எட்வர்டு விட்டென்
எட்வர்டு விட்டன் (Edward Witten) (பிறப்பு:ஆகத்து 26, 1951) ஒரு அமெரிக்க கணிதவியலாளரும் கோட்பாட்டு இயற்பியலாளரும் ஆவார். இவர் பிரின்ஸ்டன், நியூ ஜெர்சியில் உள்ள இன்ஸ்டிட்யூட் ஆஃப் அட்வான்சுடு ஸ்டடீஸ் நிறுவனத்தில் இயற்கை அறிவியல் பள்ளியில் தகைமைப் பேராசிரியர் ஆவார்.[1] இவர் சரக் கோட்பாடு, குவாண்டம் ஈர்ப்பியல், மீச்சமச்சீர்மை குவாண்டம் புலக்கோட்பாடுகள் மற்றும் இதர கணிதவியல் இயற்பியல் பகுதிகளில் ஆய்வாளரும் ஆவார். மேலும், விட்டனின் பணிகள் தனியான கணிதத்திலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.[2] 1990 ஆம் ஆண்டில் இவர் பன்னாட்டு கணித ஒன்றியத்தால் பீல்ட்ஸ் பதக்கம் வழங்கப்பட்ட முதல் இயற்பியலாளரானார். 1981 ஆம் ஆண்டில் பொதுச் சார்புக் கோட்பாட்டில் நேர்மின் ஆற்றல் கோட்பாட்டின் நிரூபணம் குறித்த இவரது பணிக்காக இந்த விருது இவருக்கு வழங்கப்பட்டது.[3] இவர் எம்-கோட்பாட்டின் நடைமுறை நிறுவனராகவும் கருதப்படுகிறார்.[4]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Edward Witten". Institute for Advanced Study. Jul 14, 2022 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ (1990) "On the Work of Edward Witten". {{{booktitle}}}, 31–35. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). 2017-03-01 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2022-07-30 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Michael Atiyah. "On the Work of Edward Witten" (PDF). Mathunion.org. March 1, 2017 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. March 31, 2017 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Duff 1998, p. 65