எஸ். ஜான் ஜேக்கப்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எஸ். ஜான் ஜேக்கப் (S. John Jacob, மே 19, 1953 - பிப்ரவரி 13 2018[1]) படுவூரில் பிறந்த இவர் ஒரு இந்திய அரசியல்வாதியாகவும் தமிழ்நாட்டின் சட்டப்பேரவை உறுப்பினராகவும் பணியாற்றினார். இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்.[2]

ஜேக்கப் 2006 ஆம் ஆண்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கிள்ளியூர் தொகுதியில் தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு நடைபெற்ற 2006 ஆம் ஆண்டின் தேர்தலில், இந்திய தேசிய காங்கிரஸ் (INC) வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3] இவர் 13 ஆவது தமிழக சட்டப்பேரவையில் 100 சதவீத வருகைப் பதிவு பெற்ற 14 சட்டமன்ற உறுப்ப்பினர்களில் இவரும் ஒருவர் ஆவார்.[4]

ஜேக்கப், 2011 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் இந்திய தேசிய காங்கிரஸ்(INC) வேட்பாளராக கிள்ளியூரில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.[5] 2014 ஆம் ஆண்டில் ஜி. கே. வாசன் தமிழ் மாநில காங்கிரசு கட்சிக்குப் புத்துயிரளித்தார். தமிழ் மாநில காங்கிரசு கட்சி மக்கள் நலக் கூட்டணி மற்றும் தேசிய முற்போக்கு திராவிட கழகத்துடன் கூட்டணி அமைத்து, 2016 ஆம் ஆண்டு மாநில சட்டமன்ற தேர்தலில் போட்டியிடத் தமிழ் மாநில காங்கிரசு அறிவித்த 26 வேட்பாளர்களில் ஒருவராக ஜேக்கப்புக்கு கிள்ளியூர் தொகுதி மீண்டும் ஒருமுறை ஒதுக்கப்பட்டது. ஆனால் ஒரு வாரத்துக்குப் பின் டி. குமாரதாஸ் கிள்ளியூர் தொகுதியின் தமிழ் மாநில காங்கிரசு வேட்பாளரென மறுஅறிவிப்பு செய்யப்பட்டது.[6] ஆனால் அத்தேர்தலில் இத்தொகுதியில், இந்திய தேசிய காங்கிரசு வேட்பாளர் எஸ். ராஜேஷ்குமார் வெற்றி பெற்றார்.[7]

மேற்கோள்கள்[தொகு]

  1. Former Congress whip in TN assembly John Jacob dies
  2. "Thiru S. John Jacob (INC)". Legislative Assembly of Tamil Nadu. Archived from the original on 2016-02-15. பார்க்கப்பட்ட நாள் 2017-05-04.
  3. 2006 Tamil Nadu Election Results, Election Commission of India
  4. Ponnusamy, Mahalingam (13 April 2011). "Jayalalithaa attended assembly only 10 days". The Times of India. http://timesofindia.indiatimes.com/city/chennai/Jayalalithaa-attended-assembly-only-10-days/articleshow/7967014.cms. பார்த்த நாள்: 2017-05-04. 
  5. "List of MLAs from Tamil Nadu 2011". Government of Tamil Nadu.
  6. "Tamil Maanila Congress Chief GK Vasan Not To Contest Tamil Nadu Elections". NDTV. PTI. 19 April 2016. http://www.ndtv.com/tamil-nadu-news/tamil-maanila-congress-chief-gk-vasan-not-to-contest-tamil-nadu-elections-1397232. பார்த்த நாள்: 2017-05-04. 
  7. "Killiyur (Tamil Nadu) Election Results 2016". Infobase. பார்க்கப்பட்ட நாள் 2017-05-04.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எஸ்._ஜான்_ஜேக்கப்&oldid=3823314" இலிருந்து மீள்விக்கப்பட்டது