உள்ளடக்கத்துக்குச் செல்

என்றி மோஸ்லி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
என்றி மோஸ்லி
1914-ஆம் ஆண்டில் மோஸ்லி
பிறப்புஎன்றி கிவென் ஜெஃப்ரீஸ் மோஸ்லி
(1887-11-23)23 நவம்பர் 1887
வேமவுத், டோரெஸ்ட், இங்கிலாந்து
இறப்பு10 ஆகத்து 1915(1915-08-10) (அகவை 27)
கலிபோலி, உதுமானியப் பேரரசு
களச்சாவு
துறைஇயற்பியல், வேதியியல்
கல்விசம்மர்ஃபீல்டு பள்ளி
ஏடன் கல்லூரி
கல்வி கற்ற இடங்கள்டிரினிட்டி கல்லூரி, ஆக்சுபோர்டு
மான்செஸ்டரின் விக்டோரியா பல்கலைக்கழகம்
அறியப்படுவதுஅணு எண், மோஸ்லி விதி
விருதுகள்மேட்டியூசி பதக்கம்(1919)

என்றி கிவென் ஜெஃப்ரீஸ் மோஸ்லி (Henry Moseley)(23 நவம்பர் 1887 - 10 ஆகத்து 1915) ஒரு ஆங்கிலேய இயற்பியலாளர் ஆவார். இவரது கண்டுபிடிப்பானது, அறிவியலின் பிரிவாகிய இயற்பியலின் முந்தைய செயல்முறை மற்றும் இயற்பிய விதிகளையும், வேதியியலில் கூறப்பட்டு வந்த கருத்தியலான அணு எண் போன்றவற்றையும் நியாயப்படுத்துவதாக இருந்தது. எக்சு கதிர் நிறமாலையியலின் அடிப்படையில் மோஸ்லி விதியை உருவாக்கியதன் விளைவாக எழுந்தது.

மோஸ்லியின் விதி அணு இயற்பியல், அணுக்கரு இயற்பியல் மற்றும் குவாண்டம் இயற்பியலை மேம்படுத்தியது. மேலும், நீல்ஸ் போரின் அணு மாதிரிக்கு ஆதரவாக முதல் சோதனை ஆதாரத்தை வழங்கியது. ஐதரசன் அணு நிறமாலையைத் தவிர, இதர அணுக்களின் நிறமாலைகளையும் உருவாக்க விளைந்த போர் அணு மாதிரியின் பணியை மோஸ்லியின் ஆய்வு செய்தது. இந்தக் கோட்பாடு எர்னஸ்ட் ரூதர்ஃபோர்ட் மற்றும் அன்டோனியஸ் வான் டென் ப்ரோக் அணு மாதிரியை செம்மைப்படுத்தியது. இக்கோட்பாட்டின்படி அணுவானது, அதன் அணுக்கருவில் பல நேர்மின்சுமை கொண்ட அணுக்கருத்துகள்களைக் கொண்டுள்ளது என்று முன்மொழிந்தது. இது தனிம வரிசை அட்டவணையில் அதன் (அணு) எண்ணுக்கு சமம். [1] [2] இது இன்றும் ஏற்றுக்கொள்ளப்பட்ட மாதிரியாக உள்ளது.

வாழ்க்கை வரலாறு

[தொகு]

என்றி ஜி. ஜே மோஸ்லி, அவரது நண்பர்களால் ஹாரி என்று அறியப்படுகிறார். 1887 ஆம் ஆண்டில் டோர்செட்டில் உள்ள வெய்மவுத்தில் பிறந்தார். மோஸ்லி மிகவும் இளமையாக இருந்தபோது இறந்த அவரது தந்தை என்றி நாட்டிட்ஜ் மோஸ்லி (1844-1891) ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் உடற்கூறியல் மற்றும் உடலியங்கியல் பேராசிரியராக இருந்தார். சேலஞ்சர் ஆய்வுப் பயணத்தில் உறுப்பினராக இருந்தார். மோஸ்லியின் தாய் அமாபெல் க்வின் ஜெஃப்ரிஸ் ஆவார், இவர் வெல்ஷ் உயிரியலாளரும் சிப்பியோட்டியலாளருமான ஜான் க்வின் ஜெஃப்ரிஸின் மகள் ஆவார். [3] இவர் 1913 ஆம் ஆண்டில் பிரித்தானிய பெண்கள் சதுரங்க வாகையாளராகவும் இருந்தார் [4] [5] [a]

மோஸ்லி சம்மர் ஃபீல்ட்ஸ் பள்ளியில் மிகவும் நம்பிக்கைக்குரிய பள்ளி மாணவராக இருந்தார். மேலும் அவருக்கு ஏடன் கல்லூரியில் சேர அரசரின் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது. [6] 1906 ஆம் ஆண்டு ஏட்டனில் வேதியியல் மற்றும் இயற்பியல் பரிசுகளை வென்றார். [7] 1906 ஆம் ஆண்டில், மோஸ்லி ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் டிரினிட்டி கல்லூரியில் நுழைந்தார், அங்கு அவர் இளங்கலைப் பட்டம் பெற்றார் . ஆக்ஸ்போர்டில் இளங்கலைப் பட்டதாரியாக இருந்தபோது, மோஸ்லி அப்பல்லோ பல்கலைக்கழக விடுதியில் சேர்ந்தார். 1910 ஆம் ஆண்டில் ஆக்ஸ்போர்டில் பட்டம் பெற்ற உடனேயே, சர் எர்னஸ்ட் ரூதர்ஃபோர்டின் மேற்பார்வையின் கீழ் மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் மோஸ்லி ஒரு செயல்முறை விளக்கமளிக்கும் பணியாளராக ஆனார். மான்செஸ்டரில் மோஸ்லியின் முதல் ஆண்டில், பட்டதாரி ஆசிரியர் உதவியாளராக இவருடைய கற்பித்தல் பணி இருந்தது, ஆனால் அந்த முதல் ஆண்டைத் தொடர்ந்து, பட்டதாரி ஆராய்ச்சி உதவியாளராக பணிபுரிய அவர் தனது கற்பித்தல் பணிகளில் இருந்து மாற்றப்பட்டார். ரூதர்ஃபோர்ட் வழங்கிய கல்வி உதவித்தொகையை அவர் நிராகரித்தார், நவம்பர் 1913 இல் மீண்டும் ஆக்ஸ்போர்டுக்கு செல்ல விரும்பினார், அங்கு அவருக்கு ஆய்வக வசதிகள் வழங்கப்பட்டன, ஆனால் ஆதரவு இல்லை. :95

அறிவியல் பணி

[தொகு]

1912 ஆம் ஆண்டில் பீட்டா துகள்களின் ஆற்றலைப் பரிசோதித்த மோஸ்லி, ரேடியத்தின் கதிரியக்க மூலத்திலிருந்து அதிக ஆற்றல்களை அடைய முடியும் என்பதைக் காட்டினார். அதன் மூலம் முதல் அணு மின்கலத்தைக் கண்டுபிடித்தார். இருப்பினும் துகள்களைத் தடுக்கத் தேவையான 1MeV ஐ அவரால் உருவாக்க முடியவில்லை. [8]

1913 ஆம் ஆண்டில், மோஸ்லே பல்வேறு வேதியியல் தனிமங்களின் (பெரும்பாலும் உலோகங்கள்) படிகங்களின் ஒளியின் விளிம்பு விளைவால் உருவான எக்சு-கதிர் நிறமாலைகளை உற்றுநோக்கவும், அளவிடவும் செய்தார்.[9] இது இயற்பியலில் எக்சு-கதிர் நிறமாலையியல் முறையின் முன்னோடி பயன்பாடாகும். எக்சு-கதிர் அலைநீளங்களைக் கண்டறிய பிராக்கின் சமன்பாடு பயன்படுத்தப்பட்டது. உற்பத்தி செய்யப்பட்ட எக்சு-கதிர்களின் அலைநீளங்களுக்கும், எக்சு-கதிர் குழாய்களில் இலக்குகளாகப் பயன்படுத்தப்படும் உலோகங்களின் அணு எண்களுக்கும் இடையே ஒரு முறையான கணித உறவை மோஸ்லி கண்டுபிடித்தார். இது மோஸ்லியின் விதி என்று அறியப்பட்டது.

குறிப்புகள்

[தொகு]
  1. After the death of her first husband, she married again, to William Johnson Sollas, a professor of நிலவியல் at Oxford University.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Rutherford, E. (1911). "The scattering of α and β particles by matter and the structure of the atom". Philosophical Magazine. 6th series 21 (125): 669–688. https://babel.hathitrust.org/cgi/pt?id=mdp.39015024088547;view=1up;seq=681. 
  2. Broek, A. van den (1913). "Die Radioelemente, das periodische System und die Konstitution der Atome" (in de). Physikalische Zeitschrift 14: 32–41. https://babel.hathitrust.org/cgi/pt?id=mdp.39015021268936;view=1up;seq=68. 
  3. "This Month in Physics History August 10, 1915: Henry G.J. Moseley Killed in Action". APS News (American Physical Society) 21 (8). 2012. http://www.aps.org/publications/apsnews/201208/physicshistory.cfm. பார்த்த நாள்: 31 December 2019. 
  4. "Amabel Sollas". British Chess Magazine 37-38: 357. 1917. https://books.google.com/books?id=5b5AAQAAMAAJ&q=Amabel+Sollas. 
  5. "Sollas, Amabel". EDO Historical Chess Ratings. பார்க்கப்பட்ட நாள் 31 December 2019.
  6. "The Work of H. G. J. Moseley". Isis 57 (3): 336–364. 1966. doi:10.1086/350143. பன்னாட்டுத் தர தொடர் எண்:0021-1753. - JSTOR article; permission required
  7. Public Schools Year Book 1906.
  8. Moseley, H. G. J. (1913). "The attainment of high potentials by the use of Radium". Proceedings of the Royal Society 88 (605): 471–476. doi:10.1098/rspa.1913.0045. Bibcode: 1913RSPSA..88..471M. http://rspa.royalsocietypublishing.org/content/88/605.toc. பார்த்த நாள்: 5 January 2013. 
  9. Moseley, H.G.J. (1913). "The high-frequency spectra of the elements". Philosophical Magazine. 6th series 26: 1024–1034. https://archive.org/stream/londonedinburg6261913lond#page/1024/mode/2up. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=என்றி_மோஸ்லி&oldid=4063205" இலிருந்து மீள்விக்கப்பட்டது