ஊடுபயிர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

வாழைக்கு ஊடுபயிராகக் காய்கறிகளைச் சாகுபடி செய்யும் முறை[தொகு]

வாழை நடவுக்கு கார்த்திகைப்பட்டம் ஏற்றது. தேர்வு செய்த நிலத்தை நன்கு உழுது, ஒரு வாரம் காயவிட வேண்டும். பிறகு 7 அடி இடைவெளியில் குழிகள் எடுத்து சொட்டுநீர்ப்பாசனம் அமைக்க வேண்டும். ஐந்து நாட்கள் குழிகளை ஆறவிட்டு, வாழைக்கிழங்குகளை நடவு செய்து தண்ணீர் பாய்ச்ச வேண்டும். விதைத்து 15 நாட்கள் கழித்து, கிழங்கு நட்ட இடத்திலிருந்து அரை அடி தூரத்தில் குழியெடுத்து, அதில் 5 கிலோ மட்கிய சாணம் போட்டுக் குழியை மூடுதல் வேண்டும். ஒரு மாதம் கழித்து, மார்கழி பட்டத்தில் வாழைக்கன்றுகளுக்கு இடையில் காய்கறிகளை நடவு செய்யலாம்.

கத்திரி, தக்காளி ஆகியவற்றை ஒருகுத்துக்கு இரண்டு நாற்றுகளாக நடவு செய்தல் வேண்டும். கத்திரி, தக்காளி , வெண்டை, சீனிஅவரை என அடுத்தடுத்து மூன்றரை அடி இடைவெளியில் தொடர்ச்சியாக நடவேண்டும். இதனால் நோய்த் தாக்குதல்களைத் தவிர்க்கலாம்.

நடவு செய்ததில் இருந்து 15 நாட்களுக்கு ஒருமுறை சுழற்சி முறையில் "ஜீவாமிர்தம் மற்றும் மீன்அமினோ அமிலகரைசல்" ஆகியவற்றைக்கலந்து கைத்தெளிப்பானால் தெளித்துவர வேண்டும். 35 நாட்களுக்கு மேல் காய்கறிச் செடிகளில் பூக்கள் பூக்கத் தொடங்கும். 45-ஆம் நாளுக்கு மேல் பிஞ்சு பிடிக்கும். 55-ஆம் நாளுக்கு மேல் அறுவடை மேற்கொள்ளலாம்.

உசாத்துணை : பசுமை விகடன் பக்க எண் - 60 நாள் : 25.06.2017

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஊடுபயிர்&oldid=2722798" இருந்து மீள்விக்கப்பட்டது