எசுப்பராந்தோ தாய்மொழிப் பேச்சாளர்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பெற்றோர் பிற மொழிகளுடன் எசுப்பராந்தோ மொழியினையும் பேசினால் அவர்களின் குழந்தைகள் எசுப்பராந்தோவை முதன்மை மொழியாக, தாய்மொழியாகக் கொள்வர். எசுப்பராந்தோ மாநாடுகளில் பங்கேற்கும் நபர்கள் சந்தித்து மணம் முடித்தால், அவர்களின் பிள்ளைகள் இதனையே தாய்மொழியாகக் கொள்வர். எந்த ஒரு நிலப்பகுதியிலும் எசுப்பராந்தோ முதன்மை மொழியாக இருக்கவில்லை. எனினும், ஆங்காங்கே நிகழும் எசுப்பராந்தோ மொழி மாநாடுகளிலும், சங்க அமைப்புகளிலும் முதன்மை மொழியாகப் பாவிக்கப்படுகிறது. அதிகளவில் இம்மொழி பயன்பாட்டில் இல்லாததால் இம்மொழியின் பயன்பாட்டை அதிகரிக்க பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை இத்தகைய மொழி மாநாடுகளில் பங்கேற்கச் செய்வதுண்டு. எத்னோலாக் அறிக்கைப்படி 200 முதல் 2000 நபர்கள் வரை எசுப்பராந்தோவைத் தாய்மொழியாகக் கொண்டிருக்கின்றனர்.

ஜியார்ஜ் சோரோசு என்னும் வியாபாரி எசுப்பராந்தோ மொழி எழுத்தாளர் ஆவார். மருந்தியலில் நோபல் பரிசு பெற்ற தானியேல் போவெட், பீற்றர் கின்சு ஆகியோர் எசுப்பராந்தோ மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் ஆவர்