கட்டிக் கேந்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கட்டிக் கேந்தி
Aztec Marigold Tagetes erecta.jpg
உயிரியல் வகைப்பாடு
திணை: தாவரம்
தரப்படுத்தப்படாத: பூக்கும் தாவரம்
தரப்படுத்தப்படாத: ஓர்வித்திலையி
தரப்படுத்தப்படாத: Asterids
வரிசை: Asterales
குடும்பம்: சூரியகாந்திக் குடும்பம்
பேரினம்: Tagetes
இனம்: T. erecta
இருசொற் பெயரீடு
Tagetes erecta
கரோலஸ் லின்னேயஸ்
வேறு பெயர்கள் [1]

துலுக்க சாமந்தி, அல்லது கட்டிக்கேந்தி (Tagetes erecta) சாமந்தி (Tagetes)[2] என்ற இனத்தைச் சார்ந்த இத்தாவரமானது மெக்சிக்கோ நாட்டைப் பூர்வீகமாகக் கொண்டதாகும்.[3][4] இது அமெரிக்கப்பகுதியிலிருந்து பல நாடுகளுக்கு பரவியிருந்தாலும் இதனை ஆப்பிரிக்கப் பூ என்றே அறியப்படுகிறது. மெக்சிகோவின் புவெப்லா மற்றும் வர்யாக்ரூஸ் போன்ற பகுதிகளில் பெருமளவிற்கு பயிரிடப்படுகிறது.[5]

இந்தியாவில் காணப்படும் இப்பூவின் மொட்டு

இத் தாவரம் 50 முதல் 100 செ.மீற்றர்கள் வரை வளரும் தன்மை கொண்டதாக உள்ளது. அஸ்டெக் பேரரசின் கீழ் வாழ்ந்த மக்களான அஸ்டெக்குகள் மருந்துக்காவும், திருவிழாவிற்காவும், மேலும் அலங்காரத் தாவரத்தாவரமாகவும் பயன்படுத்தியுள்ளனர்.[6] தற்போது உலகமுழுவதிலும் இத்தாவரங்கள் அலங்காரத்திற்கு பயிரிடப்படும் தாவரமாகவே உள்ளது. மேலும் இவை பெரிய அலுவலகங்களில் வரவேற்பறை அலங்காரத்திற்கும் விற்பனை செய்து பயன்படுத்தப்படுகிறது. இலங்கை மக்கள் இத்தாவரத்தை தாஸ்பதியா என்று அழைக்கிறார்கள்.[7][8]

நறுமணத் தைலங்களில் ஆப்பிள் வாசணைக்காகவும் இப்பூவின் தைலம் சேர்க்கப்படுகிறது.[9]

குறிப்புகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கட்டிக்_கேந்தி&oldid=2192907" இருந்து மீள்விக்கப்பட்டது