என்கார்ட்டா கலைக்களஞ்சியம்
என்க்கார்ட்டா 2008 முன்வரிசைப் பதிப்பு விண்டோஸ் விஸ்டாவில். Encarta 2008 Premium on Windows Vista | |
உருவாக்குனர் | மைக்ரோசாப்ட் |
---|---|
அண்மை வெளியீடு | என்க்கார்ட்டா முன்வரிசைப் பதிப்பு 2009 (Encarta Premium 2009) / ஆகஸ்டு, 2008 |
இயக்கு முறைமை | மைக்ரோசாப்ட் விண்டோஸ் |
மென்பொருள் வகைமை | இணையக் கலைக்களஞ்சியம் |
உரிமம் | Proprietary |
இணையத்தளம் | microsoft.com/encarta |
என்க்கார்ட்டா கலைக்களஞ்சியம் (Encarta) என்பது மைக்ரோசாப்ட் நிறுவனத்தார் விற்கும் பல்லூடக, எண்ணிம கலைக்களஞ்சியம். 2008 இன் "என்க்கார்ட்டா பிரீமியம்" (Encarta Premium) என்னும் சிறப்புமுழு ஆங்கிலப் பதிப்பில் 62,000 கட்டுரைகள் உள்ளன. [1] இதில் ஏராளமான ஒளிப்படங்கள், காலக்கோடுகள், நில, நீர் வரைபடங்கள், இசைப்பதிவுத் துண்டுகள், நிகழ்படத் துண்டுகள் உள்ளன. இக் கலைக்களஞ்சியம் ஆண்டுக்கட்டணங்களுடன் உலகளாவிய வலையிலும் (www), தனியாக விலைக்கு டிவிடி வட்டுகளிலும் (எண்ணிம பல்திற வட்டுகளிலும்), இறுவட்டுகளிலும் பெறலாம். பல கட்டுரைகளை இலவசமாகவும் இணையத்தில் படிக்கலாம். இவை விளம்பரங்கள் அனுமதிப்பதால், அதன் வழி ஈட்டும் வருமானத்தால் இலவசமாக வழங்கப்படுகின்றது[2].
மைக்ரோசாப்ட் நிறுவனம் என்க்கார்ட்டா (Encarta) என்னும் வணிக உரிமப்பெயருடன் இதைப்போன்ற கலைக்களஞ்சியங்களைப் பிற மொழிகளிலும் வழங்குகின்றது. இம்மொழிகளில் சில:டாய்ட்சு, பிரான்சிய மொழி, எசுப்பானிய மொழி, டச்சு மொழி, இத்தாலிய மொழி, போர்த்துகீசிய மொழி, நிப்பானிய மொழி.
குறிப்புகளும் மேற்கோள்களும்
[தொகு]- ↑ Encarta 2009 Information
- ↑ For the free service, one should use the URL http://search.msn.com/encarta/results.aspx பரணிடப்பட்டது 2005-08-11 at the வந்தவழி இயந்திரம் (MSN Search Encarta) rather than http://encarta.msn.com பரணிடப்பட்டது 2009-04-11 at the வந்தவழி இயந்திரம் (MSN Encarta : Online Encyclopedia, Dictionary, Atlas, and Homework)
வெளி இணைப்புகள்
[தொகு]- MSN Encarta Online பரணிடப்பட்டது 2009-04-11 at the வந்தவழி இயந்திரம் — with limited free access and features.
- Encarta products
- History and some other information about Encarta by Microsoft பரணிடப்பட்டது 2009-08-21 at the வந்தவழி இயந்திரம்