பன்னாட்டு கணித ஒன்றியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பன்னாட்டு கணித ஒன்றியம் (International Mathematical Union) பன்னாட்டளவில் கணிதத்தை மேம்படுத்த ஏற்படுத்தப்பட்ட அரசுசாரா அமைப்பாகும். பெர்லினைத் தலைமையகமாகக் கொண்ட இதன் தற்போதைய தலைவர் ஷிகெஃபுமி மொரி. இவ்வமைப்பு பல நாடுகளில் உறுப்பினர்களைக் கொண்டுள்ளது[1]. இதற்கான நிதி பல்வேறு அமைப்புகளின் கொடைகள் மூலமும் திரட்டப்படுகிறது. இதனோடு பன்னாட்டு அறிவியல் ஒன்றியமும் இணைந்து செயலாற்றுகிறது. பல நாடுகளின் தேசிய கணித கழகம் பன்னாட்டு கணித ஒன்றியத்துடன் ணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சர்வதேச அளவில் கணித வளர்ச்சி மேம்படுத்தப்படுகிறது. சிறப்பாக செயலாற்றுபவர்களுக்கு சர்வதேச அளவில் பரிசும் வழங்கப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "உறுப்பினர்கள்". பார்த்த நாள் 22 நவம்பர் 2015.