பிராக் சமன்பாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பிராக் சமன்பாடு, (Bragg's equation ) படிகயியலில், இரு படிகத் தளங்களுக்கு இடைப்பட்டத் தூரத்தை எக்சு, காமா கதிர்களின் துணையுடன் காண உதவும் ஒரு சமன்பாடாகும்.

இவ்விதி 1912 ஆம் ஆண்டு இயற்பியலாளர் வில்லியம் லாரன்சு பிராக்கால் கண்டறியப்பட்டு[1] அதே ஆண்டில் நவம்பர் 11 தேதியன்று கேம்பிரிட்ஜ் மெய்யியல் சமூகத்திடம் முன்வைக்கப்பட்டது.

சமன்பாடு[தொகு]

என்பதே பிராக் சமன்பாடாகும். இங்கு

  • d என்பது, படிகத்தில் இரு செறிவு கூடிய அடுக்குகளுக்கு இடைப்பட்ட தூரமாகும்.
  • θ என்பது படுகோணத்தினைக்[2] குறிக்கும்.
  • n என்பது ஒரு முழு எண்ணைக் குறிக்கும்
  • λ என்பது பயன்படுத்தப்படும் கதிரின் அலை நீளத்தினையும் குறிக்கும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. There are some sources, like the Academic American Encyclopedia, that attribute the discovery of the law to both W.L Bragg and his father W.H. Bragg, but the official Nobel Prize site and the biographies written about him ("Light Is a Messenger: The Life and Science of William Lawrence Bragg", Graeme K. Hunter, 2004 and “Great Solid State Physicists of the 20th Century", Julio Antonio Gonzalo, Carmen Aragó López) make a clear statement that William Lawrence Bragg alone derived the law.
  2. படுகோணம் என்பது படுகதிருக்கும் படிகத் தளத்திற்கும் இடைப்பட்ட கோணமாகும். சில சமயங்களில் பிராக் கோணம் என்றும் அழைக்கப்படுகிறது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிராக்_சமன்பாடு&oldid=2745719" இலிருந்து மீள்விக்கப்பட்டது