உள்ளடக்கத்துக்குச் செல்

ஏ. பி. ராஜ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஏ. பி. ராஜ்
பிறப்புஅந்தோனி பாஸ்கர் ராஜ்
(1930-06-25)25 சூன் 1930
ஆலப்புழா, திருவிதாங்கூர், பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு
இறப்பு24 அக்டோபர் 2020(2020-10-24) (அகவை 90)[1]
சென்னை, தமிழ்நாடு, இந்தியா
தேசியம்இந்தியர்
மற்ற பெயர்கள்ஏ. பாஸ்கர் ராஜ் (சிங்கள திரையுலகில்)
பணிஇயக்குநர், தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர்
செயற்பாட்டுக்
காலம்
1951–1986
பிள்ளைகள்சரண்யா பொன்வண்ணன் (மகள்)[2]

ஏ. பாஸ்கர் ராஜ் (A. Bhaskar Raj) என்று அழைக்கப்படும் அந்தோனி பாஸ்கர் ராஜ் ( 25 சூன் 1930 - 23 ஆகத்து 2020) என்பவர் ஒரு இந்திய திரைப்பட இயக்குநர் ஆவார். இவர் சிங்களம், மலையாளம், தமிழ் உள்ளிட்ட மொழிகளில் திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

தொழில்

[தொகு]

1951 முதல் 1960 வரை, இவர் பத்து சிங்கள திரைப்படங்களை இயக்கினார். அதைத் தொடர்ந்து 1963 முதல் 1984 வரை 65 மலையாளத் திரைப்படங்களை இயக்கினார். இரண்டு தமிழ் படங்களையும் இயக்கியுள்ளார். இவர் தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் தேசிய விருது பெற்ற நடிகை சரண்யா பொன்வண்ணனின் தந்தை ஆவார். டேவிட் லீனின் த பிரிட்ச் ஆன் த ரிவர் க்வாய் படத்தின் இரண்டாம் அலகின் உதவி இயக்குநராக ஏ. பி. ராஜ் இருந்தார்.

இறப்பு

[தொகு]

இவர் 23 ஆகத்து 2020 அன்று தன் 90 ஆவது வயதில் மாரடைப்பு காரணமாக இறந்தார். 

திரைப்படவியல்

[தொகு]

மலையாளத் திரைப்படங்கள்

  • ஓர்மிக்கன் ஓமானிக்கன் (1985)
  • மனசே நினைவு மங்கலம் (1984)
  • நிங்கலில் ஒரு ஸ்திரீ (1984)
  • தாளம் தேடிய தரட்டு (1983)
  • ஆக்ரோசம் (1982)
  • கழுமரம் (1982)
  • அதிமா சங்கலா (1981)
  • அக்னி சாரம் (1981)
  • வழிகள் யாத்ரக்கர் (1981)
  • கலாம் காத்து நின்னில்லா (1979)
  • இரும்பாழிகள் (1979)
  • கழுகன் (1979)
  • ஆனா களரி (1978)
  • அவகாசம் (1978)
  • கனல் கட்டகல் (1978)
  • பிரார்த்தனா (1978)
  • ராஜு ரஹீம் (1978)
  • சொசைட்டி லேடி (1978)
  • அவள் ஒரு தேவாலயம் (1977)
  • பார்யா விஜயம் (1977)
  • கடுவாயே பிடிச்சா கிடுவா (1977)
  • சிரிகுடுக்கா (1976)
  • லைட் ஹவுஸ் (1976)
  • பிரசாதம் (1976)
  • சீமந்த புத்திரன் (1976)
  • அஷ்டமி ரோகினி (1975)
  • சீப் கெஸ்ட் (1975)
  • சுமடு டார்லிங் (1975)
  • ஊமனா குஞ்சு (1975)
  • சூரிய வம்சம் (1975)
  • டூரிஸ்ட் பங்களா (1975)
  • ஹனிமூன் (1974)
  • ரகசியராத்திரி (1974)
  • அக்னதவாசம் (1973)
  • புட்பால் சாம்பியன் (1973)
  • பச்சை நோட்டுகள் (1973)
  • சாஸ்திரம் ஜெயிச்சு மனுஷ்யன் தோட்டு (1973)
  • கலிப்பாவா (1972)
  • நிர்தசாலா (1972)
  • சம்பவமி யுகே யுகே (1972)
  • மருந்தில் ஒரு மலையாளி (1971)
  • நீதி (1971)
  • எழுதாத கத (1970)
  • லாட்டரி டிக்கெட் (1970)
  • டேஞ்சர் பிஸ்கட் (1969)
  • கண்ணூர் டீலக்ஸ் (1969)
  • கலியல்ல கல்யாணம் (1968)

தமிழ் திரைப்படங்கள்

சிங்கள திரைப்படங்கள்

  • பிரேமா தாரகயா (1953)
  • அஹங்காரா ஸ்த்ரீ (1954)
  • பெரகடோரு பேனா (1955)
  • ரம்யலதா (1956)
  • சோஹோயுரோ (1958)
  • வன மோகினி (1958)

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Noted film director AB Raj (Raj Antony Bhaskar) passed away". கேரளகௌமுதி. 23 August 2020. https://keralakaumudi.com/en/news/news.php?id=376478&u=noted-film-director-ab-raj-passes-away#:~:text=THIRUVANANTHAPURAM%3A%20Noted%20film%20director%20AB,industry%20between%201951%20and%201986.. 
  2. Nadar, A Ganesh (21 June 2011). "I never expected the National Award". ரெடிப்.காம். பார்க்கப்பட்ட நாள் 8 July 2017.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏ._பி._ராஜ்&oldid=3748259" இலிருந்து மீள்விக்கப்பட்டது