ஏர் இந்தியா எக்சுபிரசு விமானம் 812

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஏர் இந்தியா எக்சுபிரசு விமானம் 812
விபத்துக்குள்ளான விமானத்தை ஒத்த ஏர் இந்தியா எக்சுபிரசு போயிங் 737
விபத்து தொகுப்பு
நாள்22 மே 2010
வகைRunway overrun
Siteமங்களூர் பன்னாட்டு விமானநிலையத்தின்
ஓடுதளம் 06/24 இற்கு அப்பால்
பயணிகள்160[1][2]
சிப்பந்திகள்6[3]
காயம்8
உயிரிழந்தோர்158[3]
உயிர் தப்பியோர்8[3]
விமான வகைபோயிங் 737-8HG
இயக்குனர்ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
Tail numberVT-AXV
புறப்பாடுதுபாய்
வந்தடையும் இடம்மங்களூர், இந்தியா

ஏர் இந்தியா எக்சுபிரசு விமானம் 812 (Air India Express Flight 812), என்பது துபாய் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து இந்தியாவின் மங்களூருக்கு இந்திய அரசின் விமான சேவை நிறுவனமான ஏர் இந்தியாவால் இயக்கப்படும் குறைந்த கட்டண வான் ஊர்தியாகும். இவ்விமானம் 22 மே 2010 அன்று காலை சுமார் 06:30 மணிக்கு மங்களூர் விமான நிலையத்தில் தரையிரங்கும் போது ஓடுதளத்தில் இருந்து விலகி பெரும் விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் சுமார் 160திற்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர்.[4].

இறந்தோர்[தொகு]

பயணிகள் பட்டியலில் மொத்தம் 169 பெயர்கள் இருந்தாலும் 9 பயணிகள் விமானத்தில் ஏறவில்லை.[5] சுமார் 152 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிகிறது, மேலும் விமானம் தீ பிடித்ததால் பலரது உடல்கள் அடையாளம் காண இயலாத அளவில் கருகியது.[6] இவ்விபத்தில் உயிரிழந்தவர்களில் பெரும்பாலோனர் கேரளா மாநிலத்தின் காசர்கோடு மற்றும் கண்ணூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.[7] இவர்களில் இறந்தவர்களில் பலர் மத்திய கிழக்கு நாடுகளில் கூலி தொழிலாளர்களாக வேலை செய்தவர்கள் ஆவர்.[8]

நாடு கொல்லப்பட்டவர்கள் உயிர்பிழைத்தவர்கள் மொத்தம்
பயணிகள் விமான ஊழியர்கள்
 வங்காளதேசம் 0 0 1 1
 ஐக்கிய இராச்சியம் 0 1 0 1
 இந்தியா 152 5 7 164
மொத்தம் 152 6 8 166

குற்றச்சாட்டுக்கள்[தொகு]

இவ்விமானத்தை ஓட்டிய விமானி 10,500 மணிநேரம் ஓட்டிய அனுபவம் உள்ளவர் என்றும் ஆனால் விபத்து நடந்த அன்றைய தினம் தொடர்ந்து 10 மணிநேரம் வரை தொடர்ந்து இயக்கியதாகவும் அதனால் அவர் களைப்படைந்திருக்கலாம் என்றும் தினத்தந்தி மே 24,2010 அன்று செய்தி வெளியிட்டுள்ளது (சென்னைப் பதிப்பு).

இழப்பீடு[தொகு]

இறந்தவர்கள் குடும்பத்துக்கு 2,00,000 ம் காயமடைந்தவர்களுக்கு 50,000 ம் வழங்கப்படும் என இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் அறிவித்தார். இவை பிரதமர் தேசிய நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் [9]. கருநாடக முதல்வர் எதியூரப்பாவும் இறந்தவர்கள் குடும்பத்துக்கு 2,00,000 வழங்கப்படும் என அறிவித்துள்ளார் [10]. இவையல்லாமல் மாண்ட்ரீல் கருத்தரங்கில் ஏற்பட்ட ஒப்பந்தம் காரணமாக இந்திய வான் பயண சட்டத்தில் கொண்டுவரப்பட்ட சட்டதிருத்ததின் படி இறந்தவர்கள் குடும்பத்துக்கு இந்திய ரூபாய் 72,00,000 வழங்கும் படி விமான நிருவனத்துக்கு விமான போக்குவரத்து துறை அறிவுறுத்தியுள்ளது [11]. இடைக்கால இழப்பீடாக 12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 10,00,000 ம் 12 வயதுக்கும் குறைவானவர்களுக்கு 5,00,000 ம் காயமடைந்தவர்களுக்கு 2,00,000 ம் வழங்குவதாக இந்தியன் ஏர்லைன்சு அறிவித்துள்ளது. இந்த இழப்பீடு பிரதமர் அறிவித்துள்ள இழப்பீடுக்கு மேலதிகமானதாகும்.[12]


மேற்கோள்கள்[தொகு]

 1. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; AI Media Release 1 என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
 2. "List of passengers on Air India Express flight". The Hindu. 22 மே 2010. http://beta.thehindu.com/news/national/article435569.ece. பார்த்த நாள்: 22 மே 2010. 
 3. 3.0 3.1 3.2 பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; AI Media Release 6 என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
 4. http://timesofindia.indiatimes.com/City/Mangalore/Mangalore-Air-India-aircraft-overshoots-runway-160-feared-dead/articleshow/5960931.cms
 5. http://aviation-safety.net/database/record.php?id=20100522-0
 6. Mondal, Sudipto (22 May 2010). "At least 159 feared killed in air crash at Mangalore". தி இந்து. பார்த்த நாள் 22 May 2010.
 7. "Majority of AI crash victims believed to be Keralites". பிரஸ் டிரஸ்ட் ஆப் இந்தியா. 2010-05-22. http://www.ptinews.com/news/663562_Majority-of-AI-crash-victims-believed-to-be-Keralites. பார்த்த நாள்: 2010-05-22. 
 8. CNN Wire Staff. "Survivors, rescue workers detail Air India crash." CNN. 22 May 2010. Retrieved on 22 May 2010.
 9. http://www.ndtv.com/news/india/kin-of-crash-victims-to-get-up-to-rs-76-lakh-compensation-27182.php
 10. http://timesofindia.indiatimes.com/city/bangalore/Karnataka-govt-announces-compensation/articleshow/5963065.cms
 11. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". மூல முகவரியிலிருந்து 2012-02-12 அன்று பரணிடப்பட்டது.
 12. Air India Announces Interim Compensation for Mangalore Air Tragedy Victims - Press Information Bureau, Government of India, press release