எஸ்பெராண்டோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Esperanto
எஸ்பெராண்டோ
எஸ்பெராண்டோ
உருவாக்கப்பட்டதுடாக்டர் லுடோவிக் லாசரஸ் ஜாமன்ஹாப்
Usersதெரியவில்லை (தாய்மொழியாக: 200 - 2000 (1996, மதிப்பிடு.);[1]
சரளமாக பேசும் மக்கள்: 100,000 - 2 மில்லியன் காட்டடப்பட்டது: 1887)
நோக்கம்
constructed language
  • பன்னாட்டு உருவாக்கப்பட்ட மொழி
    • Esperanto
      எஸ்பெராண்டோ
மூலம்ஜெர்மானிய மொழிகள் மற்றும் ரோமானிய மொழிகளிலிருந்து சொல்லகராதி; சிலாவிய மொழிகளிலிருந்து உச்சரிப்பு
மொழிக் குறியீடுகள்
ISO 639-1eo
ISO 639-2epo
ISO 639-3epo

எஸ்பராண்டோ ( About this soundEsperanto )[2] உலகில் அதிகம் பேசப்படும் கட்டமைக்கப்பட்ட மொழியாகும்.[3] எஸ்பெராண்டோ என்பதன் பொருள் நம்பிக்கையுடனான என்பதாகும். 1887இல் எல். எல். சாமன்ஹோஃப் எழுதிய 'உனுவா லிப்ரோ' (Unua Libro)[4] எனும் நூலில் 'எஸ்பெராண்டோ' பற்றிய தகவல்கள் முதன்முதலாக வெளிவந்தன.

கற்றலுக்கு எளியதாக மொழி இருக்கவேண்டும் என்ற நோக்கத்தில் சாமன்ஹோஃப் இம்மொழியை எஸ்பெராண்டோ எனும் புனைவுப்பெயரில் தொடங்கியுள்ளார். இன்று உலகில் கிட்டத்தட்ட 1,000 மக்கள் இம்மொழியை தாய்மொழியாகப் பேசுகின்றனர். மதிப்பீட்டின் படி ஒரு இலட்சம் முதல், இரண்டு மில்லியன் மக்களால் இம்மொழியை சரளமாக பேசமுடியும். தற்போது 120 நாடுகளில் இம்மொழி பேசப்படுகின்றது.[5] ஐரோப்பா, கிழக்கு ஆசியா, தென் அமெரிக்கா ஆகிய நாடுகளில் இதன் பயன்பாடு மிகுந்து உள்ளது.[6] ஆனால் உலகில் எங்கேயும் எஸ்பெராண்டோ ஆட்சி மொழியாக இல்லை.

வரலாறு[தொகு]

1887 இல் டாக்டர் லுடோவிக் லாசரஸ் ஜாமன்ஹாப் (Ludovic Lazarus Zamenhof), எஸ்பராண்டோ என்ற ஒரு புது மொழியை உருவாக்கினார். இம்மொழிக்கான இலக்கணம் அதே ஆண்டில் 'மருத்துவர் எஸ்பராண்டோ' என்ற புனைப் பெயரில் அவரால் வெளியிடப்பட்டது. இவ்வார்த்தைக்கு 'நம்பும் மருத்துவர்' என்று பொருள். நாடுகளுக்கிடையே மொழித் தடைகளை போக்கி உலகப் பொது மொழியாக இது உருவாக வேண்டுமென அவர் விரும்பினார். தொடக்கத்திலேயே பல நாடுகள் கடுமையாக இதை எதிர்த்தன. உருசியாவில் தீவிர எதிர்ப்பு இருந்தது. 1954ஆம் ஆண்டு வரை இம்மொழிக்கு அங்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.

எசுபெராண்டோ மொழிக்கான முதல் உலக மாநாடு பிரான்சில் 1905இல் நடைபெற்றது. அது முதல் இந்த மாநாடு, உலகப்போர் நடந்த ஆண்டுகள் விலக்கலாக, ஒவ்வொரு ஆண்டும் பல நாடுகளில் நடத்தப்பட்டு வருகின்றது. எந்த நாடும் இதனை அலுவலக முறையாக ஏற்காதபோதும் பிரான்சிய அறிவியல் அகாதமி 1921இல் பரிந்துரைத்துள்ளது. 1954ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம் ஏற்றுக் கொண்டுள்ளது. 1985இல் பன்னாட்டு அரசு சார்பற்ற அமைப்புக்கள் எசுபெராண்டோவை பயன்படுத்த பரிந்துரைத்துள்ளது. 'ஐக்கிய நாடுகள் உலக சுற்றுலா அமைப்பு' (UNWTO) 1980 மணிலா அறிக்கையில் சுற்றுலாத்துறை எசுபெராண்டோவை பயன்படுத்த கோரியது. 2007இல் 'மொழிகளுக்கான பொது ஐரோப்பிய ஆயக் கட்டமைப்பின்' 32வது மொழியாக ஏற்கப்பட்டுள்ளது.[7]

சான் மரினோவிலுள்ள (San Marino) 'பன்னாட்டு அறிவியல் அகாதமியில்' தற்போது பயிற்று மொழியாக எசுபெராண்டோ விளங்குகின்றது. எசுபெராண்டோவை கற்பதனால் மொழிகளை கற்க அடிப்படை பொதுவாக மேம்படுவதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. சில துவக்கப்பள்ளிகளில் அயல்நாட்டு மொழிகளை கற்பிக்க ஆயத்த ஏற்பாடாக எசுபெராண்டோ கற்பிக்கப்படுகின்றது.[8]

இணையத்தில் எசுபெராண்டோ குறிப்பிடத்தக்க அளவில் பயன்படுத்தப்படுகின்றது. எசுபெராண்டோ கற்பிக்கும் மிகவும் பிரபலமான வலைத்தளமான லெர்னு! (lernu!) 2013இல் 150,000 பதிகை செய்த பயனர்களைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு மாதமும் ஏறத்தாழ 150,000 முதல் 200,000 வரையிலான பார்வையாளர்களைப் பெற்றுள்ளது.[9] எசுபிராண்டோ விக்கிப்பீடியாவில் ஏறத்தாழ 3,44,000 கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன. கட்டுரைகளின் எண்ணிக்கைப்படி இம்மொழி 32வது இடத்தில் உள்ளது.[10] செயற்கையாக கட்டமைக்கப்பட்ட மொழியொன்றில் மிக அதிக அளவில் விக்கிப்பீடியாவில் விரவியுள்ள மொழியாகவும் விளங்குகின்றது.[11] 2012ஆம் ஆண்டு பெப்ரவரி 22ல் கூகுள் மொழிபெயர்ப்பு எசுபெராண்டோவை தனது 64வது மொழியாக ஏற்றுக்கொண்டுள்ளது.[12] 2014ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் டுவோலிங்கோ பங்களிப்பாளர்கள் எசுபெராண்டோ மொழியைக் கற்பதற்கான ஓர் பாடதிட்டத்தை உருவாக்கத் துவங்கியுள்ளனர். டுவோலிங்கோவில் கட்டமைக்கப்பட்ட மொழியொன்றுக்கு பாடத்திட்டம் உருவாக்கப்படுவது இதுவே முதல்முறையாகும். இந்த பாடத்திட்டம் 2015ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் பயன்பாட்டுக்கு விடப்பட்டுள்ளது.[13]

தற்போது, எசுபெராண்டோ பயனாளர்கள் பலரும் இதனை உலகில் வளர்ந்து வரும் ஆங்கிலப் பயன்பாட்டிற்கு மாற்றாகவோ கூடுதலாகவோ கருதுகின்றனர். ஆங்கிலத்தை விட எளிய மொழியாகவும் இதனைக் கருதுகின்றனர்.[14] பாலோ கொய்லோ எழுதிய"ரசவாதி (the alchemist) நாவலிலும் இம்மொழி பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது (ரசவாதி-பாலோ கொய்லோ- மஞ்சுள் பப்ளிஷிங் ஹவுஸ்-This edition first published in 2018)

அகரவரிசை[தொகு]

எழுத்து உச்சரிப்பு
a
b bee என்ற ஆங்கில வார்த்தையில் உள்ளது போன்று (குறியார்வம் அற்றது)
c த்ஸ்
ĉ ச்
d Denmark என்ற ஆங்கில வார்த்தையில் உள்ளது போன்று
e
f fine என்ற ஆங்கில வார்த்தையில் உள்ளது போன்று
g ago என்ற ஆங்கில வார்த்தையில் உள்ளது போன்று
ĝ ஜ்
h ஹ்
ĥ j எசுபானிய மொழியில் உள்ளது போன்று
i
j ய்
ĵ measure என்ற ஆங்கில வார்த்தையில் உள்ளது போன்று
k க்
l ல்
m ம்
n ந்
o
p ப்
r ர்
s ஸ்
ŝ she என்ற ஆங்கில வார்த்தையில் உள்ளது போன்று
t த்
u
ŭ auto என்ற ஆங்கில வார்த்தையில் உள்ளது போன்று
v வ்
z zero என்ற ஆங்கில வார்த்தையில் உள்ளது போன்று

சொற்தொகுதி[தொகு]

இம்மொழிக்கான சொற்தொகுதி சில நூற்றுக்கணக்கான வேர்ச்சொற்களைக் கொண்டது. இவற்றைக் கொண்டு பல்லாயிரக்கணக்கான சொற்களை உருவாக்கிவிடலாம். எனினும், இதன் பெரும்பாலான சொற்களும் அவற்றின் வேர்ச்சொற்களும் ஐரோப்பிய மொழிகளைச் சார்ந்தவை.

கல்வி[தொகு]

இம்மொழியினைக் கற்கும் பெரும்பான்மையினர் இணைய வழியாகவும், உதவிப் புத்தகங்களின் வழியாகவும் கற்றுவருகின்றனர். இம்மொழி சில நாடுகளில் பள்ளிகளிலும் கற்பிக்கப்பட்டு வருகிறது. இம்மொழி, பல ஐரோப்பிய மொழிகளைக் காட்டிலும் கற்பதற்கு எளிதானதாக உள்ளது எனக் கூறப்படுகிறது.

பிரெஞ்சு மாணவர்கள் வேற்று மொழிப் பாடங்களைக் கற்க எடுத்துக் கொண்ட நேரத்தைக் கணக்கிட்டு இம்முடிவு உறுதிப்படுத்தப்பட்டது.

பிரெஞ்சு மாணவர்கள் வேற்று மொழிப் பாடங்களைக் கற்க எடுத்துக் கொண்ட நேரப் பட்டியல்:[சான்று தேவை]

  1. இடாய்ச்சு மொழி கற்க 2000 மணி நேரம்.
  2. ஆங்கில மொழி கற்க 1500 மணி நேரம்.
  3. இத்தாலிய மொழி கற்க 1000 மணி நேரம்.
  4. எசுப்பெராண்டோ மொழி கற்க 150 மணி நேரம்.
This article includes inline links to audio files. If you have trouble playing the files, see Wikipedia Media help.

எளிய சொற்றொடர்கள்[தொகு]

பன்னாட்டு ஒலிப்பியல் அரிச்சுவடியின்படி ஒலிக்குறிப்புகளுடன், சில பயனுள்ள எஸ்பராண்டோ சொற்கள் மற்றும் சொற்றொடர்கள் பட்டியலிடப்பட்டுள்ளன:

தமிழ் எஸ்பராண்டோ பன்னாட்டு ஒலிப்பியல் அரிச்சுவடி ஒலிக்குறிப்பு
வணக்கம் / வாழ்த்து About this soundSaluton [sa.ˈlu.ton]
ஆமாம் / சரி About this soundJes [ˈjes]
இல்லை / கிடையாது About this soundNe [ˈne]
காலை வணக்கம் About this soundBonan matenon [ˈbo.nan ma.ˈte.non]
மாலை வணக்கம் About this soundBonan vesperon [ˈbo.nan ves.ˈpe.ron]
இனிய இரவு வணக்கம் About this soundBonan nokton [ˈbo.nan ˈnok.ton]
சென்றுவருகிறேன் About this soundĜis (la) revido [ˈdʒis (la) re.ˈvi.do]
உங்கள் பெயர் என்ன? About this soundKio estas via nomo? [ˈki.o ˌes.tas ˌvi.a ˈno.mo]
என் பெயர் மார்கோ (Marco). About this soundMia nomo estas Marko [ˌmi.a ˈno.mo ˌes.tas ˈmar.ko]
எப்படி இருக்கிறீர்கள்? About this soundKiel vi fartas? [ˈki.el vi ˈfar.tas]
நான் நலமாக இருக்கிறேன். About this soundMi fartas bone [mi ˈfar.tas ˈbo.ne]
நீங்கள் எஸ்பெராண்டோவில் பேசுகிறீர்களா? About this soundĈu vi parolas Esperante? [ˈtʃu vi pa.ˈro.las ˌes.pe.ˈran.te]
நான் உன்னை புரிந்து கொள்ள முடியவில்லை. About this soundMi ne komprenas vin [mi ˌne kom.ˈpre.nas ˌvin]
எல்லாம் சரி. About this soundBone [ˈbo.ne]
சரி. About this soundBone [ˈbo.ne]
உங்களுக்கு நன்றி. About this soundDankon [ˈdan.kon]
நீங்கள் வரவேற்கப்படுகிறீர்கள். About this soundNe dankinde [ˌne.dan.ˈkin.de]
தயவு செய்து / தங்கள் விருப்பம் போல். About this soundBonvolu [bon.ˈvo.lu]
என்னை மன்னித்துவிடு / என்னை மன்னிக்கவும் About this soundPardonu min [par.ˈdo.nu ˈmin]
உங்களுக்கு ஆசீர்வாதங்கள்! About this soundSanon! [ˈsa.non]
வாழ்த்துக்கள் About this soundGratulon [ɡra.ˈtu.lon]
நான் உன்னை காதலிக்கிறேன் About this soundMi amas vin [mi ˈa.mas ˌvin]
தயவுசெய்து ஒரு பொங்கு தீர்த்தம் கொடுக்கவும் About this soundUnu bieron, mi petas [ˈu.nu bi.ˈe.ron, mi ˈpe.tas]
கழிப்பறை எங்கே உள்ளது? About this soundKie estas la necesejo? [ˈki.e ˈes.tas ˈla ˌne.tse.ˈse.jo]
அது என்ன? About this soundKio estas tio? [ˈki.o ˌes.tas ˈti.o]
அது ஒரு நாய் About this soundTio estas hundo [ˈti.o ˌes.tas ˈhun.do]
நாம் நேசிப்போம்! About this soundNi amos! [ni ˈa.mos]
அமைதி / சமாதானம் About this soundPacon! [ˈpa.tson]
நான் எஸ்பெராண்டோவில் தொடக்க நிலையில் இருக்கிறேன். About this soundMi estas komencanto de Esperanto [mi ˈes.tas ˌko.men.ˈtsan.to de ˌes.pe.ˈran.to]

எஸ்பராண்டோ சமுதாயம் [தொகு]

எஸ்பெராண்டோ சமூகத்தவர்களுக்கு விருந்தோம்பல் சேவை செய்வதற்கான புரவலர்கள் இருப்பிட வரைபடம். பாஸ்போரா செர்வோ (Paspora Servo) பண்பொத்த கட்டுமானவியல் இணைய உலவி - 2015

எஸ்பராண்டோ உலகில் மிகவும் பரவலாக பேசப்படும் மொழியாக உள்ளது.[15] ஐரோப்பா, கிழக்கு ஆசியா ஆகிய நாடுகளில் நகர் மற்றும் நகர் சார்ந்த பகுதிகளிலிலும், குறிப்பாக எஸ்பராண்டோவுக்காக சிறப்பு மன்றங்களும், சங்கங்களும், கூடலகங்களும், செயல்பாட்டில் உள்ள இடங்களிலும், இம்மொழி பேசுபவர்கள் மிக அதிக எண்ணிக்கையில் உள்ளனர்.[16]

எஸ்பராண்டோ பரவியுள்ள வடக்கு மற்றும் மத்திய ஐரோப்பிய நாடுகள்:

பெருவாணிபம் மற்றும் வியாபாரம்[தொகு]

எஸ்பராண்டோ வணிக குழுக்கள் பல ஆண்டுகளாக செயல்பாட்டில் உள்ளன. பிரஞ்சு பெருவாணிப கழகக் கூடம் 1920களில் மேற்கொண்ட ஆராய்ச்சிகளின் அடிப்படையில், 1921ஆம் ஆண்டு 'தி நியூயார்க் டைம்ஸ்' பத்திரிகையில் எஸ்பராண்டோ மொழி சிறந்த வணிக மொழி என்று ஒரு அறிவிப்பை வெளியிட்டது.[18]

இறைநம்பிக்கை[தொகு]

எஸ்பராண்டோ மக்களிடையே பல மதங்களும், இறைநம்பிக்கைகளும், வேத நெறிகளும் பரவி முக்கியப் பங்கேற்றுள்ளன. அவற்றுள், ஜப்பானைச் சார்ந்த ஓஹியோவின் ஓமோட்டோவும் (Oomoto), ஈரான் நாட்டின் பஹாய் (Bahá'í) நம்பிக்கையும் பலராலும் ஊக்கமளிக்கப்பட்டு வருகின்றன. இது போன்று சில ஆவிக்குரிய இயக்கங்களும் செயல்பட்டு வருகின்றன.

ஓமோட்டோ[தொகு]

ஓமோட்டோ மதம் அதனைப் பின்பற்றுபவர்களிடையே எஸ்பரான்டோ மொழிப் பயன்பாட்டை ஊக்குவிக்கிறது. மேலும் ஸமன்ஹாஃபை (Zamenhof) உன்னத தெய்வத்தன்மையுள்ள சக்திகளில் ஒன்றாக ஏற்றுக்கொள்கிறது.[19]

 பஹாய் நம்பிக்கை[தொகு]

பஹாய் நம்பிக்கை ஒரு துணை சர்வதேச மொழிப் பயன்பாட்டை ஊக்குவிக்கிறது. எஸ்பரான்டோ மொழி தன் செயல்பாட்டில் பெருமளவுத் திறன் பெற்றிருப்பினும், அது எதிர்காலத்தின் மொழியாக இருக்காது என்று பஹாய் நம்பிக்கையாளர்கள் கருதுகின்றனர். எனவே இம்மொழி மக்களால் தேர்ந்தெடுக்கப்படவில்லை.[20] எஸ்பரான்டோவின் சிறந்த கருத்தை அப்துல் பாஹா (Abdu'l-Bahá) பாராட்டினார். 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி முதல் 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதி வரை எஸ்பரான்டோ மொழியினருக்கும், பஹாய்களுக்கும் இடையில் நல்லுறவு இருந்தது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Ethnologue report for language code:epo
  2. Oxford University Press, "Oxford Dictionaries Online: 'Esperanto'" பரணிடப்பட்டது 2015-02-26 at the வந்தவழி இயந்திரம், Oxford Dictionaries Online, Retrieved 26 February 2015.
  3. Lua error in Module:Citation/CS1 at line 1529: attempt to call field 'has_accept_as_written' (a nil value).
  4. "Doktoro Esperanto, Ludwik Lejzer Zamenhof". Encyclopædia Britannica Inc. https://global.britannica.com/biography/L-L-Zamenhof. 
  5. "Universala Esperanto-Asocio: Kio estas UEA?". Uea.org. http://uea.org/info/en/kio_estas_uea. பார்த்த நாள்: 14 January 2015. 
  6. "User locations". http://www.pasportaservo.org/monda-mapo. பார்த்த நாள்: 6 January 2014. .
  7. "edukado.net → / Ekzamenoj / Referenckadro". Edukado.net. http://edukado.net/ekzamenoj/referenckadro. பார்த்த நாள்: 14 January 2015. 
  8. YouTube: Learn Esperanto first: Tim Morley at TEDxGranta
  9. "La programo de la Kleriga lundo en UK 2013". http://www.uea.org/kongresoj/2013/kleriga_lundo.html. பார்த்த நாள்: 6 January 2014. 
  10. "List of Wikipedias". Meta.wikimedia.org. http://meta.wikimedia.org/wiki/List_of_Wikipedias. பார்த்த நாள்: 14 January 2015. 
  11. "List of Wikipedias by language group". Meta.wikimedia.org. http://meta.wikimedia.org/wiki/List_of_Wikipedias_by_language_group#Indo-European-based_Constructed_.28340.2C659_.E2.80.93_1.3.25.29. பார்த்த நாள்: 14 January 2015. 
  12. Brants, Thorsten (February 22, 2012). "Tutmonda helplingvo por ĉiuj homoj". Google Translate Blog (Google). http://googletranslate.blogspot.com/2012/02/tutmonda-helplingvo-por-ciuj-homoj.html. பார்த்த நாள்: 14 August 2012. 
  13. incubator.duolingo.com/courses/eo/en/status
  14. Grin Report, page 81 "Thus Flochon (2000: 109) notes that 'the Institute of Cybernetic Education of Paderborn (Germany) has compared the learning times of several groups of French-speaking baccalauréat students to reach an equivalent "standard" level in four different languages: Esperanto, English, German and Italian. The results are as follows: to reach this level, 2000 hours of German study produce a linguistic level equivalent to 1500 hours of English study, 1000 hours of Italian study and ... 150 hours of Esperanto study.' No comment." Other estimates scattered in the literature confirm faster achievement in target language skills in Esperanto than in all the other languages with which the comparison has been made (Ministry of Education [Italy], 1995) as well as propaedeutic benefits of Esperanto (Corsetti and La Torre, 1995)."
  15. Byram, Michael (2001). Routledge Encyclopedia of Language Teaching and Learning. Routledge. பக். 464. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-415-33286-9. 
  16. Sikosek, Ziko M. Esperanto Sen Mitoj ("Esperanto without Myths"). Second edition. Antwerp: Flandra Esperanto-Ligo, 2003.
  17. "Afrika Agado" (in eo). Pagesperso-orange.fr. Archived from the original on 2009-01-09. https://web.archive.org/web/20090109212420/http://pagesperso-orange.fr/eric.coffinet/Afrika_Agado.html. பார்த்த நாள்: 2010-12-05. 
  18. "PARIS BUSINESS MEN WOULD USE ESPERANTO; Chamber of Commerce Committee Finds It Useful as a Code in International Trade.". The New York Times. 16 February 1921. https://query.nytimes.com/gst/abstract.html?res=F70817F8395810738DDDAF0994DA405B818EF1D3. பார்த்த நாள்: 22 October 2013. 
  19. "The Oomoto Esperanto portal". Oomoto.or.jp. http://www.oomoto.or.jp/Esperanto/index-es.html. பார்த்த நாள்: 2010-12-05. 
  20. "The Baha'i Faith and Esperanto". Bahaa Esperanto-Ligo ( B.E.L. ). http://www.bahai.de/bahaaeligo/angla/englisch.htm. பார்த்த நாள்: 2006-08-26. 

வெளி இணைப்புகள்[தொகு]

  1. எஸ்பராண்டோ (Esperanto a, b, c) பரணிடப்பட்டது 2010-07-03 at the வந்தவழி இயந்திரம்
  2. 'Ĉu vi scias pri esperanto?' : ஓர் மொழித்தேடல்! பரணிடப்பட்டது 2012-04-02 at the வந்தவழி இயந்திரம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=எஸ்பெராண்டோ&oldid=3792219" இருந்து மீள்விக்கப்பட்டது