Retrieved 2023-07-17.
- ↑ மாலை மலர் (2023-07-03). "ஆபத்தான "பைக்" ரேசில் ஈடுபடும் இளைஞர்கள்" (in ta). https://www.maalaimalar.com/news/district/madurai-news-youngsters-engage-in-dangerous-bike-races-630909.
- ↑ "மதுரை - நத்தம் ரோடு பறக்கும் பாலம் நாளை காணொலியில் திறக்கிறார் பிரதமர் - Dinamalar Tamil News". Dinamalar. 2023-04-06. Retrieved 2023-07-17.