ஏ.வி.எம் மரபுரிமை அருங்காட்சியகம்
ஏ.வி.எம் மரபுரிமை அருங்காட்சியகம் (AVM Heritage Museum) என்பது இந்தியாவின் தமிழ்நாட்டின், சென்னையில் உள்ள ஏவிஎம் படப்பிட்டிப்பு அரங்க வளாகத்தில் அமைந்துள்ள ஒரு அங்காட்சியகம் ஆகும்.[1][2]
ஏ.வி.எம் மரபுரிமை அருங்காட்சியகம் 2023 ஆம் ஆண்டு துவக்கப்பட்டது. இது ஏ. வி. எம். நிறுவனத்தின் பாரம்பரியத்தையும், வரலாற்றையும் பரைசாற்றும்விதமாக உருவாக்கப்பட்டது. இந்த அருங்காட்சியகத்தில் ஏ.வி.எம் நிறுவனம் தயாரித்த திரைப்படங்களில் பயன்படுத்தபட்ட எல்லா கருவிகளும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. பராசக்தி திரைப்படம் வெளியாகி 50 ஆம் ஆண்டை நினைவுகூறும் விதமாக அப்படத்தில் ஏவிஎம் படப்பிடிப்புத் தளத்தில் சிவாஜி கணேசன் நடித்த முதல் காட்சியில் அவர் சக்சஸ் என்ற வசனத்தைக் கூறிய இடத்தில் 2002 இல் ஒரு நினைவுச் சின்னம் அமைக்கபட்டது. அந்த நினைவுச் சின்னம் பெயர்க்கப்பட்டு அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. அதேபோல சகலகலா வல்லவன் (1982) படத்தில் இளமை இதோ இதோ பாடலில் கமல்ஹாசன் பயன்படுத்திய 1980 ஆண்டைய ராயல் என்ஃபீல்ட் புல்லட் வண்டி, பாயும் புலி (1983) படத்தின் சண்டைக் காட்சியில் இரசினிகாந்து பயன்படுத்திய நீளமான, உயரம் குறைந்த சுசுகி இருசக்கர ஊர்தி, திருப்பதி (2006), பிரியமான தோழி (2003), அயன் (2009) போன்ற படங்களில் பயன்படுத்தபட்ட இருசக்கர ஊர்திகள், அக்கால லூனா, 1970களில் தமிழ்நாட்டில் ஒழிக்கப்பட்ட கைரிக்சா, சிவாஜி (2007) படத்தில் வாஜி வாஜி பாடலில் இரசினிகாந்து பயன்படுத்திய பல்லக்கு, இரசினி சிலை, எஜமான் (1993) படத்தில் ஆலப்போல் வேலப்போல் பாடலில் மீனா பயன்படுத்திய பல்லக்கு போன்றவை காட்சிக்கு வைக்கபட்டுள்ளன.[3]
ஏ. வி. மெய்யப்பச் செட்டியாரின் பேரன் எம். எஸ். குகன் மகிழுந்துகளை சேகரிக்கும் நாட்டமுள்ளவர். அவர் சேகரித்த பழமையான, புதுமையான மகிழுந்துகள் இங்கு காட்சிப்படுத்தபட்டுள்ளன.
1950களில் தொடங்கி ஏ. வி. எம். படப்பிடிப்புத் தளத்தில் திரைப்பட தயாரிப்புக்குப் பிந்தைய பணிகளில் பயன்படுத்தப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட கருவிகள் உரிய விளக்கக் குறிப்புகளுடன் காட்சிப்படுத்தபட்டுள்ளன.
இந்த அருங்காட்சியகத்தை வாரத்தில் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் மட்டுமே பார்க்க அனுமதி உண்டு.[4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Bureau, The Hindu (2023-05-19). "Watch". The Hindu (in Indian English). பார்க்கப்பட்ட நாள் 2024-11-04.
{{cite web}}
: Text "Inside the new AVM Heritage Museum in Chennai" ignored (help) - ↑ "From vintage cars to antique film cameras, AVM Heritage Museum in Chennai offers a lot". The Indian Express (in ஆங்கிலம்). 2023-05-08. பார்க்கப்பட்ட நாள் 2024-11-04.
- ↑ ஆ.பி.அர்ஜுன் (2023-05-15). "AVM Heritage Museum: பராசக்தி மைக் முதல் சிவாஜி கார் வரை!". https://www.vikatan.com/. பார்க்கப்பட்ட நாள் 2024-11-04.
{{cite web}}
: External link in
(help); Text "Spot Visit" ignored (help)|website=
- ↑ "அந்தக் காலத்தை ரசிக்கலாம் வாங்க!". Hindu Tamil Thisai. 2024-10-25. பார்க்கப்பட்ட நாள் 2024-11-04.
{{cite web}}
: Text "சிறப்புக் கண்ணோட்டம்" ignored (help)