எலும்புப் பிணைப்பு
Appearance
எலும்புப் பிணைப்பு | |
---|---|
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள் | |
சிறப்பு | வாதவியல் |
ஐ.சி.டி.-10 | M24.6 |
ஐ.சி.டி.-9 | 718.5 |
நோய்களின் தரவுத்தளம் | 29910 |
ம.பா.த | D000844 |
எலும்புப் பிணைப்பு அல்லது மூட்டுப் பிடிப்பு (Ankylosis, anchylosis) என்பது காயம் அல்லது நோய் காரணமாக வழக்கத்திற்குமாறாக மூட்டு எலும்புகளில் ஏற்படும் உறுப்பு இணைவையும், விறைப்பையும் குறிக்கின்றது. இத்தகு விறைப்பு முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ இருக்கலாம். இவை மூட்டுகளிலுள்ள அல்லது மூட்டுகளுக்கு வெளியிலுள்ள தசை நாண்களிலோ அல்லது தசைக் கட்டமைப்புகளிலோ உள்ள திசுக்களின் அழற்சியின் காரணமாக ஏற்படலாம். சஹாரா பாலைவன எல்லைகளில் வாழும் ஊட்டச்சத்து போதாத குழந்தைகளில் பரவலாகக் காணப்படும் கடைவாய் அழுகல் நோய் (Noma disease) பேசுவதை, சாப்பிடுவதை பாதிக்கும் அளவிற்கு மேல்தாடை, கீழ்த்தாடை எலும்புகளில் எலும்புப் பிணைப்பினை ஏற்படுத்தவல்லது[1].