எக்ஸோடஸ்: கோட்ஸ் அண்ட் கிங்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
எக்ஸோடஸ்: கோட்ஸ் அண்ட் கிங்ஸ்
Exodus: Gods and Kings
சுவரொட்டி
இயக்கம்ரிட்லி ஸ்காட்
இசைஆல்பர்டோ இக்லெஸியாஸ்
நடிப்புகிரிஸ்டியன் பேல்
ஜோல் எட்கர்டன்
ஜான் டர்டர்ரோ
ஆரோன் பவுல்
பென் மெண்டெல்சன்
சிகர்னி வேவர்
பென் கிங்ஸ்லி
விநியோகம்20ஆம் சென்சுரி பாக்ஸ்
வெளியீடுதிசம்பர் 12, 2014 (2014-12-12)(அமெரிக்க ஐக்கிய நாடு)
நாடுஅமெரிக்க ஐக்கிய நாடு
ஐக்கிய இராச்சியம்
ஸ்பெயின்
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$140 மில்லியன்
மொத்த வருவாய்$32.6 மில்லியன் [1]

எக்ஸோடஸ்: காட்ஸ் அண்ட் கிங்ஸ் (ஆங்கில மொழி: Exodus: Gods and Kings) இது 2014ஆம் ஆண்டு திரைக்கு வந்த திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்தை ரிட்லி ஸ்காட் இயக்க, கிரிஸ்டியன் பேல், ஜோல் எட்கர்டன், ஜான் டர்டர்ரோ, ஆரோன் பவுல், பென் மெண்டெல்சன், சிகர்னி வேவர், பென் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். கிறிஸ்தவர்களின் வேதநூலாகிய பைபிளின் பழைய ஏற்பாடு நூலில் ‘யாத்திராகமம்’ என்ற பகுதியில் இடம்பெற்ற புரட்சியாளன் மோசேயின் வாழ்க்கைக் கதையை படமாக எடுத்திருக்கிறார் இயக்குனர் ரிட்லி ஸ்காட்.

இந்த திரைப்படம் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு பாக்ஸ் ஸ்டார் இந்தியா என்ற நிறுவனத்தின் மூலம் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.[2]

கதைச்சுருக்கம்[தொகு]

தனது குடும்பத்தை பிரிந்து, அடிமைப்பட்டு கிடக்கும் தன் நாட்டு மக்களை மீட்க எகிப்து நோக்கி பயணப்படுகிறார் மோசே. இறுதியில், அந்த மக்களை மோசே மீட்டு வந்தாரா? அவர்களை மீட்க கடவுள் மோசேவுக்கு எவ்வாறு உதவினார்? என்பதே மீதிக்கதை.

நடிகர்கள்[தொகு]

நடிகர்களின் பங்களிப்பு[தொகு]

  • கிரிஸ்டியன் பேல், மோசே கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். வெவ்வெறு காலகட்டங்களில் இவரது நடிப்பும், தோற்றமும் நம்மை ஆச்சர்யத்தில் ஆழ்த்துகிறது.
  • ராம்சீஸ் மன்னராக நடித்திருக்கும் ஜோல் எட்கர்டன் மொட்டைத் தலையுடன் வில்லத்தனம் காட்டியிருக்கிறார்.

திரைப்படத்தின் பிரமாண்டம்[தொகு]

  • 1300 வருடங்களுக்கு முந்தைய காலகட்டத்திற்கு தகுந்தாற்போல் அத்தனையையும் அழகாக தேர்வு செய்திருக்கிறார் இயக்குனர் ரிட்லி ஸ்காட்.
  • அந்த காலத்தில் ராஜாக்கள், தளபதிகள், போர்வீரர்கள் அணிந்திருந்த ஆடை, அணிகலன்களைப் போலவே வடிவமைத்து பிரமிப்பு ஏற்படுத்தியிருக்கிறார்.
  • அதேபோல், போர்க் காட்சிகளும் மிகப்பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டிருக்கிறது. கடைசி அரை மணி நேரக் காட்சிகள் பிரம்மாண்டத்தின் உச்சக்கட்டம். புயல் போல் வரும் வெட்டுக்கிளிகள் தானிய வயல்களை அழிப்பது, முதலைகள் நைல் நதியை நாசமாக்குவது, தவளைகள் ஊருக்குள் புகுவது, செங்கடல் இரண்டாகப் பிரிந்து வழிவிடுவது ஆகிய காட்சிகள் அனைத்தும் பிரமிப்பில் ஆழ்த்துகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Exodus: Gods and Kings (2014)". பாக்சு ஆபிசு மோசோ. December 11, 2014 அன்று பார்க்கப்பட்டது.
  2. "எக்ஸோடஸ்: கோட்ஸ் அண்ட் கிங்ஸ் தமிழ் முன்னோட்டம்". பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ். December, 5, 2014 அன்று பார்க்கப்பட்டது. Check date values in: |accessdate= (உதவி)

வெளி இணைப்புகள்[தொகு]