ராயல் என்ஃபீல்ட் (இந்தியா)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ராயல் என்ஃபீல்ட்
வகைதுணை நிறுவனம்
நிறுவுகைஎன்ஃபீல்ட் இந்தியாவாக 1955-ல் நிறுவப்பட்டது
தலைமையகம்சென்னை, இந்தியா
தொழில்துறைமோட்டார் வாகனம்
உற்பத்திகள்புல்லட் மோட்டார் சைக்கிள்
தாய் நிறுவனம்எய்சர் மோட்டார்ஸ்
இணையத்தளம்www.royalenfield.com

ராயல் என்ஃபீல்ட் இந்தியாவில் சென்னையை தலைமையிடமாக கொண்டு மோட்டார் சைக்கிள்களை தயாரிக்கும் நிறுவனமாகும். முற்காலத்தில் பிரிட்டிஷ் மோட்டார் சைக்கிள், ராயல் என்ஃபீல்ட் மற்றும் மெட்ராஸ் மோட்டார்ஸ் (தற்போது எய்சர் மோட்டாரின் துணை நிறுவனம்) இவை அனைத்தும் இந்தியாவின் மோட்டார் சைக்கிள் உற்பத்தியாளர்களாக சிறந்து விளங்கின. [1] இதன் தனித்தன்மையான மோட்டார் சைக்கிள் ராயல் என்ஃபீல்ட் புல்லட், தனது தனிப்பட்ட அதிரவைக்கும் ஒலியுடன் கூடிய உயர்திறன் இயந்திரங்கள் இந்த நிறுவனத்தின் மதிப்புமிக்க மோட்டார் சைக்கிள் வகைகளில் குறிப்பிடத்தக்கது.[2]

வரலாறு[தொகு]

ராயல் என்ஃபீல்ட் மோட்டார் சைக்கிள்கள் 1949 முதல் இங்கிலாந்தில் தயாரிக்கப்பட்டு இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டது. 1955-ஆம் ஆண்டு இந்திய அரசாங்கம், காவல் துறை மற்றும் இராணுவத்துறையின் ரோந்துப் பணிக்காக புல்லட்டை தேர்வு செய்தது. இதனால் இந்திய அரசாங்கம் 800 350சிசி வகை புல்லட்டை வாங்கியது.

புதிய வகைகள்[தொகு]

கடந்த சில வருடங்களாக பல்வேறு வகையான மோட்டார் சைக்கிள்கள் உலக அளவில் விற்கப்படுகின்றன.

 • புல்லட் 350 மற்றும் 500
 • புல்லட் எலக்ட்ரா
 • க்ளாசிக் டிசர்ட் ஸ்டார்ம்
 • க்ளாசிக் க்ரோம்
 • க்ளாசிக் பேட்டில் கிரீன்
 • க்ளாசிக் 350 மற்றும் 500
 • தண்டர்பேர்ட் 350 மற்றும் 500
 • காண்டினென்டல் ஜிடி
 • ஹிமாலயன் [3]
 • காண்டினென்டல் ஜிடி 650
 • இன்டர்செப்டார் 650 [4]

ராயல் என்ஃபீல்ட் 1995-ஆம் ஆண்டு முதல் அமெரிக்காவில் இறக்குமதி செய்யபடுகின்றது. அமெரிக்காவில் கிடைக்கும் வகைகள்:

 • க்ளாசிக் 500
 • புல்லட் எலக்ட்ரா - எக்ஸ்
 • புல்லட் எலக்ட்ரா - க்ளாசிக்

அமைவிடம்[தொகு]

ராயல் என்ஃபீல்ட் தொழிற்சாலை சென்னையில் உள்ள திருவொற்றியூரில் அமைந்துள்ளது. இது உலகில் இன்றளவும் வழக்கத்தில் உள்ள மிக பழமையான மோட்டார் சைக்கிள் நிறுவனமாகும். [5][6] 2013-ஆம் ஆண்டு மே மாதம் தனது புதிய தொழிற்சாலையை சென்னையை அடுத்த ஒரகடத்தில் நிறுவியது.[7] மூன்றாவது தொழிற்சாலையை சென்னை அருகில் உள்ள வல்லம் வடகல் பகுதியில் நிறுவியுள்ளது[8]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]