கடச்சனேந்தல்
கடச்சனேந்தல்
Kadachanendhal கடைச் சிலம்பு ஏந்தல் | |
---|---|
ஆள்கூறுகள்: 9°58′39″N 78°10′13″E / 9.9776°N 78.1703°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | மதுரை மாவட்டம் |
ஏற்றம் | 187 m (614 ft) |
மொழிகள் | |
• அலுவல் | தமிழ், ஆங்கிலம் |
• பேச்சு | தமிழ், ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே.) |
அஞ்சல் குறியீட்டு எண் | 625107 |
அருகிலுள்ள ஊர்கள் | மதுரை, மூன்றுமாவடி, அப்பன்திருப்பதி, கோ. புதூர், பீபி குளம், ஊமச்சிகுளம், யா. ஒத்தக்கடை, தல்லாகுளம், கே. கே. நகர், கோரிப்பாளையம் மற்றும் மாட்டுத்தாவணி |
மாநகராட்சி | மதுரை மாநகராட்சி |
மாவட்ட ஆட்சித் தலைவர் | மருத்துவர் எஸ். அனீஷ் சேகர், இ. ஆ. ப. |
இணையதளம் | https://madurai.nic.in |
கடச்சனேந்தல் (ஆங்கில மொழி: Kadachanendhal) என்பது இந்திய தீபகற்பத்தில் தமிழ்நாடு மாநிலத்தின் மதுரை மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும்.[1][2][3][4] கடைச் சிலம்பு ஏந்தல் என்ற பெயரே மருவி கடச்சனேந்தல் என்றாகி விட்டது. சிலப்பதிகாரத்தில், கோவலன் மற்றும் அவரது மனைவி கண்ணகி, சமணத் துறவி கவுந்தியடிகளால் மதுரைக்கு அழைத்துச் செல்லப்படும் போது, முதல் நாள் தங்க வைக்கப்பட்ட இடமே இந்த கடச்சனேந்தல் ஆகும்.[5] மதுரையிலிருந்து அழகர்கோவில் செல்லும் வழியில் அமைந்துள்ள கடச்சனேந்தல் பகுதிக்கு அருகில் ஒவ்வோர் ஆண்டும் சூன் மாதம் கொன்றை மலர்கள் பூத்துக் குலுங்கி மனதுக்கும் கண்களுக்கும் விருந்தளிக்கும்.[6]
கடல் மட்டத்திலிருந்து சுமார் 187 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள கடச்சனேந்தல் பகுதியின் புவியியல் ஆள்கூறுகள் 9°58′39″N 78°10′13″E / 9.9776°N 78.1703°E ஆகும்.
மதுரை, மூன்றுமாவடி, அப்பன்திருப்பதி, கோ. புதூர், பீபி குளம், ஊமச்சிகுளம், யா. ஒத்தக்கடை, தல்லாகுளம், கே. கே. நகர், கோரிப்பாளையம் மற்றும் மாட்டுத்தாவணி ஆகியவை கடச்சனேந்தல் பகுதிக்கு அருகிலுள்ள சில முக்கியமான புறநகர்ப் பகுதிகளாகும்.
புனித அந்தோணியார் தேவாலயம் ஒன்று கடச்சனேந்தல் பகுதியில் அமைந்துள்ளது.[7]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ To Paramacivan̲ (1989). Al̲akar Kōyil. Patipputtur̲ai, Maturai Kāmarācar Palkalaik Kal̲akam.
- ↑ Mu Irāmacuvāmi (1983). Tōṟpāvai niḻaṟkūttu. Patipputuṟai, Maturai Kāmarācar Palkalaikkaḻakam.
- ↑ Nana Yaw Obiri-Yeboa Boaitey (2004). Preface to Spoken Tamil (in ஆங்கிலம்). University of California, Berkeley.
- ↑ "மதுரை மாநகர் கே.புதூர், பீ.பீ.குளம், அய்யர் பங்களா, கடச்சனேந்தல், மாட்டுத்தாவணியில் கனமழை". www.dinakaran.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-07-16.
- ↑ kannagitemple (2016-02-18). "கடச்சனேந்தல்". kannagitemple (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-07-16.
- ↑ "கொத்துக்கொத்தாக கொன்றை பூக்கள் - Dinamalar Tamil News" (in ta). 2023-06-26. https://m.dinamalar.com/detail.php?id=3358359.
- ↑ "St. Antony's Church – Kadachanendal – Archdiocese of Madurai" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-07-16.