எடச்சேன குங்கன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எடச்சேன குங்கன் (Edachena Kunkan) (எடச்சென குங்கன் நாயர் என்றும் அழைக்கப்படுகிறார்) இந்தியாவின் கேரளாவிலுள்ள வயநாட்டின் திருநெல்லியைச் சேர்ந்த வயநாட்டு நாயர் பிரபு ஆவார். 1770 களில் பழசி ராஜாவின் போர் முயற்சியில் இணைந்து ராஜாவின் படைத் தளபதியானார். இவரது இளைய சகோதரர்கள் (எடச்சேன கோமப்பன் நாயர், எடச்சேன ஒத்தேனன் நாயர் மற்றும் எடச்சேன அம்மு) இவருடன் தளபதிகளாக இணைந்தனர். குங்கன் வயநாட்டில் ஒரு பிரபலமான தலைவராக இருந்தார். கிழக்கிந்திய நிறுவனத்திற்கு எதிரான ராஜாவின் போருக்கு பல தரப்பு மக்களிடம் இருந்து ஆதரவு திரட்டினார்.

தளபதி[தொகு]

குங்கனின் தலைமையில், பழசியின் படைகள் ஐதர் அலி மற்றும் திப்பு சுல்தானுக்கு எதிராக மைசூர் எல்லை வரை சென்று போரிட்டன. இது ராஜாவின் செல்வாக்கு மண்டலத்தை விரிவுபடுத்தியது. மேலும் ராஜா நஞ்சன்கூடு வரையிலான பிரதேசங்களை உரிமை கொண்டாடினார்.

ஐதரின் தலச்சேரி முற்றுகையின் போது, சிரக்கல் மற்றும் கடத்தநாடு [1779-1782] உதவியோடு, ராஜா குங்கன் தலைமையில் 1,000 துருப்புக்களை அனுப்பினார் (குங்கன் மைசூர் இராணுவத்தின் அனைத்து தாக்குதல்களையும் முறியடித்தார்). முற்றுகை பின்னர் 1782 இல் பிரிட்டிஷ்-பழசி கூட்டுத் தாக்குதலால் உடைக்கப்பட்டது.

பனமரம் கோட்டை பிடிப்பு[தொகு]

ஆங்கிலேயர்கள் விவசாயிகள் மீதான வரிகளை அதிகப்படுத்தினர். வயநாடு மக்கள் பயிரிட்ட பாதி நெற்பயிரைக் கோரினர். ஆங்கிலேய அதிகாரி ஒருவர் நெல் வயலைக் கேட்டபோது, குங்கன் அவரைக் கொன்றார். மேலும் தலக்கால் சந்துவின் கீழ் 150 குறிச்சியன்கள் இவருடன் இணைந்தனர். இந்த படைகள் மற்றும் இவரது சகோதரர்களின் ஆதரவுடன், குங்கன் பனமரம் கோட்டையைத் தாக்கினார். ஆங்கிலேயத் தளபதி டிக்கன்சன் மற்றும் லெப்டினன்ட் மேக்ஸ்வெல் ஆகியோரின் கீழ் 4வது பம்பாய் காலாட்படையின் 1வது பட்டாலியனில் இருந்து 70 வீரர்களால் இது பாதுகாக்கப்பட்டு வந்தது. 1802 ஆம் ஆண்டு அக்டோபர் 11 ஆம் தேதி தளபதிகள் மற்றும் 25 வீரர்கள் கொல்லப்பட்டனர் [1] பிறகு, குங்கன் ₹6,000 மதிப்புள்ள 112 கஸ்தூரிகளையும் ஆறு பெட்டி வெடிமருந்துகளையும் எடுத்து சென்றார். கட்டிடங்கள் இடிக்கப்பட்டன. ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிராக வயநாட்டில் பரவலான கிளர்ச்சி தூண்டப்பட்டது.

கரந்தடிப் போர்முறை[தொகு]

சிறிது காலத்திற்குப் பிறகு, குங்கன் புல்பல்லி பகோடாவுக்குச் சென்று, கிளர்ச்சியாளர்களின் அணியில் சேருமாறு அனைத்து வயநாட்டைச் சேர்ந்தவர்களுக்கும் வேண்டுகோள் விடுத்தார்; மூவாயிரம் பேர் முன்வந்தனர். அன்றிலிருந்து 1804 ஆம் ஆண்டின் முற்பகுதி வரை, பழசி கிளர்ச்சியாளர்கள் வட மலபார் முழுவதும் ஆங்கிலேயர் நிலைகள் மீது கரந்தடிப் போர் முறையில் தாக்குதல்களை நடத்தி, கண்ணூர், தலச்சேரி மற்றும் கோழிக்கோடு கடற்கரை நகரங்களை கைப்பற்றினர். குங்கன் இரண்டு முறை ஆங்கிலேயர்களை எதிர்கொண்டார்: 1802 இல் வயநாட்டில், மானந்தவாடிக்கு செல்லும் வழியில் பிரிட்டிஷ் படைகளைத் தடுக்க முயன்றார். 1803 இல் பழசியில் ஒரு புறக்காவல் நிலையத்தை முற்றுகையிட முயன்றார். இரண்டும் தோல்வியடைந்தது, இது இவரை கரந்தடிப் போரில் கவனம் செலுத்த வழிவகுத்தது. குங்கனைக் கைது செய்பவர்களுக்கு 1,000 பகோடாக்கள் பரிசு வழங்குவதாக ஆங்கிலேயர்கள் அறிவித்தனர். நவம்பர் 1805 வாக்கில், எடவகாவில் உள்ள பன்னியில் (இப்போது பன்னிச்சல்) என்ற இடத்தில் பிரிட்டிஷ் துருப்புக்களால் கொல்லப்பட்டார். [1]

நினைவகம்[தொகு]

தென்னிந்தியாவில் ஆங்கிலேயர்களுக்கு எதிரான மிக முக்கியமான கிளர்ச்சிகளில் ஒன்றாக பழசி கிளர்ச்சி கருதப்படுவதால், குங்கன் மற்றும் தலக்கால் சாந்து ஆகியோருக்கு பனமரத்தில் நினைவிடம் கட்ட கேரள மக்கள் அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். [1]

பிரபல கலாச்சாரத்தில்[தொகு]

2009 ஆம் ஆண்டு அரிகரன் இயக்கிய பழசி ராஜா திரைப்படத்தில்[2] மம்மூட்டி பழசி ராஜாவாக நடித்தார்.[3] எடச்சேன குங்கனாக சரத்குமார் நடித்திருந்தார்.[4]

இதனையும் காண்க[தொகு]

  1. 1.0 1.1 1.2 . 15 November 2008.  பிழை காட்டு: Invalid <ref> tag; name "memorial" defined multiple times with different content
  2. "Pazhassi Raja". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 2021-06-02.
  3. "Samyuktha Varma ഇനി സിനിമയിലേക്ക് തിരിച്ച് വരുമോ ? | First Interview After 17 Years | Part 01". YouTube.
  4. "Sarath Kumar speaks Malayalam". IndiaGlitz. Archived from the original on 18 February 2008. பார்க்கப்பட்ட நாள் 17 February 2008.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எடச்சேன_குங்கன்&oldid=3817471" இலிருந்து மீள்விக்கப்பட்டது