எம். ஏ. ஆண்டி அம்பலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எம். ஏ. ஆண்டி அம்பலம் (M. A. Andi Ambalam) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு சட்டமன்ற முன்னாள் உறுப்பினரும் ஆவார். இவர் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியினைச் சார்ந்தவர். மதுரையில் உள்ள யாதவர் கல்லூரியில் ஆண்டி அம்பலம் பல்கலைக்கழக முன்வகுப்பினை முடித்துள்ளார். இவர் 2016ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளாரகப் நத்தம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.[1] மீண்டும் 2021ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டபோது தோல்வியடைந்தார்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Andi Ambalam M.a(DMK):Constituency- NATHAM(DINDIGUL) - Affidavit Information of Candidate:". myneta.info. பார்க்கப்பட்ட நாள் 2022-03-29.
  2. "M.A.Andi Ambalam(DMK):Constituency- NATHAM(DINDIGUL) - Affidavit Information of Candidate:". myneta.info. பார்க்கப்பட்ட நாள் 2022-03-29.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்._ஏ._ஆண்டி_அம்பலம்&oldid=3408890" இலிருந்து மீள்விக்கப்பட்டது