பீல்ட்ஸ் பதக்கம்
ஃபீல்ட்ஸ் பதக்கம் (Fields Medal) நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை உலக அளவில் தேர்வுசெய்யப்பட்டு அளிக்கப்படும் ஓர் பரிசாகும். இப்பரிசு கணிதத்தின் நோபல் என கருதப்படுகிறது.[1] நாற்பது வயதுக்கு உட்பட்ட இரண்டு, மூன்று அல்லது நான்கு கணிதவியலாளர்களுக்கு அளிக்கப்படும் இவ்விருது கனேடியக் கணிதவியலாளரான ஜோன் சாள்ஸ் ஃபீல்ட்ஸ் என்பவரால் 1924 இல் முன்மொழியப்பட்டதாகும். கனடவிலுள்ள டொராண்டோ வில் 1924 இல் பன்னாட்டு கணித காங்கிரஸ் நடந்தது. அந்த காங்கிரஸின் தலைவராக இருந்தவர் ஃபீல்ட்ஸ். காங்கிரஸை நடத்துவதற்காக சேகரிக்கப்பட்ட பணத்தில் செலவு போக மீதமிருந்ததை கணிதத்தில் உலகம் போற்றும் சாதனை செய்தவருக்கு ஒரு பரிசு கொடுப்பதற்காக இருக்கட்டும் என்று நன்கொடையாகக் கொடுத்தார். அவர் காலமான பிறகு 1932 இல் ஜூரிக்கில் கூடினபோது பன்னாட்டுக்கணித காங்கிரஸ் அந்நன்கொடையை ஏற்றுக் கொண்டது.[2][3][4]
முதல் இரண்டு மெடல்கள் 1936 இல் ஆஸ்லோ காங்கிரஸிலும், அதற்குப்பிறகு உலகப்போரினால் தடைபட்டபிறகு, 1950 இலிருந்து ஒவ்வொரு நான்கு ஆண்டுகளுக்கொருமுறை பன்னாட்டு காங்கிரஸ் கூடினபோதெல்லாம் சில முறைகள் 2 மெடல்கள், சில முறை 3 மெடல்கள், சில முறை 4 மெடல்கள் வீதம் கொடுக்கப்பட்டு வருகின்றன. இதில் சிறப்பு என்னவென்றால் உலகக் கணிதவியலாளர்களெல்லாம் சேர்ந்து செயல்பட்டுக் கொடுக்கப்படும் பரிசு இது.
மெடல் வழங்கும்போது உடன் 15000 கனடா டாலர்கள் வழங்குவர். ஃபீல்ட்ஸ் மெடல் என்ற பெயரில் கொடுக்கப்பட்டு வந்தாலும் மெடலில் ஃபீல்ட்ஸ் என்ற பெயர் பொறிக்கப்படுவதில்லை.
ஃபீல்ட்ஸ் மெடல் பெற்றவர்களின் பட்டியல்
[தொகு]1936
- லார்ஸ் ஆல்ஃபோர்ஸ் (Lars Ahlfors) (ஃபின்லாந்து) -- ரீமான் தளங்கள்
- ஜெஸ்ஸெ டக்ளஸ் (Jesse Douglas)(அமெரிக்க ஐக்கிய நாடுகள்) -- ப்ளாட்டூ பிரச்சினை
1950
- ஆட்லெ ஸெல்பர்க் (Atle Selberg)(நார்வே) -- பகா எண் தேற்றம்
- லொராண் சுவார்ட்ஸ் (Laurent Schwartz) (பிரான்ஸ்) -- பரவல் கோட்பாடு
1954
- குனீகோ கொடெய்ரா (Kunihiko Kodaira) (ஜப்பான்) -- இசைத் தொகையீடுகளும் இயற்கணித வகைகளும்
- ஜீன் பியர் ஸேர் (Jean-Pierre Serre) (பிரான்ஸ்) -- Cohomology and Sheaf Theory
1958
- க்ளாஸ் ரோத் (Klaus Roth)(ஐக்கிய அரசு) -- பகுவியற் பகா எண் கோட்பாடு
- ரெனெ தாம் (Rene Thom) (பிரான்ஸ்) -- வகையீட்டு இடவியல்
1962
- லார்ஸ் ஹார்மாண்டர் (Lars Hormander)(சுவீடன்) -- நேரியல் பகுதி வகையீட்டுச்செயலிகள்
- ஜான் மில்னர் (John Milnor)(ஐக்கிய அமெரிக்க நாடுகள்) -- வகையீட்டு இடவியல்
1966
- மைக்கேல் அட்டீயா (Michael Atiyah) (ஐக்கிய அரசு) -- நீள்வட்டச் செயலிகள்
- பால் ஜே. கோஹென் (Paul J. Cohen) (ஐக்கிய அமெரிக்க நாடுகள்) -- கணிதத்தின் அடித்தளங்கள்
- அலெக்ஸாண்டர் க்ரோதெண்டிக் (Alxander Grothendieck) (பிரான்ஸ்) -- இயற்கணித வடிவவியல்
- ஸ்டீஃபன் ஸ்மேல் (Stephen Smale) (ஐக்கிய அமெரிக்க நாடுகள்) -- இயக்கவியல் திட்டங்கள்
1970
- ஆலென் பேக்கர் (Alan Baker) (ஐக்கிய அரசு) -- பகுவியற் பகா எண் கோட்பாடு - விஞ்சிய எண்கள்
- ஹ்யுஸூகெ ஹிரொனாக்கா (Heisuke Hironaka)(ஜப்பான்) -- இயற்கணித வடிவவியல் - விழுப்புள்ளிகளின் தீர்வு
- ஸெர்கேய் நோவிகோவ் (Sergei Novikov) (சோவியட் சோஷலிஸ்ட் குடியரசுகளின் ஐக்கியம்) -- பாண்ட்ரியாகின் வகைகளின் இடவியல் மாறாமை
- ஜான் ஜி. தாம்ஸன் (John G. Thompson) (ஐக்கிய அமெரிக்க நாடுகள்) -- முடிவுறு எளிய குலங்கள்
1974
- என்ரிக்கோ பாம்பியெரி (Enrico Bombieri) (இத்தாலி) -- எண் கோட்பாடும் இயற்கணித வடிவவியலும்
- டேவிட் மம்ஃபோர்ட் (David Mumford) (ஐக்கிய அமெரிக்க நாடுகள்) --இயற்கணித வடிவவியல்
1978
- பியர் டெலீன் (Pierre Deligne) (பெல்ஜியம்) -- ரீமான் கருதுகோளைப்பற்றிய வைல் யூகம்
- சார்ல்ஸ் ஃபெஃப்பர்மன் (Charles Fefferman) (ஐக்கிய அமெரிக்க நாடுகள்) --பற்பரிமாண சிக்கலெண் பகுவியல்
- க்ரிகோரி அலெக்ஸாண்ட்ரோவிச் மார்குலிஸ் (Gregori Alexandrovitch Margulis) (சோவியட் சோஷலிஸ்ட் குடியரசுகளின் ஐக்கியம்)-- லீ குலங்களின் அமைப்பு
- டேனியல் க்வில்லன் (Daniel Quillen) (அமெரிக்க ஐக்கிய நாடுகள்) --இயற்கணித K-கோட்பாட்டில் ஸேர் யூகம்
1982
- ஆலன் கோன்ஸ் (Alan Connes) (பிரான்ஸ்) -- செயலிகளின் இயற்கணிதங்களும் பயன்பாடுகளும்.
- வில்லியம் பி. தர்ஸ்ட்டன் (William P. Thurston) (ஐக்கிய அமெரிக்க நாடுகள்) -- சிறு பரிமாண பன்மடிகள்
- ஷிங் டுங் யௌ (Shing-Tung Yau) (சீனா/ஐக்கிய அமெரிக்க நாடுகள்) --வகையீட்டு வடிவவியலும் பகுதி வகையீட்டு சமன்பாடுகளும்.
1986
- ஸைமன் டொனால்ட்ஸன் (Simon Donaldson) (ஐக்கிய அரசு) -- அற்புத 4-பரிமாண பன்மடிகள்
- கெர்ட் ஃபால்ட்டிங்ஸ் (Gerd Faltings) (மேற்கு ஜெர்மனி) -- எண் கணித இயற்கணித வடிவவியலில் மார்டெல் யூகம்
- மைக்கேல் ஃப்ரீட்மன் (Michael Friedman ) (அமெரிக்க ஐக்கிய நாடுகள்) -- 4-பரிமாண புவான்காரே யூகம்
1990
- வ்ளாடிமீர் டிரின்ஃபெல்ட் (Vladimir Drinfeld) (சோவியட் சோஷலிஸ்ட் குடியரசுகளின் ஐக்கியம்)
- ஃப்ரெடெரிக் ராண்டல் ஜோன்ஸ் (Frederick Randal Jones) (நியூ ஜீலந்து)
- ஷிகுஃபுமி மோரி (Shigufumi Mori) (ஜப்பான்)
- எட்வர்ட் விட்டென் (Edward Witten) (ஐக்கிய அமெரிக்க நாடுகள்)
1994
- ஈ. ஐ. ஜெல்மனோவ் (E. I. Zelmanov) (ரஷ்யா)
- பியர் லூயி லியோன்ஸ் (Pierre Louis Lions) (பிரான்ஸ்)
- ஜீன் போர்கெய்ன் (Jean Bourgain) (பெல்ஜியம்)
- ஜீன் கிரிஸ்டோப்ஃபெ யாக்கோஸ் (Jean Christoffe Yoccoz) (பிரான்ஸ்)
1998
- ரிச்சர்ட் எவென் போர்செர்ட்ஸ் (Richard Ewen Borcherds) (ஐக்கிய அரசு)
- வில்லியம் டிமொதி கவர்ஸ் (William timothy Gowers) (ஐக்கிய அரசு)
- மாக்சிம் கோண்ட்ஸெவிச் (Maxim Kontsevitch) (ரஷ்யா)
- கர்டிஸ் டி. மக்முல்லென் ICurtis T. Mcmullen) (ஐக்கிய அமெரிக்க நாடுகள்)
2002
- லொராண் லஃபோர்கே (Laurent Lafforgue) (பிரான்ஸ்)
- வ்ளடிமீர் வெவோட்ஸ்க்ய் (Vladimir Voevodsky) (ரஷ்யா)
2006
- ஆண்ட்ரீ ஒகோன்கோவ் (Andrei Okounkov) (ரஷ்யா)
- கிரிகோரி பெரல்மான் (Grigori Pereleman) (ரஷ்யா) (பரிசை மறுத்துவிட்டார்)
- டெரென்ஸ் டஓ (Terence Tao) (ஆஸ்த்ரேலியா)
- வெண்டெலின் வெர்னர் (Wendelin Werner) (பிரான்ஸ்)
2016
- அக்ஷய் வெங்கடேஷ்
- பீட்டர் ஷோல்ஸ்
- கவ்ஷர் பிர்கார்
- அலசியோ பிகாலி
மேற்கோள்கள்
[தொகு]- ↑ இரா. சிவராமன் (7 ஆகத்து 2018). "நோபலுக்கு இணையான கணிதப் பரிசு". கட்டுரை. இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 8 ஆகத்து 2018.
- ↑ "About Us: The Fields Medal". The Fields Institute, University of Toronto. Archived from the original on 1 April 2022. பார்க்கப்பட்ட நாள் 21 August 2010.
- ↑ Ball, Philip (2014). "Iranian is first woman to nab highest prize in maths" (in en). Nature. doi:10.1038/nature.2014.15686. https://www.nature.com/news/iranian-is-first-woman-to-nab-highest-prize-in-maths-1.15686. பார்த்த நாள்: 29 March 2018.
- ↑ "Fields Medal". www-history.mcs.st-andrews.ac.uk. Archived from the original on 26 May 2021. பார்க்கப்பட்ட நாள் 29 March 2018.